பீட் பண்ண முடியாத பீஸ்ட்... டொயோட்டா ஃபார்ச்சூனர் செய்த தரமான சம்பவம்... சாதாரண காரா இது?

டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் தரமான சம்பவம் ஒன்றை செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பீட் பண்ண முடியாத பீஸ்ட்... டொயோட்டா ஃபார்ச்சூனர் செய்த தரமான சம்பவம்... சாதாரண காரா இது?

இந்தியாவில் தற்போது எஸ்யூவி கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி, மிட்-சைஸ் எஸ்யூவி மற்றும் ஃபுல்-சைஸ் எஸ்யூவி என எஸ்யூவி ரகத்தின் அனைத்து செக்மெண்ட்களிலும் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் விற்பனைதான் மிகவும் பிரமாதப்படுத்தி கொண்டுள்ளது.

பீட் பண்ண முடியாத பீஸ்ட்... டொயோட்டா ஃபார்ச்சூனர் செய்த தரமான சம்பவம்... சாதாரண காரா இது?

இந்த செக்மெண்ட்டை சேர்ந்த கார்கள் குறைவான விலையில் கிடைப்பதுதான் இதற்கு மிக முக்கியமான காரணம். அதேபோல் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டிலும் விற்பனை சிறப்பாக இருக்கிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருப்பதால், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன் போன்ற புதிய கார்கள் இந்த செக்மெண்ட்டில் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பீட் பண்ண முடியாத பீஸ்ட்... டொயோட்டா ஃபார்ச்சூனர் செய்த தரமான சம்பவம்... சாதாரண காரா இது?

இந்த வரிசையில் ஃபுல்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டிலும் விற்பனை சிறப்பாக இருக்கிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர் ஆதிக்கம் செலுத்தும் இந்த செக்மெண்ட்டில், நடப்பாண்டு மார்ச் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-5 கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் டொயோட்டா ஃபார்ச்சூனர்தான் முழுமையாக ஆதிக்கம் செலுத்துகிறது.

பீட் பண்ண முடியாத பீஸ்ட்... டொயோட்டா ஃபார்ச்சூனர் செய்த தரமான சம்பவம்... சாதாரண காரா இது?

நடப்பாண்டு மார்ச் மாதம் டொயோட்டா நிறுவனம் 2,984 ஃபார்ச்சூனர் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 2,136 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் 39.70 சதவீதம் என்ற மிக பிரம்மாண்டமான விற்பனை வளர்ச்சியை பதிவு செய்து டொயோட்டா ஃபார்ச்சூனர் அசத்தியுள்ளது.

பீட் பண்ண முடியாத பீஸ்ட்... டொயோட்டா ஃபார்ச்சூனர் செய்த தரமான சம்பவம்... சாதாரண காரா இது?

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு விற்பனையில் சவால் அளித்து வந்த முக்கியமான கார்களில் ஒன்று ஃபோர்டு எண்டேவர். ஆனால் ஃபோர்டு நிறுவனம் இந்தியாவை விட்டு சமீபத்தில் வெளியேறியதால், டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டி குறைந்துள்ளது. இந்த பட்டியலில் எம்ஜி க்ளோஸ்ட்டர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

பீட் பண்ண முடியாத பீஸ்ட்... டொயோட்டா ஃபார்ச்சூனர் செய்த தரமான சம்பவம்... சாதாரண காரா இது?

நடப்பாண்டு மார்ச் மாதம் எம்ஜி நிறுவனம் 152 க்ளோஸ்ட்டர் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை 505 ஆக இருந்தது. இது 70 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் ஸ்கோடா கோடியாக் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு மார்ச் மாதம் ஸ்கோடா நிறுவனம் 125 கோடியாக் கார்களை விற்பனை செய்துள்ளது.

பீட் பண்ண முடியாத பீஸ்ட்... டொயோட்டா ஃபார்ச்சூனர் செய்த தரமான சம்பவம்... சாதாரண காரா இது?

பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் காரணமாக விற்பனையில் இருந்து விலக்கப்பட்ட ஸ்கோடா கோடியாக் கார், நடப்பாண்டு ஜனவரி மாதம்தான் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனவே 2021ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த கார் இந்தியாவில் விற்பனையில் இல்லை. இதன் காரணமாக 2021ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் இந்த காரின் விற்பனை எண்ணிக்கையை ஒப்பிட இயலாது.

பீட் பண்ண முடியாத பீஸ்ட்... டொயோட்டா ஃபார்ச்சூனர் செய்த தரமான சம்பவம்... சாதாரண காரா இது?

இந்த பட்டியலில் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் கார் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு மார்ச் மாதம் 52 சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் கார் இந்திய சந்தையில் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இந்த காரின் விற்பனை எண்ணிக்கையையும் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிட முடியாது.

பீட் பண்ண முடியாத பீஸ்ட்... டொயோட்டா ஃபார்ச்சூனர் செய்த தரமான சம்பவம்... சாதாரண காரா இது?

இந்த பட்டியலில் ஐந்தாவது மற்றும் கடைசி இடத்தை மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பிடித்துள்ளது. 41 என்ற விற்பனை எண்ணிக்கையை நடப்பாண்டு மார்ச் மாதம் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பதிவு செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை 49 ஆக இருந்தது. இது 16.33 சதவீத வீழ்ச்சியாகும்.

பீட் பண்ண முடியாத பீஸ்ட்... டொயோட்டா ஃபார்ச்சூனர் செய்த தரமான சம்பவம்... சாதாரண காரா இது?

இந்த பட்டியலில் முதலிடத்தை தன்வசப்படுத்தியுள்ள டொயோட்டா நிறுவனம் கூடிய விரைவில் புதிய எஸ்யூவி கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. ஏற்கனவே விற்பனையில் உள்ள டொயோட்டா அர்பன் க்ரூஸர்தான் அது. சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள டொயோட்டா அர்பன் க்ரூஸர் காரின் புதிய தலைமுறை மாடல், நடப்பாண்டு மத்தியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

பீட் பண்ண முடியாத பீஸ்ட்... டொயோட்டா ஃபார்ச்சூனர் செய்த தரமான சம்பவம்... சாதாரண காரா இது?

மாருதி சுஸுகி நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸா காரின் புதிய தலைமுறை மாடலை களமிறக்கிய பிறகு, டொயோட்டா அர்பன் க்ரூஸரின் புதிய தலைமுறை மாடலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும். மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட மாடல்தான் டொயோட்டா அர்பன் க்ரூஸர் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Friday, April 15, 2022, 20:10 [IST]
English summary
Top 5 full size suv s in march 2022 toyota fortuner leads chart
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+