ஒரு கிலோவுக்கு 30.6 கிமீ மைலேஜ் தரும்... டொயோட்டா க்ளான்ஸா இ-சிஎன்ஜி கார் பற்றி தெரிஞ்சிக்க விருப்பமா?..

டொயோட்டா (Toyota) அண்மையில் அறிமுகம் செய்த க்ளான்ஸா இ-சிஎன்ஜி (Glanza E-CNG) கார் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய டாப் 5 முக்கிய தகவல்களை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த விரிவாக பார்க்கலாம்.

ஒரு கிலோவுக்கு 30.6 கிமீ மைலேஜ் தரும்... டொயோட்டா க்ளான்ஸா இ-சிஎன்ஜி கார் பற்றி தெரிஞ்சிக்க விருப்பமா?..

டொயோட்டா (Toyota) நிறுவனம் அதன் க்ளான்ஸா காரின் இ-சிஎன்ஜி (Glanza E-CNG) எனும் புதிய வெர்ஷனை அண்மையில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்த வாகனத்தின் மைலேஜ் திறன், விலை மற்றும் பிற முக்கிய தகவல்கள் அனைத்தையும் நிறுவனம் ஏற்கனவே வெளியிட்டுவிட்டது. அந்தவகையில், தற்போது கார்குறித்து வெளியாகியிருக்கும் தகவல்களிலேயே ஐந்து முக்கியமான பாயிண்டுகள் பற்றியே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஒரு கிலோவுக்கு 30.6 கிமீ மைலேஜ் தரும்... டொயோட்டா க்ளான்ஸா இ-சிஎன்ஜி கார் பற்றி தெரிஞ்சிக்க விருப்பமா?..

மைலேஜ் மற்றும் எஞ்ஜின் விபரம்:

பொதுவாக காரில் இடம் பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள் பற்றியே முதலில் பார்க்க பலர் விரும்புவர். ஆனால், இந்த காரில் பலரின் கவனத்தை ஈர்க்கக் கூடியதாக மைலேஜ் தகவல் இருக்கின்றது. எனவேதான் க்ளான்ஸா இ-சிஎன்ஜியின் எஞ்ஜின் மற்றும் மைலேஜ் விபரத்தை தற்போது பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

ஒரு கிலோவுக்கு 30.6 கிமீ மைலேஜ் தரும்... டொயோட்டா க்ளான்ஸா இ-சிஎன்ஜி கார் பற்றி தெரிஞ்சிக்க விருப்பமா?..

டொயோட்டா இ-சிஎன்ஜி க்ளான்ஸா ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 30.61 கிமீ மைலேஜ் தரும் என நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பான மைலேஜ் திறனை 1.2 லிட்டர், 4 சிலிண்டர், கே12 மோட்டாரே வழங்குகின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இது பெட்ரோலில் இயங்கும்போது வெளிப்படக் கூடிய திறன் ஆகும்.

ஒரு கிலோவுக்கு 30.6 கிமீ மைலேஜ் தரும்... டொயோட்டா க்ளான்ஸா இ-சிஎன்ஜி கார் பற்றி தெரிஞ்சிக்க விருப்பமா?..

சிஎன்ஜி-யால் இயங்கும்போது இதே மோட்டார் அதிகபட்சமாகவே 76 பிஎச்பி மற்றும் 98.5 என்எம் டார்க்கை மட்டுமே வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. க்ளான்ஸா பெட்ரோல் வெர்ஷனில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன்மற்றும் ஏஎம்டி இரு விதமான கியர் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ஆனால், இ-சிஎன்ஜி வெர்ஷனில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு மட்டுமே வழங்கப்படுகின்றது.

ஒரு கிலோவுக்கு 30.6 கிமீ மைலேஜ் தரும்... டொயோட்டா க்ளான்ஸா இ-சிஎன்ஜி கார் பற்றி தெரிஞ்சிக்க விருப்பமா?..

வேரியண்டுகள் விபரம்:

எஸ் மற்றும் ஜி எனும் இரு விதமான தேர்வுகளிலேயே இ-சிஎன்ஜி தேர்வை டொயோட்டா வழங்க இருக்கின்றது. இந்த இரு தேர்வுகளும் நடுத்தரமான வசதிகளைக் கொண்டவை ஆகும். அதேவேலையில், பெட்ரோல் வெர்ஷனை இ, எஸ், ஜி மற்றும் வி ஆகிய தேர்வுகளில் நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

நிற தேர்வை பொருத்த வரையில் ஒட்டுமொத்தமாக ஐந்து ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்ஸ்டா ப்ளூ, கேமிங் கிரே, என்டைசிங் சில்வர், ஸ்போர்டின் ரெட் மற்றும் கஃபே ஒயிட் ஆகியவையே அந்த நிற தேர்வுகள் ஆகும்.

ஒரு கிலோவுக்கு 30.6 கிமீ மைலேஜ் தரும்... டொயோட்டா க்ளான்ஸா இ-சிஎன்ஜி கார் பற்றி தெரிஞ்சிக்க விருப்பமா?..

சிறப்பம்சங்கள் விபரம்:

டொயோட்டா நிறுவனம் இந்த காரில் பெரும்பாலும் எல்இடி லைட்டுகளையே பயன்படுத்தியிருக்கின்றது. அந்தவகையில், முகப்பு விளக்காக எல்இடி புரஜெக்டர் ஆட்டோமேட்டிக் லைட்டையே நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது. இத்துடன், வால் பகுதியில் எல்இடி லைட்டையே நிறுவனம் உபயோகித்திருக்கின்றது. இந்த இரு லைட்டுகளும் காரின் அழகிற்கு கூடுதல் அழகை சேர்க்கும் வகையில் உள்ளன. இத்துடன், இ-சிஎன்ஜி எனும் பேட்ஜையும் நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது.

ஒரு கிலோவுக்கு 30.6 கிமீ மைலேஜ் தரும்... டொயோட்டா க்ளான்ஸா இ-சிஎன்ஜி கார் பற்றி தெரிஞ்சிக்க விருப்பமா?..

தொழில்நுட்ப வசதிகளாக காருக்குள் 7 அங்குல ஃப்ளோட்டிங் ரக தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல், ரியர் பகுதிக்கும் ஏசி வெண்டுகள், மேனுவலாக உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய டிரைவர் இருக்கை, டில்ட் மற்றும் டெலிஸ்கோபிக் அட்ஜெஸ்ட் வசதிக் கொண்ட ஸ்டியரிங் வீல், ஐடில் ஸ்டார்ட்/ ஸ்டாப் வசதி மற்றும் ஆறு ஏர் பேக்குகள் உள்ளிட்டவை க்ளான்ஸா இ-சிஎன்ஜியில் வழங்கப்பட்டிருக்கின்றது.

ஒரு கிலோவுக்கு 30.6 கிமீ மைலேஜ் தரும்... டொயோட்டா க்ளான்ஸா இ-சிஎன்ஜி கார் பற்றி தெரிஞ்சிக்க விருப்பமா?..

விலை விபரம்:

டொயோட்டா நிறுவனம் இந்த க்ளான்ஸா காரை ரூ. 6.59 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்கு வழங்குகின்றது. இது ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ஆகும். அதேநேரத்தில் இதன் இ-சிஎன்ஜி வெர்ஷனின் ஆரம்ப நிலை தேர்வான 'எஸ்' -க்கு ரூ. 8.43 லட்சம் என்ற விலையை டொயோட்டா நிர்ணயித்துள்ளது. ஜி தேர்விற்கு ரூ. 9.46 லட்சம் விலை நிர்ணிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஒரு கிலோவுக்கு 30.6 கிமீ மைலேஜ் தரும்... டொயோட்டா க்ளான்ஸா இ-சிஎன்ஜி கார் பற்றி தெரிஞ்சிக்க விருப்பமா?..

போட்டியாளர்கள்

டொயோட்டா நிறுவனத்தின் இந்த சிஎன்ஜி கார் பலதரப்பட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக வருகை தந்துள்ளது. அந்தவகையில், மிக முக்கியமான போட்டியாளராக மாருதி சுஸுகியின் பலினோவிற்கும், டாடா அல்ட்ராஸுக்கும், ஹூண்டாய் ஐ20க்கும் இந்த கார் அமைந்துள்ளது. இந்த அனைத்து கார் மாடல்களும் க்ளான்ஸாவைப் போலவே அதிகம் பிரீமியம் தர அம்சங்கள் நிறைந்த ஹேட்ச்பேக் கார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, November 14, 2022, 8:57 [IST]
English summary
Top 5 things toyota glanza e cng
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+