விற்பனையில் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்த கார்களின் பட்டியல்... இந்த காருக்குதான் முதலிடமா!

இந்திய சந்தையில் நடப்பாண்டு ஜூன் மாதம் விற்பனையில் மிகவும் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்த டாப்-5 கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விற்பனையில் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்த கார்களின் பட்டியல்... இந்த காருக்குதான் முதலிடமா!

இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் விற்பனையில் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்த டாப்-5 கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் தற்போதைய நிலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஒரு சில எலெக்ட்ரிக் கார்களில் இதுவும் ஒன்றாகும்.

விற்பனையில் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்த கார்களின் பட்டியல்... இந்த காருக்குதான் முதலிடமா!

ஹூண்டாய் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய சந்தையில் வெறும் 7 கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் 179 ஆக உயர்ந்துள்ளது. இது 2,457 சதவீத வளர்ச்சியாகும். ஹூண்டாய் நிறுவனம் வெகு விரைவில் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது.

விற்பனையில் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்த கார்களின் பட்டியல்... இந்த காருக்குதான் முதலிடமா!

இதற்கிடையே இந்த பட்டியலில் மாருதி சுஸுகி செலிரியோ இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் வெறும் 752 செலிரியோ கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு ஜூன் மாதம் இந்த எண்ணிக்கை 8,683 ஆக உயர்ந்துள்ளது. இது 1,055 சதவீத வளர்ச்சியாகும்.

விற்பனையில் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்த கார்களின் பட்டியல்... இந்த காருக்குதான் முதலிடமா!

மாருதி சுஸுகி நிறுவனம் செலிரியோ காரின் புதிய தலைமுறை மாடல் மற்றும் புதிய சிஎன்ஜி மாடல் ஆகியவற்றை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்ததுதான் இந்த மிக பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு முக்கியமான காரணமாக உள்ளது. இதற்கிடையே இந்த பட்டியலில் டொயோட்டா ஃபார்ச்சூனர் 3வது இடத்தை பிடித்துள்ளது.

விற்பனையில் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்த கார்களின் பட்டியல்... இந்த காருக்குதான் முதலிடமா!

டொயோட்டா நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் வெறும் 549 ஃபார்ச்சூனர் எஸ்யூவி கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் 3,133 ஆக உயர்ந்துள்ளது. இது 471 சதவீத வளர்ச்சியாகும். டொயோட்டா நிறுவனம் வெகு விரைவில் ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விற்பனையில் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்த கார்களின் பட்டியல்... இந்த காருக்குதான் முதலிடமா!

இந்த புதிய மாடல் விற்பனைக்கு வந்த பின், எம்ஜி க்ளோஸ்ட்டர் மற்றும் ஜீப் மெரிடியன் போன்ற மிக முக்கியமான போட்டியாளர்களுக்கு விற்பனையில் இன்னும் கடுமையான நெருக்கடி ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கிடையே இந்த பட்டியலில் டாடா டிகோர் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெறும் 1,076 டிகோர் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

விற்பனையில் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்த கார்களின் பட்டியல்... இந்த காருக்குதான் முதலிடமா!

ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் 4,931 ஆக உயர்ந்துள்ளது. இது 358 சதவீத வளர்ச்சியாகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிகோர் காரின் ஐசி இன்ஜின் மாடல் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் வெர்ஷனையும் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அத்துடன் டாடா டிகோர் காரின் சிஎன்ஜி மாடலும் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கிறது.

விற்பனையில் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்த கார்களின் பட்டியல்... இந்த காருக்குதான் முதலிடமா!

இதன் மூலம் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் டிகோர் பக்கம் இழுக்க முடிகிறது. இதுவே டாடா டிகோர் காரின் பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். டாடா டிகோர் கார் மிகவும் பாதுகாப்பான கார்களில் ஒன்று என்பதும் இங்கே கவனிக்க வேண்டிய விஷயமாகும்.

விற்பனையில் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்த கார்களின் பட்டியல்... இந்த காருக்குதான் முதலிடமா!

குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் டாடா டிகோர் கார் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. அத்துடன் சாலை விபத்துக்களில் இருந்து பல முறை பயணிகளின் உயிரையும் டாடா டிகோர் கார் காப்பாற்றியுள்ளது. இந்த பாதுகாப்பு அம்சங்களும் டாடா டிகோர் காரை வாடிக்கையாளர்கள் 'டிக்' அடிப்பதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.

விற்பனையில் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்த கார்களின் பட்டியல்... இந்த காருக்குதான் முதலிடமா!

இதற்கிடையே இந்த பட்டியலில் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 கார் ஐந்தாவது மற்றும் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள 2வது ஃபுல்-சைஸ் எஸ்யூவி கார் இதுவாகும். மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரானது, டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் மிக நெருக்கமான போட்டி மாடல்களில் ஒன்றாகும்.

விற்பனையில் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்த கார்களின் பட்டியல்... இந்த காருக்குதான் முதலிடமா!

மஹிந்திரா நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் வெறும் 16 அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் 65 ஆக உயர்ந்துள்ளது. இது 306 சதவீத வளர்ச்சியாகும். இதன் மூலம் இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 தன்வசமாக்கியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, July 18, 2022, 8:43 [IST]
English summary
Top 5 cars with highest growth in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+