கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரியே இல்ல... அதுதான் டொயோட்டா ஃபார்ச்சூனர்! யாரும் பக்கத்துல கூட நெருங்க முடியல!
இந்தியாவில் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் மிகவும் பிரபலம். இந்த எஸ்யூவி காரை அறியாதவர்கள் யாரும் கிட்டத்தட்ட இருக்க முடியாது.
Recommended Video
அப்படிப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் தற்போது பிரம்மிக்க வைக்கும் சம்பவம் ஒன்றை செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கு இருக்கும் வரவேற்பு நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் அனைத்து சந்தைகளிலுமே தற்போது எஸ்யூவி கார்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதன் காரணமாக ரோல்ஸ் ராய்ஸ் போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் கூட எஸ்யூவி கார்களின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளன.

இந்திய சந்தையை பொறுத்தவரையில், சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கும் மற்றும் மிட்-சைஸ் எஸ்யூவி கார்களுக்கும் மிகப்பெரிய வரவேற்பு காணப்படுகிறது. ஓரளவிற்கு விலை குறைந்தவை என்பதுதான் இதற்கு காரணம். அதற்காக ஃபுல்-சைஸ் எஸ்யூவி கார்களுக்கு வரவேற்பு இல்லை என அர்த்தம் கொள்ள கூடாது.

மிகவும் விலை உயர்ந்தவை என்றாலும் கூட, ஃபுல்-சைஸ் எஸ்யூவி கார்களும் இந்திய சந்தையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதற்கிடையே நடப்பாண்டு ஜூலை மாதம் இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-5 ஃபுல்-சைஸ் எஸ்யூவி கார்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

இதில், வழக்கம் போல டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 1,789 ஆக இருந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலை மாதம் 3,000 ஆக உயர்ந்துள்ளது. இது 68 சதவீத வளர்ச்சியாகும். இதற்கிடையே இந்த பட்டியலில் புதுவரவான ஜீப் மெரிடியன் (Jeep Meridian) இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

ஜீப் நிறுவனம் நடப்பாண்டு ஜூலை மாதம் 440 மெரிடியன் கார்களை விற்பனை செய்துள்ளது. ஜீப் நிறுவனம் நடப்பாண்டு மே மாதம்தான் மெரிடியன் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையை கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிட இயலாது. ஆனால் இங்கே குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் இருக்கிறது.

முதலிடத்தில் உள்ள டொயோட்டா ஃபார்ச்சூனருக்கும், இரண்டாவது இடத்தில் உள்ள ஜீப் மெரிடியன் காருக்கும் இடையேயான வித்தியாசம் மிகவும் பெரியது. டொயோட்டா நிறுவனம் நடப்பாண்டு ஜூலை மாதம் 3,000 ஃபார்ச்சூனர் கார்களை விற்பனை செய்துள்ள நிலையில், ஜீப் நிறுவனமோ வெறும் 440 மெரிடியன் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

இதன் மூலம் இந்த செக்மெண்ட்டில் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் தனது ஆதிக்கத்தை முழுமையாக செலுத்தி வருவது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த பட்டியலில் எம்ஜி க்ளோஸ்ட்டர் (MG Gloster) கார் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 363 ஆக இருந்த எம்ஜி க்ளோஸ்ட்டர் காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பாண்டு ஜூலை மாதம் வெறும் 252 ஆக குறைந்துள்ளது.

இது 31 சதவீத வீழ்ச்சியாகும். இந்தியாவில் எம்ஜி க்ளோஸ்ட்டர் காரும் மிகவும் பிரபலமான ஒன்றுதான். ஆனால் இந்த காரின் விற்பனையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்கு தற்போது நிலவி வரும் செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறை பிரச்னை காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இதற்கிடையே இந்த பட்டியலில் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் (Volkswagen Tiguan) நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

நடப்பாண்டு ஜூலை மாதம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் 124 டிகுவான் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த கார் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய சந்தையில் விற்பனையில் இல்லை. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையையும் நம்மால் கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிட இயலாது.

இதற்கிடையே இந்த பட்டியலில் ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq) கார் ஐந்தாவது மற்றும் கடைசி இடத்தை பிடித்துள்ளது. ஸ்கோடா நிறுவனம் நடப்பாண்டு ஜூலை மாதம் 110 கோடியாக் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த காரும் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் விற்பனையில் இல்லை. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையையும், கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிட இயலாது.


Click it and Unblock the Notifications








