புது கார் வாங்கற ஐடியால இருக்கீங்களா? இன்னும் கொஞ்ச நாள்ல சூப்பர் சூப்பரான மாடல்லாம் வரப்போகுது!

இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புது கார் வாங்கற ஐடியால இருக்கீங்களா? இன்னும் கொஞ்ச நாள்ல சூப்பர் சூப்பரான மாடல்லாம் வரப்போகுது!

இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட் சவால் நிறைந்தது. இந்த செக்மெண்ட்டில் நிறைய கார்கள் போட்டியிட்டு வருகின்றன. போட்டி கடுமையாகி கொண்டே வருவதால், மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் ஆகிய 2 நிறுவனங்களும் வெகு சமீபத்தில் முறையே தங்களது பிரெஸ்ஸா மற்றும் வெனியூ கார்களின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடல்களை விற்பனைக்கு கொண்டு வந்தன.

புது கார் வாங்கற ஐடியால இருக்கீங்களா? இன்னும் கொஞ்ச நாள்ல சூப்பர் சூப்பரான மாடல்லாம் வரப்போகுது!

இதை தொடர்ந்து இன்னும் பல்வேறு நிறுவனங்களும் இந்த செக்மெண்ட்டில் புதிய மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு தயாராகி வருகின்றன. இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ள 3 புதிய மாடல்கள் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

புது கார் வாங்கற ஐடியால இருக்கீங்களா? இன்னும் கொஞ்ச நாள்ல சூப்பர் சூப்பரான மாடல்லாம் வரப்போகுது!

ஹூண்டாய் வெனியூ என் லைன் (Hyundai Venue N Line)

வெனியூ காரின் என் லைன் மாடல் இந்திய சந்தையில் வரும் செப்டம்பர் 6ம் தேதி (September 6) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என ஹூண்டாய் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது ஹூண்டாய் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்கள் மூலமாகவோ வெனியூ என் லைன் மாடலை முன்பதிவு செய்ய முடியும்.

புது கார் வாங்கற ஐடியால இருக்கீங்களா? இன்னும் கொஞ்ச நாள்ல சூப்பர் சூப்பரான மாடல்லாம் வரப்போகுது!

முன்பதிவு தொகை 21 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹூண்டாய் வெனியூ என் லைன் மாடலில் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டிருக்கும். இந்த இன்ஜினுடன் டிசிடி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கும். ஹூண்டாய் வெனியூ என் லைன் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

புது கார் வாங்கற ஐடியால இருக்கீங்களா? இன்னும் கொஞ்ச நாள்ல சூப்பர் சூப்பரான மாடல்லாம் வரப்போகுது!

கியா சொனெட் எக்ஸ் லைன் (Kia Sonet X Line)

ஹூண்டாய் நிறுவனம் தங்களது கார்களின் என் லைன் மாடல்களை விற்பனை செய்வதை போல, கியா நிறுவனம் தங்களது கார்களில் எக்ஸ் லைன் மாடல்களை விற்பனை செய்து கொண்டுள்ளது. இதன்படி சொனெட் காரின் எக்ஸ் லைன் மாடல் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பதை கியா நிறுவனம் அறிவித்துள்ளது.

புது கார் வாங்கற ஐடியால இருக்கீங்களா? இன்னும் கொஞ்ச நாள்ல சூப்பர் சூப்பரான மாடல்லாம் வரப்போகுது!

தற்போது கியா சொனெட் எக்ஸ் லைன் மாடலின் டீசர்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. கியா சொனெட் எக்ஸ் லைன் மாடலில், 1.5 லிட்டர் டர்போ டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினுடன் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனும், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்படலாம்.

புது கார் வாங்கற ஐடியால இருக்கீங்களா? இன்னும் கொஞ்ச நாள்ல சூப்பர் சூப்பரான மாடல்லாம் வரப்போகுது!

இதில், 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 113 பிஹெச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே நேரத்தில் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 118 பிஹெச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த புதிய மாடலின் அறிமுக தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. என்றாலும் கூடிய விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும்.

புது கார் வாங்கற ஐடியால இருக்கீங்களா? இன்னும் கொஞ்ச நாள்ல சூப்பர் சூப்பரான மாடல்லாம் வரப்போகுது!

2022 மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபேஸ்லிஃப்ட் (2022 Mahindra XUV300 Facelift)

வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக, எக்ஸ்யூவி300 காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலை மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் டி-ஜிடிஐ எம்ஸ்டாலியன் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

புது கார் வாங்கற ஐடியால இருக்கீங்களா? இன்னும் கொஞ்ச நாள்ல சூப்பர் சூப்பரான மாடல்லாம் வரப்போகுது!

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 130 பிஹெச்பி பவரையும், 230 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம். தற்போது வழங்கப்பட்டு வரும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் ஒப்பிடுகையில் இது 20 பிஹெச்பி மற்றும் 30 என்எம் அதிகம் ஆகும். டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.

புது கார் வாங்கற ஐடியால இருக்கீங்களா? இன்னும் கொஞ்ச நாள்ல சூப்பர் சூப்பரான மாடல்லாம் வரப்போகுது!

மஹிந்திரா எக்ஸ்யூவி300, குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் வாங்கிய ஒரு சில மேட் இன் இந்தியா கார்களில் ஒன்றாகும். இதன் காரணமாக இந்த கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக திகழ்கிறது. இந்த சூழலில், ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகைக்கு பின் மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, August 29, 2022, 18:39 [IST]
English summary
Top 3 upcoming sub 4 meter compact suv s in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+