வெச்சு செஞ்சுட்டாங்க... ஹூண்டாய் நிறுவனத்தை கதற விட்ட டாடா... இப்படி ஒரு சம்பவத்தை நம்பவே முடியல!

இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஹூண்டாய் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளியிருப்பது குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வெச்சு செஞ்சுட்டாங்க... ஹூண்டாய் நிறுவனத்தை கதற விட்ட டாடா... இப்படி ஒரு சம்பவத்தை நம்பவே முடியல!

இந்திய சந்தையில் நடப்பாண்டு மே மாதம் அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் டாடா மோட்டார்ஸ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு மே மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் 43,341 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் ஹூண்டாய் நிறுவனம் 42,293 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

வெச்சு செஞ்சுட்டாங்க... ஹூண்டாய் நிறுவனத்தை கதற விட்ட டாடா... இப்படி ஒரு சம்பவத்தை நம்பவே முடியல!

1,048 கார்களில் இரண்டாவது இடத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் ஹூண்டாய் தவற விட்டுள்ளது. கடைசி 6 மாதங்களில் இரண்டாவது முறையாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த சாதனையை படைக்க உதவிய டாப்-5 கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வெச்சு செஞ்சுட்டாங்க... ஹூண்டாய் நிறுவனத்தை கதற விட்ட டாடா... இப்படி ஒரு சம்பவத்தை நம்பவே முடியல!

அதாவது நடப்பாண்டு மே மாதம் இந்திய சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-5 டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம். இந்திய சந்தையில் நடப்பாண்டு மே மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாடா கார் என்ற பெருமையை நெக்ஸான் (Tata Nexon) தட்டி சென்றுள்ளது.

வெச்சு செஞ்சுட்டாங்க... ஹூண்டாய் நிறுவனத்தை கதற விட்ட டாடா... இப்படி ஒரு சம்பவத்தை நம்பவே முடியல!

நடப்பாண்டு மே மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் 14,614 நெக்ஸான் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் வெறும் 6,439 ஆக மட்டுமே இருந்தது. இது 126.96 சதவீத வளர்ச்சியாகும். கடந்த 2021ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது நடப்பாண்டு மே மாதம் டாடா மோட்டார்ஸ் 8,175 நெக்ஸான் கார்களை அதிகமாக விற்பனை செய்துள்ளது.

வெச்சு செஞ்சுட்டாங்க... ஹூண்டாய் நிறுவனத்தை கதற விட்ட டாடா... இப்படி ஒரு சம்பவத்தை நம்பவே முடியல!

இந்த பட்டியலில் டாடா பன்ச் (Tata Punch) இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பாண்டு மே மாதம் இந்திய சந்தையில் 10,241 பன்ச் கார்களை விற்பனை செய்துள்ளது. டாடா பன்ச் காரின் விற்பனை எண்ணிக்கையை கடந்த 2021ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிட முடியாது. ஏனெனில் அந்த சமயத்தில் டாடா பன்ச் கார் விற்பனையில் இல்லை.

வெச்சு செஞ்சுட்டாங்க... ஹூண்டாய் நிறுவனத்தை கதற விட்ட டாடா... இப்படி ஒரு சம்பவத்தை நம்பவே முடியல!

அதாவது கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் டாடா பன்ச் கார் விற்பனைக்கே அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பட்டியலில் டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 2,896 ஆக இருந்த டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 4,913 ஆக உயர்ந்துள்ளது. இது 69.65 சதவீத வளர்ச்சியாகும்.

வெச்சு செஞ்சுட்டாங்க... ஹூண்டாய் நிறுவனத்தை கதற விட்ட டாடா... இப்படி ஒரு சம்பவத்தை நம்பவே முடியல!

கடந்த 2021ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது நடப்பாண்டு மே மாதம் 2,017 அல்ட்ராஸ் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிகமாக விற்பனை செய்துள்ளது. இந்த பட்டியலில் டாடா டியாகோ (Tata Tiago) நான்காவது இடத்தை பிடித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பாண்டு மே மாதம் 4,561 டியாகோ கார்களை விற்பனை செய்துள்ளது.

வெச்சு செஞ்சுட்டாங்க... ஹூண்டாய் நிறுவனத்தை கதற விட்ட டாடா... இப்படி ஒரு சம்பவத்தை நம்பவே முடியல!

இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் வெறும் 2,582 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் டாடா டியாகோ காரின் விற்பனை எண்ணிக்கை 76.65 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு மே மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 1,979 டியாகோ கார்களை அதிகமாக விற்பனை செய்துள்ளது.

வெச்சு செஞ்சுட்டாங்க... ஹூண்டாய் நிறுவனத்தை கதற விட்ட டாடா... இப்படி ஒரு சம்பவத்தை நம்பவே முடியல!

இந்த பட்டியலில் ஐந்தாவது மற்றும் கடைசி இடத்தை பிடித்திருக்கும் கார் டாடா டிகோர் (Tata Tigor). கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் வெறும் 367 ஆக இருந்த டாடா டிகோர் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 3,975 ஆக உயர்ந்துள்ளது. இது 983.11 சதவீத வளர்ச்சியாகும். கடந்த 2021ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது நடப்பாண்டு மே மாதம் 3,608 டிகோர் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

வெச்சு செஞ்சுட்டாங்க... ஹூண்டாய் நிறுவனத்தை கதற விட்ட டாடா... இப்படி ஒரு சம்பவத்தை நம்பவே முடியல!

இந்த டாப்-5 கார்கள் தவிர, ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றுடன், வரும் காலங்களில் இன்னும் நிறைய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே வரும் காலங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை வெகுவாக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.

Most Read Articles
English summary
Top 5 tata cars sold in may 2022 nexon leads chart
Story first published: Saturday, June 25, 2022, 17:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X