இந்த ஏரியால நாங்கதான் கிங்... மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக நிரூபித்த மாருதி! டாடாலாம் லிஸ்ட்லயே இல்ல!

ஹேட்ச்பேக் செக்மெண்ட்டின் கிங் என்பதை மாருதி சுஸுகி நிறுவனம் மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக நிரூபித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்த ஏரியால நாங்கதான் கிங்... மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக நிரூபித்த மாருதி! டாடாலாம் லிஸ்ட்லயே இல்ல!

இந்திய சந்தையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் சமீப காலமாக எஸ்யூவி கார்கள் மீதான மோகம் அதிகரித்து வருகிறது. இருந்தாலும் ஹேட்ச்பேக் கார்கள் இன்னும் முழுமையாக பின்னடைவை சந்திக்கவில்லை. சரி, நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-5 ஹேட்ச்பேக் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்த ஏரியால நாங்கதான் கிங்... மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக நிரூபித்த மாருதி! டாடாலாம் லிஸ்ட்லயே இல்ல!

இந்திய சந்தையில் நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் மிகவும் அதிகமாக விற்பனையான ஹேட்ச்பேக் என்ற பெருமையை மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) தன்வசப்படுத்தியுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் வெறும் 15,646 பலேனோ கார்களை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது.

இந்த ஏரியால நாங்கதான் கிங்... மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக நிரூபித்த மாருதி! டாடாலாம் லிஸ்ட்லயே இல்ல!

இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் 18,418 ஆக உயர்ந்துள்ளது. இது 18 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon-R) இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெறும் 9,628 வேகன் ஆர் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

இந்த ஏரியால நாங்கதான் கிங்... மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக நிரூபித்த மாருதி! டாடாலாம் லிஸ்ட்லயே இல்ல!

இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் 18,398 ஆக உயர்ந்துள்ளது. இது 91 சதவீத வளர்ச்சியாகும். இங்கே குறிப்பிடத்தக்க முக்கியமான விஷயம் என்னவென்றால், மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் நூலிழையில்தான் முதலிடத்தை மாருதி சுஸுகி பலேனோ காரிடம் இழந்துள்ளது. இந்த 2 கார்களுக்கும் இடையேயான வித்தியாசம் வெறும் 20 யூனிட்கள் மட்டுமே.

இந்த ஏரியால நாங்கதான் கிங்... மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக நிரூபித்த மாருதி! டாடாலாம் லிஸ்ட்லயே இல்ல!

இங்கே குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயமும் உள்ளது. மாருதி சுஸுகி பலேனோ மற்றும் மாருதி சுஸுகி வேகன் ஆர் ஆகிய 2 கார்களின் சிறப்பான விற்பனை வளர்ச்சிக்கு காரணம் 2022 மாடல்கள்தான் என கருதப்படுகிறது. மாருதி சுஸுகி நிறுவனம் பலேனோ மற்றும் வேகன் ஆர் ஆகிய 2 கார்களின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடல்களையும் நடப்பாண்டு விற்பனைக்கு கொண்டு வந்தது.

இந்த ஏரியால நாங்கதான் கிங்... மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக நிரூபித்த மாருதி! டாடாலாம் லிஸ்ட்லயே இல்ல!

இதன் காரணமாகவே இந்த கார்களின் விற்பனை சிறப்பான வகையில் உயர்ந்துள்ளது. இதற்கிடையே இந்த பட்டியலில் மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto) கார் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13,236 ஆல்டோ கார்களை விற்பனை செய்திருந்தது.

இந்த ஏரியால நாங்கதான் கிங்... மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக நிரூபித்த மாருதி! டாடாலாம் லிஸ்ட்லயே இல்ல!

இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் 14,388 ஆக உயர்ந்துள்ளது. இது 9 சதவீத வளர்ச்சியாகும். மாருதி சுஸுகி நிறுவனம் வெகு சமீபத்தில் புதிய ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10) காரை விற்பனைக்கு கொண்டு வந்தது. இதன் காரணமாக வரும் மாதங்களில் ஆல்டோ காரின் விற்பனை சிறப்பான வகையில் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஏரியால நாங்கதான் கிங்... மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக நிரூபித்த மாருதி! டாடாலாம் லிஸ்ட்லயே இல்ல!

இதற்கிடையே இந்த பட்டியலில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) கார் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 12,483 ஸ்விஃப்ட் கார்களை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் 11,275 ஆக குறைந்துள்ளது. இது 10 சதவீத வீழ்ச்சியாகும்.

இந்த ஏரியால நாங்கதான் கிங்... மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக நிரூபித்த மாருதி! டாடாலாம் லிஸ்ட்லயே இல்ல!

மாருதி சுஸுகி நிறுவனம் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறது. எனவே வரும் காலங்களில் ஸ்விஃப்ட் காரின் விற்பனை மீண்டும் உயரலாம். இதற்கிடையே இந்த பட்டியலில் முதல் 4 இடங்களையும் தன்வசப்படுத்தியதன் மூலம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டின் ராஜா என்பதை மாருதி சுஸுகி நிறுவனம் மீண்டும் ஒரு முறை உயர்த்தியுள்ளது.

இந்த ஏரியால நாங்கதான் கிங்... மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக நிரூபித்த மாருதி! டாடாலாம் லிஸ்ட்லயே இல்ல!

இதற்கிடையே இந்த பட்டியலில் ஐந்தாவது மற்றும் கடைசி இடத்தை ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios) கார் பிடித்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8,023 ஐ10 நியோஸ் கார்களை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் 9,274 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் விற்பனையில் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் 16 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 8, 2022, 8:41 [IST]
English summary
Top 5 hatchbacks in august 2022 maruti suzuki baleno leads chart
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+