டாடா நெக்ஸானுக்கு விற்பனை அள்ளுது!! தற்சமயம் அதிகம் விற்பனையாகும் டாப்-10 சப் 4மீ எஸ்யூவி கார்கள்!
இந்தியாவில் கடந்த சில வருடங்களில் எஸ்யூவி கார்களுக்கான சந்தை நல்லப்படியாக முன்னேற்றம் கண்டுள்ளன என்பதை பற்றி கூற வேண்டிய அவசியம் இருக்காது என்றே நினைக்கிறேன். ஏனெனில் இப்போதைய மாடர்ன் வாடிக்கையாளர்கள் கம்பீரமான, நிமிர்ந்த தோற்றம் கொண்ட எஸ்யூவி கார்களில் பயணிக்கவே விரும்புகின்றனர்.

ஆனால் இந்தியா இன்னும் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாகவே உள்ளதால், குறைந்த விலையிலான கார்களை வாங்குவோரே நம் நாட்டில் உள்ளனர். அத்தகையவர்களை கவர்வதற்காகவே அளவில் சற்று சிறிய எஸ்யூவி கார்கள் பிராண்டிற்கு குறைந்தப்பட்சம் ஒன்றாவது உள்ளது. இத்தகைய எஸ்யூவி கார்கள் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் (அ) சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்கள் என அழைக்கப்படுகின்றன.

அதாவது இவற்றின் நீளம் 4 மீட்டர்களுக்கும் குறைவாகவே இருக்கும். ஆரம்பத்தில், இந்த எஸ்யூவி கார் பிரிவில் மாருதி சுஸுகி & ஹூண்டாயின் ஆதிக்கமாக இருந்தது. இந்த பிராண்ட்களின் விட்டாரா பிரெஸ்ஸா & வென்யூ மாடல்கள் விற்பனையில் முதலிடத்தை பிடிக்க ஒன்றொன்றோடு ஒன்று போட்டி போட்ட வண்ணம் இருந்தன. ஆனால் கடந்த சில மாதங்களாக டாடா நெக்ஸானின் ஆதிக்கம் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது.

காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் மட்டுமின்றி, மொத்த எஸ்யூவி கார்களின் விற்பனையில் நெக்ஸான் தான் தற்சமயம் முதலிடத்தை வகித்து வருகிறது. 2019இல் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட டாடா நெக்ஸான் கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 12,259 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2021 பிப்ரவரியில் வெறும் 7,929 நெக்ஸான் கார்களே விற்கப்பட்டு இருந்தன. இந்த வகையில் நெக்ஸானின் விற்பனை சுமார் 54.61% அதிகரித்துள்ளது.

| Rank | Sub 4m SUVs | Feb'22 | Feb'21 | Growth (%) |
| 1 | Nexon | 12,259 | 7,929 | 54.61 |
| 2 | Venue | 10,212 | 11,224 | -9.02 |
| 3 | Brezza | 9,256 | 11,585 | -20.10 |
| 4 | Sonet | 6,154 | 7,997 | -23.05 |
| 5 | XUV300 | 4,511 | 3,174 | 42.12 |
| 6 | Urban Cruiser | 2,387 | 2,549 | -6.36 |
| 7 | Kiger | 2,247 | 3,226 | - |
| 8 | Magnite | 2,059 | 2,991 | -31.16 |
| 9 | WRV | 489 | 1,004 | -51.29 |
| 10 | EcoSport | 0 | 3,171 | -100.00 |
| - | Total | 49,574 | 54,850 | -9.62 |
குறைக்கடத்திகளின் உலகளாவிய பற்றாக்குறையால் கடந்த மாதத்தில் மற்ற அனைத்து காம்பெக்ட் எஸ்யூவி கார்களின் (மஹிந்திரா எக்ஸ்யூவி300 -ஐ தவிர்த்து) விற்பனையும் 2021 பிப்ரவரியை காட்டிலும் கடந்த மாதத்தில் வெகுவாக குறைந்துள்ளது. ஆனால் நெக்ஸானின் விற்பனை மட்டும் ஏறக்குறைய இரட்டிப்பாகி உள்ளது. இதில் இருந்து நெக்ஸானிற்கு தற்சமயம் எத்தகைய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதை அறியலாம். மொத்தம் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனை எண்ணிக்கையில் நெக்ஸான் 24.73 சதவீத பங்கை ஆக்கிரமித்துள்ளது.

நெக்ஸானிற்கு அடுத்து 2 வது இடத்தை ஹூண்டாயின் காம்பெக்ட் எஸ்யூவி மாடலான வென்யூ 10,212 யூனிட்களின் விற்பனை உடன் பிடித்துள்ளது. ஆனால் 2021 பிப்ரவரியில் இதனை காட்டிலும் 9.02% அதிகமாக 11,224 வென்யூ கார்களை ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது. வென்யூவின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் தற்சமயம் வடிவமைப்பு பணிகளில் உள்ளது. இதற்கு அடுத்து மூன்றாவது இடத்தில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா உள்ளது.

இந்த மாருதி காம்பெக்ட் எஸ்யூவி கார் கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 9,256 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு பிப்ரவரியில் வென்யூவை காட்டிலும் சில நூறு யூனிட்கள் அதிகமாக 11,585 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இந்த டாப்-10 லிஸ்ட்டில் விட்டாரா பிரெஸ்ஸா முதலிடத்தை பிடித்திருந்தது. இந்த வகையில் இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரின் விற்பனை 20.10% குறைந்துள்ளது.

இவற்றிற்கு அடுத்து 4வது மற்றும் 5வது இடங்களில் கியா சொனெட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 மாடல்கள் உள்ளன. இதில் கடந்த மாதத்தில் 6.154 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள கியா காம்பெக்ட் எஸ்யூவி காரின் விற்பனை 2021 பிப்ரவரியை காட்டிலும் 23.05% குறைந்திருந்தாலும், ஏற்கனவே கூறியதுபோல் நெக்ஸானிற்கு அடுத்து இந்த லிஸ்ட்டில் நேர்மறையான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ள மற்றொரு சப் 4மீ எஸ்யூவி மாடல் எக்ஸ்யூவி300 ஆகும்.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் 3,174 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த இந்த மஹிந்திரா காம்பெக்ட் எஸ்யூவி கார் கடந்த பிப்ரவரியில் அதனை காட்டிலும் சுமார் 42.12% அதிகமாக 4,511 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 6, 7 மற்றும் 8வது இடங்களில் முறையே டொயோட்டா அர்பன் க்ரூஸர், ரெனால்ட் கிகர் மற்றும் நிஸான் மேக்னைட் கார்கள் ஏறக்குறைய ஒரே மாதிரியான விற்பனை எண்ணிக்கைகளுடன் உள்ளன.


Click it and Unblock the Notifications








