புதிய டொயோட்டா இன்னோவா காரின் விலை இவ்ளோதானா! ஷோரூம் வாசல்ல இப்பவே பாயை போட்டு படுத்தற வேண்டியதுதான்!

புதிய டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் என்னென்ன வசதிகள் இடம்பெற்றுள்ளன? என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. போட்டியாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த வசதிகள் குறித்த தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross). இந்தியர்களின் மனதிற்கு மிகவும் நெருக்கமான டொயோட்டா இன்னோவா எம்பிவி (MPV) ரக காரின் புதிய மாடலாக ஹைக்ராஸ் வரவுள்ளது.

புதிய டொயோட்டா இன்னோவா காரின் விலை இவ்ளோதானா! ஷோரூம் வாசல்ல இப்பவே பாயை போட்டு படுத்தற வேண்டியதுதான்!

இந்தோனேஷியாவில் தற்போது டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டு விட்டது. இது எம்பிவி கார்தான் என்றாலும், எஸ்யூவி (SUV) ரக கார்களின் டிசைன் அம்சங்களையும் காண முடிகிறது. இந்த கார் இந்திய சந்தையில் வரும் நவம்பர் 25ம் தேதி பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளது. அதை தொடர்ந்து ஜனவரியில் விலைகள் அறிவிக்கப்பட்டு, முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில், புதிய 2.0 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் (Strong Hybrid) பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 186 பிஎஸ் பவரை உருவாக்க கூடிய இந்த பவர்ட்ரெயின், பெட்ரோல் இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்களை உள்ளடக்கியுள்ளது. எனவே மைலேஜ் சிறப்பாக கிடைக்கும். இன்னோவா ஹைக்ராஸ் கார் ஒரு லிட்டருக்கு 20 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும் என டொயோட்டா தெரிவித்துள்ளது.

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில், மோனோகாக் சேஸிஸ் (Monocoque Chassis) பயன்படுத்தப்பட்டுள்ளது. பழைய மாடலின் லேடர்-ஆன்-ப்ரேம் (Ladder-on-frame) பிளாட்பார்மிற்கு பதிலாக மோனோகாக் சேஸிஸ் அடிப்படையில் புதிய மாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அத்துடன் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படாது என்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

மேலும் இனி இது ரியர் வீல் டிரைவ் எம்பிவி காராகவும் இருக்காது. இப்படி பல்வேறு மாற்றங்களுக்கு மத்தியில், வாடிக்கையாளர்களுக்கு தேவையான ஏராளமான அதிநவீன வசதிகளையும் இன்னோவா ஹைக்ராஸ் காரில் டொயோட்டா நிறுவனம் வாரி வழங்கியுள்ளது. இதில், மிகவும் முக்கியமான வசதிகள் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த வசதிகள் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியையும், போட்டி நிறுவனங்களுக்கு கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அடாஸ்

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance System) வசதி வழங்கப்பட்டுள்ளது. இன்னோவா காரில் அடாஸ் வசதி இடம்பெறுவது இதுவே முதல் முறை. இந்த காரின் அடாஸ் தொகுப்பில், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்ஸி பிரேக்கிங், லேன் டிபார்ச்சர் வார்னிங், லேன் கீப் அஸிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் மற்றும் ஆட்டோமேட்டிக் ஹை பீம் உள்ளிட்ட வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பனரோமிக் சன்ரூஃப்

டொயோட்டா இன்னோவா காரில் முதல் முறையாக இடம்பெறும் மற்றொரு வசதி பனரோமிக் சன்ரூஃப் (Panoramic Sunroof). இந்திய சந்தையில் சமீப காலமாக பனரோமிக் சன்ரூஃப் வசதியுடன் விற்பனைக்கு வரும் கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த சூழலில், புதிய டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் பனரோமிக் சன்ரூஃப் வசதி வழங்கப்பட்டிருப்பது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

10 இன்ச் டச்ஸ்க்ரீன்

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளுடன் புதிய 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது டாப் வேரியண்ட்களில் வழங்கப்படும் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகும். டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் விலை குறைவான வேரியண்ட்களில் 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விலை

இந்தியாவில் 20 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலைக்கு இது மதிப்பு வாய்ந்த காராக இருக்கும். ஹைக்ராஸ் விற்பனைக்கு வந்ததும், தற்போது விற்பனையில் உள்ள டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) காரின் விற்பனை நிறுத்தப்படாது. அந்த காரும் தொடர்ந்து இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 22, 2022, 9:42 [IST]
English summary
Top features of toyota innova hycross
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+