அசூர வளர்ச்சியில் டாடா நெக்ஸான் கார்களின் விற்பனை!! ஒரே மாதத்தில் 14 ஆயிரம் யூனிட்கள் விற்பனை!

இந்திய சந்தையில் தற்சமயம் போட்டிமிகுந்த கார் பிரிவாக சப்-4 மீட்டர் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவு உள்ளது. இந்த பிரிவில் இருந்து விற்பனை செய்யப்படும் கார்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களில் நல்லப்படியாகவே முன்னேற்றம் கண்டு வருகிறது.

அசூர வளர்ச்சியில் டாடா நெக்ஸான் கார்களின் விற்பனை!! ஒரே மாதத்தில் 14 ஆயிரம் யூனிட்கள் விற்பனை!

கடந்த 2022 மார்ச் மாதத்தில் மட்டும் மொத்தம் 55,753 சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் உண்மையில் இந்த எண்ணிக்கை 2021 மார்ச்சில் விற்கப்பட்ட சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்களின் எண்ணிக்கையை காட்டிலும் 4.23% குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 58,217 சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

அசூர வளர்ச்சியில் டாடா நெக்ஸான் கார்களின் விற்பனை!! ஒரே மாதத்தில் 14 ஆயிரம் யூனிட்கள் விற்பனை!

கடந்த மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட சப்-காம்பெக்ட் எஸ்யூவி காராக டாடா நெக்ஸான் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த மார்ச்சில் விற்பனை செய்யப்பட்டுள்ள மொத்த நெக்ஸான் கார்களின் எண்ணிக்கை 14,315 யூனிட்களாகும். ஆனால் 2021 மார்ச்சில் வெறும் 8,683 நெக்ஸான் கார்களே விற்பனையாகி இருந்தன. இந்த வகையில் டாடா நெக்ஸானின் விற்பனை சுமார் 64.86% அதிகரித்துள்ளது.

அசூர வளர்ச்சியில் டாடா நெக்ஸான் கார்களின் விற்பனை!! ஒரே மாதத்தில் 14 ஆயிரம் யூனிட்கள் விற்பனை!

மாருதி சுஸுகியின் விட்டாரா பிரெஸ்ஸா 12,439 யூனிட்களின் விற்பனை உடன் இந்த லிஸ்ட்டில் 2வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலும் 11 ஆயிரத்திற்கும் அதிகமான விட்டாரா பிரெஸ்ஸா கார்கள் விற்பனையாகி இருந்தன. இந்த வகையில், விட்டாரா பிரெஸ்ஸாவின் விற்பனை 2022 மார்ச் & 2021 மார்ச் மாதங்களுடன் ஒப்பிடுகையில் 1,165 யூனிட்கள், அதாவது 10.33% முன்னேற்றம் கண்டுள்ளது.

அசூர வளர்ச்சியில் டாடா நெக்ஸான் கார்களின் விற்பனை!! ஒரே மாதத்தில் 14 ஆயிரம் யூனிட்கள் விற்பனை!

3வது இடத்தை ஹூண்டாயின் சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரான வென்யூ தனதாக்கியுள்ளது. இருப்பினும் இம்முறை 10 ஆயிரம் யூனிட்களுக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே வென்யூ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, 2021 மார்ச்சில் 10,722 வென்யூ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதத்தில் அதனை காட்டிலும் 14.01% குறைவாக 9,220 வென்யூ கார்களே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அசூர வளர்ச்சியில் டாடா நெக்ஸான் கார்களின் விற்பனை!! ஒரே மாதத்தில் 14 ஆயிரம் யூனிட்கள் விற்பனை!

மற்றொரு தென்கொரிய சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரான கியா சொனெட் கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 6,871 யூனிட்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2021 மார்ச்சில் இதனை காட்டிலும் 19.15% அதிகமாக 8,498 யூனிட்களின் விற்பனையை சொனெட் பதிவு செய்திருந்தது. இவ்வாறு இந்த இரு தென்கொரிய மாடல்களும் கடந்த மாதத்தில் கணிசமாக விற்பனை சரிவை கண்டுள்ளன.

அசூர வளர்ச்சியில் டாடா நெக்ஸான் கார்களின் விற்பனை!! ஒரே மாதத்தில் 14 ஆயிரம் யூனிட்கள் விற்பனை!

ஆனால் நம்மூர் பிராண்டின் தயாரிப்பான மஹிந்திரா எக்ஸ்யூவி300 கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை காட்டிலும் கடந்த மாதத்தில் சுமார் 60.03% வளர்ச்சியை விற்பனையில் கண்டுள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 4,140 எக்ஸ்யூவி300 கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. ஆனால் உண்மையில் இந்த எண்ணிக்கை 4,511 எக்ஸ்யூவி300 கார்கள் விற்பனை செய்யப்பட்ட இதற்கு முந்தைய 2022 பிப்ரவரியை காட்டிலும் 8.22% குறைவாகும்.

அசூர வளர்ச்சியில் டாடா நெக்ஸான் கார்களின் விற்பனை!! ஒரே மாதத்தில் 14 ஆயிரம் யூனிட்கள் விற்பனை!

ஆனால் 2022 பிப்ரவரியில் 2,387 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்த டொயோட்டா அர்பன் க்ரூஸர் கடந்த மார்ச்சில் 3,079 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில் இந்த விட்டாரா பிரெஸ்ஸா ரீபேட்ஜ்டு வெர்சன் 28.99 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது என்றாலும், 2021 மார்ச்சில் இதனை காட்டிலும் 2.62% அதிகமாக 3,162 அர்பன் க்ரூஸர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

அசூர வளர்ச்சியில் டாடா நெக்ஸான் கார்களின் விற்பனை!! ஒரே மாதத்தில் 14 ஆயிரம் யூனிட்கள் விற்பனை!

ஒரே கூட்டணியில் உருவாக்கப்பட்ட நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கிகர் மாடல்கள் முறையே 2,942 மற்றும் 2,496 யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் மேக்னைட்டின் விற்பனை எண்ணிக்கை 2021 மார்ச்சிலும் இந்த அளவில்தான் இருந்தது என்றாலும், கிகர் கடந்த ஆண்டு மார்ச்சில் மொத்தம் 3,839 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது.

அசூர வளர்ச்சியில் டாடா நெக்ஸான் கார்களின் விற்பனை!! ஒரே மாதத்தில் 14 ஆயிரம் யூனிட்கள் விற்பனை!

இவை தவிர்த்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மற்றொரு, கடைசி சப்-காம்பெக்ட் எஸ்யூவி காராக ஹோண்டா டபிள்யூ.ஆர்.வி சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஹோண்டா சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார் கடந்த மார்ச்சில் வெறும் 251 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பரவாயில்லை, 978 யூனிட்கள் டபிள்யூ.ஆர்.வி விற்பனை செய்யப்பட்டிருந்தது.

More from DriveSpark

Article Published On: Friday, April 8, 2022, 11:23 [IST]
English summary
Top 10 sub 4m suv sales mar 2022 tata nexon leads
மேலும்... #விற்பனை #sales
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+