ஃபார்முக்கு வந்துட்டாங்க! டாடாவுக்கு தண்ணி காட்டிய மாருதி கார்! பாதுகாப்பான காரை எல்லாம் தூக்கி சாப்பிட்றுச்சு

டாடாவின் பாதுகாப்பான காருக்கு மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் தண்ணி காட்டியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஃபார்முக்கு வந்துட்டாங்க! டாடாவுக்கு தண்ணி காட்டிய மாருதி கார்! பாதுகாப்பான காரை எல்லாம் தூக்கி சாப்பிட்றுச்சு

இந்தியாவில் தற்போது எஸ்யூவி ரக கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே எஸ்யூவி செக்மெண்ட்டின் மீது கார் உற்பத்தி நிறுவனங்கள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த சூழலில் நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அதிகமாக விற்பனையான டாப்-5 எஸ்யூவி கார்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

ஃபார்முக்கு வந்துட்டாங்க! டாடாவுக்கு தண்ணி காட்டிய மாருதி கார்! பாதுகாப்பான காரை எல்லாம் தூக்கி சாப்பிட்றுச்சு

இதில், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) முதலிடத்தை பிடித்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெறும் 12,906 பிரெஸ்ஸா கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் 15,193 ஆக உயர்ந்துள்ளது. இது 18 சதவீத வளர்ச்சியாகும்.

ஃபார்முக்கு வந்துட்டாங்க! டாடாவுக்கு தண்ணி காட்டிய மாருதி கார்! பாதுகாப்பான காரை எல்லாம் தூக்கி சாப்பிட்றுச்சு

மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில்தான் பிரெஸ்ஸா காரின் புதிய மாடலை விற்பனைக்கு கொண்டு வந்தது.

தற்போது செய்யப்பட்டுள்ள அப்டேட்கள் வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்துள்ளதால், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் விற்பனை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வரும் மாதங்களிலும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிறப்பான விற்பனை எண்ணிக்கையையே பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபார்முக்கு வந்துட்டாங்க! டாடாவுக்கு தண்ணி காட்டிய மாருதி கார்! பாதுகாப்பான காரை எல்லாம் தூக்கி சாப்பிட்றுச்சு

ஏனெனில் 2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காருக்கு தற்போதைய நிலையிலேயே 1 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன. இதற்கிடையே இந்த பட்டியலில் டாடா நெக்ஸான் (Tata Nexon) இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் 10,006 நெக்ஸான் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

ஃபார்முக்கு வந்துட்டாங்க! டாடாவுக்கு தண்ணி காட்டிய மாருதி கார்! பாதுகாப்பான காரை எல்லாம் தூக்கி சாப்பிட்றுச்சு

ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் 15,085 ஆக உயர்ந்துள்ளது. இது 51 சதவீத வளர்ச்சியாகும். மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காருடன் ஒப்பிடும்போது டாடா நெக்ஸான்தான் விற்பனையில் அதிகமான வளர்ச்சி சதவீதத்தை பதிவு செய்துள்ளது. ஆனால் கார்களின் எண்ணிக்கை அடிப்படையில் நூலிழையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவிடம் டாடா நெக்ஸான் முதலிடத்தை பறிகொடுத்துள்ளது.

ஃபார்முக்கு வந்துட்டாங்க! டாடாவுக்கு தண்ணி காட்டிய மாருதி கார்! பாதுகாப்பான காரை எல்லாம் தூக்கி சாப்பிட்றுச்சு

இந்த 2 கார்களுக்கும் இடையேயான வித்தியாசம் வெறும் 108 யூனிட்கள் மட்டுமே என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். டாடா நெக்ஸான் கார், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் வாங்கியுள்ளது கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும். இதற்கிடையே இந்த பட்டியலில் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மூன்றாவது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.

ஃபார்முக்கு வந்துட்டாங்க! டாடாவுக்கு தண்ணி காட்டிய மாருதி கார்! பாதுகாப்பான காரை எல்லாம் தூக்கி சாப்பிட்றுச்சு

ஹூண்டாய் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12,597 க்ரெட்டா கார்களை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் 12,577 ஆக சற்றே குறைந்துள்ளது. 20 யூனிட்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டிருப்பது இந்த புள்ளி விபரங்களின் மூலம் தெரியவந்துள்ளது. இது மிகவும் சிறிய வித்தியாசம்தான்.

ஃபார்முக்கு வந்துட்டாங்க! டாடாவுக்கு தண்ணி காட்டிய மாருதி கார்! பாதுகாப்பான காரை எல்லாம் தூக்கி சாப்பிட்றுச்சு

வரும் நாட்களில் ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு போட்டியாக டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா ஆகிய கார்கள் களமிறங்கவுள்ளன. இதில், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காருக்கு தற்போதே 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்து விட்டன. எனவே ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு பலமான போட்டி காத்திருக்கிறது என்பது உறுதி.

ஃபார்முக்கு வந்துட்டாங்க! டாடாவுக்கு தண்ணி காட்டிய மாருதி கார்! பாதுகாப்பான காரை எல்லாம் தூக்கி சாப்பிட்றுச்சு

இந்த போட்டியை சமாளிக்கும் வகையில் க்ரெட்டா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை ஹூண்டாய் நிறுவனம் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கிடையே இந்த பட்டியலில் டாடா பன்ச் (Tata Punch) கார் நான்காவது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் 12,006 பன்ச் கார்களை விற்பனை செய்துள்ளது.

ஃபார்முக்கு வந்துட்டாங்க! டாடாவுக்கு தண்ணி காட்டிய மாருதி கார்! பாதுகாப்பான காரை எல்லாம் தூக்கி சாப்பிட்றுச்சு

டாடா பன்ச் கார் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விற்பனையில் இல்லை. அதாவது கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையை கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிட முடியாது. இதற்கிடையே இந்த பட்டியலில் ஐந்தாவது மற்றும் கடைசி இடத்தை ஹூண்டாய் வெனியூ பிடித்துள்ளது.

ஃபார்முக்கு வந்துட்டாங்க! டாடாவுக்கு தண்ணி காட்டிய மாருதி கார்! பாதுகாப்பான காரை எல்லாம் தூக்கி சாப்பிட்றுச்சு

ஹூண்டாய் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் வெறும் 8,377 வெனியூ கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் 11,240 ஆக உயர்ந்துள்ளது. இது 34 சதவீத வளர்ச்சியாகும். மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரை போல், ஹூண்டாய் வெனியூ காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலும் சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ஃபார்முக்கு வந்துட்டாங்க! டாடாவுக்கு தண்ணி காட்டிய மாருதி கார்! பாதுகாப்பான காரை எல்லாம் தூக்கி சாப்பிட்றுச்சு

இதுவே ஹூண்டாய் வெனியூ காரின் விற்பனையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணம் ஆகும். வரும் மாதங்களில் ஹூண்டாய் வெனியூ காரின் விற்பனை மேலும் உயரலாம். ஏனெனில் 2022 மாடலை தொடர்ந்து, வெனியூ காரின் என் லைன் மாடலையும் ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 6, 2022, 17:45 [IST]
English summary
Top 5 suv s august 2022 maruti suzuki brezza leads chart
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+