மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?

மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?

இந்தியாவை சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று மஹிந்திரா. நடப்பாண்டு மே மாதம் இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் மஹிந்திரா 4வது இடத்தை பிடித்துள்ளது. கியா நிறுவனத்தை காட்டிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கை அதிக கார்களை விற்பனை செய்ததன் மூலம், மஹிந்திரா நிறுவனத்திற்கு 4வது இடம் கிடைத்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?

முதல் 3 இடங்களை முறையே மாருதி சுஸுகி, டாடா மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் பிடித்துள்ள நிலையில் மஹிந்திரா நிறுவனம் 4வது இடத்தையும், கியா நிறுவனம் 5வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்த செய்தியில், நடப்பாண்டு ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனையான டாப்-3 மஹிந்திரா கார்கள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?

மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero)

இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் சிறப்பான விற்பனை எண்ணிக்கைக்கு தொடர்ந்து பல காலமாக மஹிந்திரா பொலிரோ தனது பங்களிப்பை வழங்கி வருகிறது. இது தற்போதும் தொடர்கிறது. நடப்பாண்டு மே மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா கார்களின் பட்டியலில் பொலிரோ முதல் இடத்தை பிடித்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?

மஹிந்திரா நிறுவனம் நடப்பாண்டு மே மாதம் 8,767 பொலிரோ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் மஹிந்திரா நிறுவனம் வெறும் 3,517 பொலிரோ கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் மஹிந்திரா பொலிரோ விற்பனையில் 149 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?

மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700)

நடப்பாண்டு மே மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா கார்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது எக்ஸ்யூவி700. மஹிந்திரா நிறுவனம் 5,069 எக்ஸ்யூவி700 கார்களை நடப்பாண்டு மே மாதம் விற்பனை செய்துள்ளது. இந்திய சந்தையில் தற்போது மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு உச்சகட்ட வரவேற்பு காணப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் வேரியண்ட்களை பொறுத்து, காத்திருப்பு காலம் ஒரு ஆண்டுக்கும் மேலாக இருந்து வருவதே இதற்கு சாட்சி. ஆனால் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் மிக நீண்ட காத்திருப்பு காலத்திற்கு செமிகண்டக்டர் சிப்கள் சப்ளையில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையும் ஒரு முக்கியமான காரணம் என்பதை மறுக்க முடியாது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?

டிமாண்ட் மிக அதிக அளவில் உள்ள நிலையில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்னை மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் வாடிக்கையாளர்கள் டெலிவரியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ள ஒரு சில 'மேட் இன் இந்தியா' கார்களில் ஒன்றாகும். சந்தையில் இந்த காருக்கு இருக்கும் தேவைக்கு இதுவும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?

மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300)

நடப்பாண்டு மே மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா கார்களின் பட்டியலில், எக்ஸ்யூவி300 நூலிழையில் இரண்டாவது இடத்தை தவற விட்டுள்ளது. மஹிந்திரா நிறுவனம் நடப்பாண்டு மே மாதம் இந்திய சந்தையில் 5,022 எக்ஸ்யூவி300 கார்களை விற்பனை செய்துள்ளது. இரண்டாவது இடம் பிடித்த மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கும், மூன்றாவது இடம் பிடித்த மஹிந்திரா எக்ஸ்யூவி300 காருக்கும் இடையேயான வித்தியாசம் வெறும் 47 மட்டுமே.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?

அதே நேரத்தில் மஹிந்திரா நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் இந்திய சந்தையில் வெறும் 251 எக்ஸ்யூவி300 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 5,022 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் 1,901 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?

கோவிட்-19 பிரச்னை காரணமாக கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் கார் விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் விற்பனை கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் மிகவும் குறைவாகவும், நடப்பாண்டு மே மாதம் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலும் உள்ளது. இந்த காரும் கூட, குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?

அடுத்ததாக மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ-என் (Mahindra Scorpio-N) காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. கடந்த சில நாட்களாக பேசு பொருளாக மாறியுள்ள மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் வரும் ஜூன் 27ம் தேதி (நாளை மறு தினம்) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளதால், மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரும் விற்பனையில் சாதிக்கலாம்.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Top 3 mahindra cars sold in may 2022 bolero leads chart
Story first published: Saturday, June 25, 2022, 21:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X