டாடா, மஹிந்திராவின் கை ஓங்குது... அடிச்சு தூள் கௌப்பீட்டு இருக்காங்க... இதுலாம் வேற லெவல் சம்பவம்!

இந்திய சந்தையில் கார் விற்பனையில் டாடா, மஹிந்திரா நிறுவனங்களின் கை ஓங்கி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா, மஹிந்திராவின் கை ஓங்குது... அடிச்சு தூள் கௌப்பீட்டு இருக்காங்க... இதுலாம் வேற லெவல் சம்பவம்!

இந்திய சந்தையில் கடந்த ஜூலை மாதம் அதிக கார்களை விற்பனை செய்த டாப்-5 நிறுவனங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் வழக்கம் போல முதலிடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. நடப்பாண்டு ஜூலை மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 1,29,802 கார்களை விற்பனை செய்துள்ளது.

டாடா, மஹிந்திராவின் கை ஓங்குது... அடிச்சு தூள் கௌப்பீட்டு இருக்காங்க... இதுலாம் வேற லெவல் சம்பவம்!

ஆனால் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த எண்ணிக்கை 1,23,675 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் மாருதி சுஸுகி நிறுவனம் கார் விற்பனையில் 5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. பலேனோ, எர்டிகா மற்றும் பிரெஸ்ஸா உள்ளிட்ட பல்வேறு கார்களின் புதிய மாடல்களை நடப்பாண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்த நிலையில், ஆல்டோ போன்ற இன்னும் பல்வேறு கார்களின் புதிய மாடல்களையும் மாருதி சுஸுகி நிறுவனம் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.

டாடா, மஹிந்திராவின் கை ஓங்குது... அடிச்சு தூள் கௌப்பீட்டு இருக்காங்க... இதுலாம் வேற லெவல் சம்பவம்!

இதற்கிடையே இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள ஹூண்டாய் (Hyundai) நிறுவனமும் விற்பனையில் 5 சதவீத வளர்ச்சியைதான் பதிவு செய்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 48,042 ஆக இருந்த ஹூண்டாய் கார்களின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை, நடப்பாண்டு ஜூலை மாதம் 50,500 ஆக உயர்ந்துள்ளது.

டாடா, மஹிந்திராவின் கை ஓங்குது... அடிச்சு தூள் கௌப்பீட்டு இருக்காங்க... இதுலாம் வேற லெவல் சம்பவம்!

ஹூண்டாய் நிறுவனம் நடப்பாண்டு வெனியூ போன்ற கார்களின் புதிய மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்த நிலையில், இதற்கு அடுத்தபடியாக டூஸான் போன்ற கார்களின் புதிய மாடல்களையும் விரைவில் விற்பனைக்கு களமிறக்கவுள்ளது. இதற்கிடையே இந்த பட்டியலில் டாடா (Tata) நிறுவனம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

டாடா, மஹிந்திராவின் கை ஓங்குது... அடிச்சு தூள் கௌப்பீட்டு இருக்காங்க... இதுலாம் வேற லெவல் சம்பவம்!

இந்திய சந்தையில் சமீப காலமாக டாடா நிறுவன கார்களின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இதன் மூலம் இரண்டாவது இடத்தில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்திற்கு மிக கடுமையான நெருக்கடியை டாடா நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. டாடா நிறுவனத்தின் சிறப்பான கார் விற்பனை நடப்பாண்டு ஜூலை மாதமும் தொடர்ந்துள்ளது.

டாடா, மஹிந்திராவின் கை ஓங்குது... அடிச்சு தூள் கௌப்பீட்டு இருக்காங்க... இதுலாம் வேற லெவல் சம்பவம்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் வெறும் 30,184 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலை மாதம் 47,506 ஆக உயர்ந்துள்ளது. இது 57 சதவீத வளர்ச்சியாகும். டாடா நிறுவனம் இந்த பட்டியலில் 3வது இடத்தில் இருந்தாலும், சதவீத அடிப்படையிலான வளர்ச்சியில் முதலிடத்தில் உள்ளது.

டாடா, மஹிந்திராவின் கை ஓங்குது... அடிச்சு தூள் கௌப்பீட்டு இருக்காங்க... இதுலாம் வேற லெவல் சம்பவம்!

அதாவது இந்த பட்டியலில் உள்ள வேறு எந்த நிறுவனமும் டாடா நிறுவனத்தின் அளவிற்கு விற்பனையில் மிகவும் அதிகமான வளர்ச்சியை பதிவு செய்யவில்லை. வளர்ச்சி சதவீத அடிப்படையில் கணக்கிட்டால், டாடாவிற்கே முதலிடம். டாடா நிறுவனம் கார் விற்பனையில் மிகவும் வேகமாக முன்னேறி கொண்டிருப்பதையே இது காட்டுகிறது.

டாடா, மஹிந்திராவின் கை ஓங்குது... அடிச்சு தூள் கௌப்பீட்டு இருக்காங்க... இதுலாம் வேற லெவல் சம்பவம்!

டாடா நிறுவனத்தின் நெக்ஸான், புதுவரவான பன்ச் போன்ற பாதுகாப்பான கார்களுக்கு கிடைத்துள்ள பிரம்மாண்டமான வரவேற்பே இதற்கு காரணம். இதற்கிடையே இந்த பட்டியலில் மஹிந்திரா (Mahindra) நிறுவனம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 17,595 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

டாடா, மஹிந்திராவின் கை ஓங்குது... அடிச்சு தூள் கௌப்பீட்டு இருக்காங்க... இதுலாம் வேற லெவல் சம்பவம்!

ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலை மாதம் 24,238 ஆக உயர்ந்துள்ளது. இது 38 சதவீத வளர்ச்சியாகும். வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் உயரலாம். ஏனெனில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமுறை தார், எக்ஸ்யூவி700 ஆகிய கார்களுக்கு இந்தியாவில் உச்சகட்ட வரவேற்பு கிடைத்துள்ளது.

டாடா, மஹிந்திராவின் கை ஓங்குது... அடிச்சு தூள் கௌப்பீட்டு இருக்காங்க... இதுலாம் வேற லெவல் சம்பவம்!

ஆனால் அதை விட பிரம்மாண்டமான வரவேற்பை மஹிந்திரா நிறுவனத்தின் புதிய ஸ்கார்பியோ-என் காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் வழங்கி வருகின்றனர். இந்த அளவிற்கான வரவேற்பை மஹிந்திரா நிறுவனமே எதிர்பார்த்திருக்குமா? என்பது தெரியவில்லை. எனவே வரும் காலங்களில் மஹிந்திரா நிறுவனம் விற்பனையில் பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.

டாடா, மஹிந்திராவின் கை ஓங்குது... அடிச்சு தூள் கௌப்பீட்டு இருக்காங்க... இதுலாம் வேற லெவல் சம்பவம்!

இதற்கிடையே இந்த பட்டியலில் 5வது மற்றும் கடைசி இடத்தை கியா (Kia) நிறுவனம் பிடித்துள்ளது. கியா நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் 15,016 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலை மாதம் 22,022 ஆக உயர்ந்துள்ளது. இது 47 சதவீத வளர்ச்சியாகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 3, 2022, 0:02 [IST]
English summary
Top 5 best selling car brands in india july 2022
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+