டொயோட்டா ஃபார்ச்சூனர் பக்கத்துல கூட யாரும் இல்ல... புது மாடல் வேற வரப்போகுது... கிலியில் போட்டியாளர்கள்!

இந்தியாவில் நடப்பாண்டு ஜூன் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-5 ஃபுல்-சைஸ் எஸ்யூவி கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டொயோட்டா ஃபார்ச்சூனர் பக்கத்துல கூட யாரும் இல்ல... புது மாடல் வேற வரப்போகுது... கிலியில் போட்டியாளர்கள்!

இந்திய சந்தையில் தற்போது எஸ்யூவி ரக கார்களுக்கான வரவேற்பு உச்சகட்டத்தில் உள்ளது. எஸ்யூவி ரகத்திலேயே ஏராளமான உட்பிரிவுகள் இருக்கின்றன. சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி, மிட்-சைஸ் எஸ்யூவி மற்றும் ஃபுல்-சைஸ் எஸ்யூவி என ஏராளமான உட்பிரிவுகள் இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். இதில், விலை குறைவானது என்பதால், சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் விற்பனைதான் கொடி கட்டி பறக்கிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் பக்கத்துல கூட யாரும் இல்ல... புது மாடல் வேற வரப்போகுது... கிலியில் போட்டியாளர்கள்!

டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வெனியூ போன்ற கார்களை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும். மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டிலும், ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் போன்ற கார்களின் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளது. அதே நேரத்தில் மிகவும் விலை உயர்ந்தவை என்றாலும், ஃபுல்-சைஸ் எஸ்யூவி கார்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

டொயோட்டா ஃபார்ச்சூனர் பக்கத்துல கூட யாரும் இல்ல... புது மாடல் வேற வரப்போகுது... கிலியில் போட்டியாளர்கள்!

இந்த செக்மெண்ட்டை சேர்ந்த கார்களின் விற்பனையும் இந்திய சந்தையில் குறிப்பிடத்தக்க அளவில் சிறப்பாகவே இருந்து வருகிறது. இந்த சூழலில், இந்திய சந்தையில் நடப்பாண்டு ஜூன் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-5 ஃபுல்-சைஸ் எஸ்யூவி கார்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் பக்கத்துல கூட யாரும் இல்ல... புது மாடல் வேற வரப்போகுது... கிலியில் போட்டியாளர்கள்!

இதில், அனைவரும் எதிர்பார்த்தது போலவே, டொயோட்டா நிறுவனத்தின் ஃபார்ச்சூனர் கார் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் வெறும் 549 ஃபார்ச்சூனர் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் 3,133 ஆக உயர்ந்துள்ளது. இது 471 சதவீத வளர்ச்சியாகும்.

டொயோட்டா ஃபார்ச்சூனர் பக்கத்துல கூட யாரும் இல்ல... புது மாடல் வேற வரப்போகுது... கிலியில் போட்டியாளர்கள்!

டொயோட்டா ஃபார்ச்சூனர் இந்திய மக்களின் நம்பிக்கையை பெற்ற கார்களில் ஒன்று. இதன் புதிய தலைமுறை மாடலை உருவாக்கும் பணிகளை டொயோட்டா நிறுவனம் தற்போது மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் மாதங்களில் இந்த புதிய மாடல் பொது பார்வைக்கு கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டொயோட்டா ஃபார்ச்சூனர் பக்கத்துல கூட யாரும் இல்ல... புது மாடல் வேற வரப்போகுது... கிலியில் போட்டியாளர்கள்!

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் புதிய தலைமுறை மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் மிகவும் அதிகமாகவே தென்படுகின்றன. ஆனால் இது தொடர்பாக இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இதற்கிடையே இந்த பட்டியலில் ஜீப் மெரிடியன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் பக்கத்துல கூட யாரும் இல்ல... புது மாடல் வேற வரப்போகுது... கிலியில் போட்டியாளர்கள்!

நடப்பாண்டு ஜூன் மாதம் ஜீப் நிறுவனம் இந்திய சந்தையில் 1,071 மெரிடியன் கார்களை விற்பனை செய்துள்ளது. இது இந்திய சந்தைக்கு புது வரவாகும். இந்த கார் இந்திய சந்தையில் நடப்பாண்டு மே மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையை கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிட இயலாது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் பக்கத்துல கூட யாரும் இல்ல... புது மாடல் வேற வரப்போகுது... கிலியில் போட்டியாளர்கள்!

இதற்கிடையே இந்த பட்டியலில் எம்ஜி க்ளோஸ்ட்டர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் எம்ஜி மோட்டார் நிறுவனம் 306 க்ளோஸ்ட்டர் கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் வெறும் 151 ஆக சரிந்துள்ளது. இது 51 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் விற்பனையில் வீழ்ச்சியை பதிவு செய்த ஒரே கார் இது மட்டுமே.

டொயோட்டா ஃபார்ச்சூனர் பக்கத்துல கூட யாரும் இல்ல... புது மாடல் வேற வரப்போகுது... கிலியில் போட்டியாளர்கள்!

இதற்கிடையே இந்த பட்டியலில் ஸ்கோடா கோடியாக் கார் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இந்திய சந்தையில் தற்போது புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு வரும் ஸ்கோடா நிறுவனம், நடப்பாண்டு ஜூன் மாதம் 79 கோடியாக் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த கார் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய சந்தையில் விற்பனையில் இல்லை. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையையும் ஒப்பிட முடியாது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் பக்கத்துல கூட யாரும் இல்ல... புது மாடல் வேற வரப்போகுது... கிலியில் போட்டியாளர்கள்!

இதற்கிடையே இந்த பட்டியலில் ஐந்தாவது மற்றும் கடைசி இடத்தை, மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 தன்வசப்படுத்தியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் மஹிந்திரா நிறுவனம் வெறும் 16 அல்டுராஸ் ஜி4 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் 65 ஆக உயர்ந்துள்ளது. இது 306 சதவீத வளர்ச்சியாகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 16, 2022, 10:38 [IST]
English summary
Top 5 full size suvs june 2022 toyota fortuner leads chart
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+