போட்டியே இல்லாததைபோல் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் டாப்5 கார் மாடல்கள்! இந்தியால இவற்றை அடிச்சுக்க ஆளே இல்ல

2022ம் ஆண்டின் முதல் பாதியில் அதிகம் விற்பனையாகிய டாப் 5 கார் மாடல்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவைகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம்.

போட்டியே இல்லாததைபோல் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் டாப் 5 கார் மாடல்கள்... இந்தியால இவற்றை அடிச்சுக்க ஆளே இல்ல!

இப்போதான் 2022ம் ஆண்டு தொடங்கியதைப் போல இருக்கின்றது. அதற்குள்ளாக ஆண்டின் முதல் பாதி (ஆறு மாதங்கள்) முடிவடைந்துவிட்டது. இந்த முதல் பாதியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற டாப் ஐந்து கார் மாடல்கள் எவை என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால் 2022 ஆண்டின் ஜனவரி தொடங்கி ஜூன் மாதம் வரையில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகிய டாப் 5 கார்களின் லிஸ்டையே இப்பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

போட்டியே இல்லாததைபோல் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் டாப் 5 கார் மாடல்கள்... இந்தியால இவற்றை அடிச்சுக்க ஆளே இல்ல!

மாருதி சுஸுகி வேகன்ஆர் (Maruti Suzuki Wagon R)

மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த காருக்கு எப்போதும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் எப்போதும் விற்பனையில் இக்கார் முதல் இடத்தைப் பிடித்துவிடுகின்றது. இருசக்கர வாகன விற்பனையில் எப்படி ஹோண்டா ஸ்பிளெண்டர் பைக் மற்றும் ஆக்டிவா ஸ்கூட்டர் இருக்கின்றனவோ, அவற்றைபோலவே, கார்கள் உலகில் எல்லா மாதத்திலும் முதல் இடத்தை இக்கார் பிடித்துவிடும்.

போட்டியே இல்லாததைபோல் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் டாப் 5 கார் மாடல்கள்... இந்தியால இவற்றை அடிச்சுக்க ஆளே இல்ல!

இதன் விளைவாக நடப்பாண்டின் முதல் அரையாண்டில் அதிகம் விற்பனையாகிய காராக வேகன்ஆர் மாறியிருக்கின்றது. சுமார் 1,13,407 யூனிட்டுகள் இக்கார் விற்பனையாகியிருக்கின்றன. இதே வாகனம் கடந்த 2021ம் ஆண்டின் முதல் அரை பாதியில் வெறும் 94,839 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருந்தன. இதைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் நடப்பு 2022 ஆம் ஆண்டில் வேகன்ஆர் விற்பனையாகியிருக்கின்றது.

போட்டியே இல்லாததைபோல் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் டாப் 5 கார் மாடல்கள்... இந்தியால இவற்றை அடிச்சுக்க ஆளே இல்ல!

இந்திய சந்தையில் இக்கார் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மாருதி சுஸுகி நிறுவனம் மிக சமீபத்திலேயே 2022 வேகன்ஆர் கார் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ரூ. 5,44,500 என்ற விலையில் அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இன்னும் சில ஆயிரங்கள் சேர்க்கப்பட்டு அதிக விலையில் அது விற்கப்படும்.

போட்டியே இல்லாததைபோல் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் டாப் 5 கார் மாடல்கள்... இந்தியால இவற்றை அடிச்சுக்க ஆளே இல்ல!

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift)

மாருதி சுஸுகி வேகன்ஆர் காரை அடுத்து நடப்பாண்டின் முதல் அரையாண்டில் அதிகம் விற்பனையாகிய இரண்டாவது காராக ஸ்விஃப்ட் இருக்கின்றது. 2021ம் ஆண்டின் முதல் பாதியைக் காட்டிலும் 2022ம் ஆண்டின் முதல் பாதியில் கணிசமான விற்பனைச் சரிவைச் சந்தித்தபோதிலும் இக்காரே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

போட்டியே இல்லாததைபோல் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் டாப் 5 கார் மாடல்கள்... இந்தியால இவற்றை அடிச்சுக்க ஆளே இல்ல!

2021ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஸ்விஃப்ட் கார் 1,02,206 யூனிட்டுகள் விற்பனையாகியிருந்தன. ஆனால், நடப்பாண்டில் சுமார் 11 சதவீதம் விற்பனைச் சரிவை அது சந்தித்துள்ளது. அதாவது 91,177 யூனிட்டுகள் மட்டுமே 2022ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் விற்பனையாகியிருக்கின்றது. மாருதி சுஸுகி இந்திய சந்தையில் ரூ. 5,91,900 என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

போட்டியே இல்லாததைபோல் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் டாப் 5 கார் மாடல்கள்... இந்தியால இவற்றை அடிச்சுக்க ஆளே இல்ல!

மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire)

மாருதி சுஸுகி டிசையர் இந்திய சந்தையில் பெட்ரோல், சிஎன்ஜி என இரு விதமான மோட்டார் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் பெட்ரோல் வெர்ஷன் ஒரு லிட்டருக்கு 22.41 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி தேர்வு அதிகபட்சமாக 31.12 கிமீ மைலேஜையும் வழங்கும் திறன் கொண்டது. இதுமாதிரியான சூப்பரான வசதிகள் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களில் டிசையரும் ஒன்றாக காட்சியளிக்கின்றது.

போட்டியே இல்லாததைபோல் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் டாப் 5 கார் மாடல்கள்... இந்தியால இவற்றை அடிச்சுக்க ஆளே இல்ல!

இந்த கார் 2022ம் ஆண்டின் முதல் பாதியில் அதிகம் விற்பனையாகிய கார்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த இடத்தை 85,929 யூனிட்டுகள் விற்பனையைத் தொடர்ந்து டிசையர் பிடித்திருக்கின்றது. இதே வாகனம் கடந்த 2021ம் ஆண்டின் முதல் பாதியில் 70,991 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எண்ணிக்கையைக் காட்டிலும் நடப்பாண்டில் 21 சதவீதம் விற்பனை வளர்ச்சியை டிசையர் பெற்றிருக்கின்றது. இந்திய சந்தையில் ரூ. 6.24 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து டிசையர் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

போட்டியே இல்லாததைபோல் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் டாப் 5 கார் மாடல்கள்... இந்தியால இவற்றை அடிச்சுக்க ஆளே இல்ல!

டாடா நெக்ஸான் (Tata Nexon)

மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்புகள் பெரும்பாலான இடங்களைப் பிடித்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்ற நேரத்தில் டாடாவின் நெக்ஸான் ஒற்றை ஆளாக காம்பேக்ட் எஸ்யூவி காரில் தரமான சம்பவத்தைச் செய்துக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாக நடப்பாண்டின் அரை பாதியில் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் நெக்ஸான் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கின்றது. அதேவேலையில், காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவில் அதிகம் விற்பனையாகும் கார் இது உள்ளது.

போட்டியே இல்லாததைபோல் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் டாப் 5 கார் மாடல்கள்... இந்தியால இவற்றை அடிச்சுக்க ஆளே இல்ல!

டாடா நெக்ஸான் ஓர் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற காராகும். இந்த கார் இந்திய சந்தையில் ரூ. 7.60 லட்சம் தொடங்கி ரூ. 13.9 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. 2022 ஜனவரி தொடங்கி கடந்த ஆறாம் மாதம் இறுதி வரையில் ஒட்டுமொத்தமாக 82,770 யூனிட்டுகள் நெக்ஸான் கார்கள் விற்பனையாகியிருக்கின்றன.

போட்டியே இல்லாததைபோல் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் டாப் 5 கார் மாடல்கள்... இந்தியால இவற்றை அடிச்சுக்க ஆளே இல்ல!

இதே கார் மாடல் 2021ம் ஆண்டின் முதல் பாதியில் வெறும் 46,247 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருந்தன. சுமார் 79 சதவீதம் விற்பனை வளர்ச்சியை நெக்ஸான் நடப்பாண்டில் பெற்றிருக்கின்றது. இந்த காரை தற்போது மின்சார வெர்ஷனிலும் டாடா விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த தேர்விற்கும் சந்தையில் மிக சிறப்பான டிமாண்ட் நிலவிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

போட்டியே இல்லாததைபோல் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் டாப் 5 கார் மாடல்கள்... இந்தியால இவற்றை அடிச்சுக்க ஆளே இல்ல!

மாருதி சுஸுகி பலினோ (Maruti Suzuki Baleno)

இந்த பட்டியலின் கடைசி இடத்தையும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்பே பிடித்திருக்கின்றது. பலினோ ஓர் பிரீமியம் அம்சங்கள் கொண்ட ஹேட்ச்பேக் காராகும். இந்த வாகனத்திற்கு இந்தியர்கள் மத்தியில் வரவேற்பு சற்றே குறைந்துக் காணப்படுகின்றது. இருப்பினும், அது ஐந்தாவது இடத்தை நடப்பாண்டின் அதிகம் விற்பனையாகிய கார்களின் பட்டியலில் பிடித்திருக்கின்றது.

போட்டியே இல்லாததைபோல் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் டாப் 5 கார் மாடல்கள்... இந்தியால இவற்றை அடிச்சுக்க ஆளே இல்ல!

சென்ற 2021ம் ஆண்டின் முதல் அரையாண்டில் 93,823 யூனிட்டுகள் பலினோ கார்கள் விற்பனையாகிய நிலையில், நடப்பாண்டின் முதல் பாதியில் 74,892 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருக்கின்றன. மாருதி சுஸுகி நிறுவனம் இக்காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை கடந்த பிப்ரவரியிலேயே விற்பனைக்குக் களமிறக்கியது.

போட்டியே இல்லாததைபோல் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் டாப் 5 கார் மாடல்கள்... இந்தியால இவற்றை அடிச்சுக்க ஆளே இல்ல!

வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக நிறுவனம் மேற்கொண்ட இந்த நடவடிக்கை வேலைக்காகவில்லை என்பதை விற்பனைச் சரிவு நமக்கு தெளிவுப்படுத்துகின்றது. மாருதி சுஸுகி பலினோ இந்திய சந்தையில் ரூ. 6,49,000 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 27, 2022, 8:45 [IST]
English summary
Top five best selling cars in the first half of 2022
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+