அதிகம் விற்பனையாகும் டாப் 3 காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் பட்டியல்! மூன்றில் 2இடங்களை ஆக்கிரமித்த டாடா கார்கள்!

அதிகம் விற்பனையாகும் டாப் மூன்று காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் பற்றிய தகவலை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவைகுறித்த விரிவான தகவலைக் காணலாம்.

அதிகம் விற்பனையாகும் டாப் 3 காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் பட்டியல்... மூன்றில் 2 இடங்களை ஆக்கிரமித்த டாடா தயாரிப்புகள்!

இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கு எப்போதும் டிமாண்ட் அதிகம். அதிலும், காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் மாடல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. ஒவ்வொரு மாதமும் வெளியாகும் இந்திய கார் விற்பனை குறித்த தகவலும் இதையே உறுதிப்படுத்துகின்றன.

அதிகம் விற்பனையாகும் டாப் 3 காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் பட்டியல்... மூன்றில் 2 இடங்களை ஆக்கிரமித்த டாடா தயாரிப்புகள்!

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதத்தில் அதிகம் விற்பனையாகிய காம்பேக்ட் எஸ்யூவி கார் எது என்பது பற்றிய தகவலும் வெளியாகியிருக்கின்றது. இதுகுறித்த தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். 2022 ஜனவரியில் அதிகம் விற்பனையாகிய மூன்று காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் பற்றிய தகவலே இந்த தகவலில் கொடுத்திருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

அதிகம் விற்பனையாகும் டாப் 3 காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் பட்டியல்... மூன்றில் 2 இடங்களை ஆக்கிரமித்த டாடா தயாரிப்புகள்!

டாடா நெக்ஸான் (Tata Nexon)

டாடா நெக்ஸான் ஓர் ஐந்து நட்சத்திர ரேட்டிங் பெற்ற கார் மாடலாகும். ஆகையால், இந்தியான் மிக அதிக பாதுகாப்பான கார் மாடல்களில் இதுவும் ஒன்றாக காட்சியளிக்கின்றது. இக்காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம், எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இத்துடன், மிக விரைவில் சிஎன்ஜி தேர்விலும் நெக்ஸானைக் களமிறக்குவதற்கான பணிகளில் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் விற்பனையாகும் டாப் 3 காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் பட்டியல்... மூன்றில் 2 இடங்களை ஆக்கிரமித்த டாடா தயாரிப்புகள்!

நாட்டு மக்கள் மத்தியில் நெக்ஸானுக்கு நல்ல வரவேற்பு நிலவி வருவதன் காரணத்தினாலேயே இதுபோன்று பன்முக வெர்ஷன்களில் டாடா களமிறக்கி வருகின்றது. இக்காருக்கு எப்படிப்பட்ட வரவேற்புக் கிடைக்கின்றது என்றால், ஒரே மாதத்தில் 13,816 யூனிட் வரை விற்பனையாகின்ற அளவிற்கு மிக தற்போது மிக சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகின்றது.

அதிகம் விற்பனையாகும் டாப் 3 காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் பட்டியல்... மூன்றில் 2 இடங்களை ஆக்கிரமித்த டாடா தயாரிப்புகள்!

இந்த விற்பனை எண்ணிக்கை 2022 ஜனவரி மாதத்துடையதாகும். கடந்த 2021ம் ஆண்டு ஜனவரியைக் காட்டிலும் இது மிக அதிக விற்பனை எண்ணிக்கை என நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் 68 சதவீதம் விற்பனை வளர்ச்சியை நெக்ஸான் 2022 ஜனவரியில் பெற்றிருக்கின்றது.

அதிகம் விற்பனையாகும் டாப் 3 காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் பட்டியல்... மூன்றில் 2 இடங்களை ஆக்கிரமித்த டாடா தயாரிப்புகள்!

2022 ஜனவரியில் 8,225 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. அதிகபட்ச விற்பனை எண்ணிக்கையை பெற்றிருப்பதனால் காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவின் தலைவனாக டாடா நெக்ஸான் மாறியிருக்கின்றது. ஆம், நம்பர்1 அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்யூவி காராக நெக்ஸான் மாறியிருக்கின்றது.

அதிகம் விற்பனையாகும் டாப் 3 காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் பட்டியல்... மூன்றில் 2 இடங்களை ஆக்கிரமித்த டாடா தயாரிப்புகள்!

ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue)

டாடா நெக்ஸான் கார் மாடலுக்கு அடுத்தபடியாக காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவில் அதிகம் விற்பனையாகும் வாகனமாக ஹூண்டாய் வென்யூ இருக்கின்றது. அதிகம் பிரீமியம் தர வசதிகள் கொண்ட இந்த கார் கடந்த 2022 ஜனவரி மாதத்தில் 11,377 யூனிட் வரை விற்பனையாகியிருக்கின்றது.

அதிகம் விற்பனையாகும் டாப் 3 காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் பட்டியல்... மூன்றில் 2 இடங்களை ஆக்கிரமித்த டாடா தயாரிப்புகள்!

கணிசமான விற்பனை இழப்பைச் சந்தித்தும் இக்கார் இந்த இரண்டாம் இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. ஆம், ஹூண்டாய் வென்யூ முந்தைய 2021ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் அதிகபட்சமாக 11,779 யூனிட் வரை விற்பனையாகியிருந்தது.

அதிகம் விற்பனையாகும் டாப் 3 காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் பட்டியல்... மூன்றில் 2 இடங்களை ஆக்கிரமித்த டாடா தயாரிப்புகள்!

இதைக்காட்டிலும் 3 சதவீத குறைவான விற்பனையையே நடப்பாண்டு ஜனவரியில் ஹூண்டாய் வென்யூ பெற்றிருக்கின்றது. இருப்பினும், காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவில் இரண்டாவது இடத்தையும், ஒட்டுமொத்த கார் விற்பனையில் நாட்டின் அதிகம் விற்பனையாகும் கார்கள் பட்டியலில் 8வது இடத்தையும் வென்யூ பிடித்துள்ளது. சிப் பற்றாக்குறை காரணத்தினாலேயே இக்கார் விற்பனை குறைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் விற்பனையாகும் டாப் 3 காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் பட்டியல்... மூன்றில் 2 இடங்களை ஆக்கிரமித்த டாடா தயாரிப்புகள்!

டாடா பஞ்ச் (Tata Punch)

டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கும் அதிக பாதுகாப்பான கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். ஆம், இக்காரும் ஐந்து நட்சத்திர ரேட்டிங்கை பெற்ற வாகனம் ஆகும். இது ஓர் விலைக் குறைவான காரும்கூட. ஒட்டுமொத்தமாக 10,027 யூனிட் வரை 2022 ஜனவரியில் இக்கார் விற்பனையாகி இருக்கின்றது.

அதிகம் விற்பனையாகும் டாப் 3 காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் பட்டியல்... மூன்றில் 2 இடங்களை ஆக்கிரமித்த டாடா தயாரிப்புகள்!

ஆகையால், மிக சிறப்பான விற்பனையாகும் காராக இது மாறியிருக்கின்றது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த காரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. விற்பனைக்கு வந்த மிகக் குறுகிய கால இடைவெளியிலேயே காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவில் 3வது இடத்தை பிடித்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, February 7, 2022, 10:57 [IST]
English summary
Top 3 selling compact suv cars in india in january 2022
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+