ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைக்கும் வகையில் 2022ல் அறிமுகமாகிய டாப் 5 கார்கள்! அனைத்துமே வேற லெவல் கார்கள்!
2022 ஆம் ஆண்டை எத்தனை பேருக்கு பிடிச்சிருக்கும்னு தெரியல. ஆனா, கார் பிரியர்களுக்கு இந்த ஆண்டு ரொம்பவே பிடிச்சிருக்கும்னு மிக உறுதியாக கூறலாம். ஏனென்றால், யாருமே எதிர்பார்த்திராத கார் மாடல்களை நடப்பு 2022 ஆம் ஆண்டை அலங்கரிக்கும் விதமாக வாகன உற்பத்தியாளர்கள் அறிமுகம் செய்திருக்கின்றனர். அந்தவகையில், இந்தியாவில் நடப்பாண்டில் அறிமுகமாகிய டாப் ஐந்து சூப்பரான கார்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
மஹிந்திரா ஸ்கார்பியோ என்
இந்தியர்களின் ஃபேவரிட் வாகனங்களில் ஸ்கார்பியோவும் ஒன்று என தாராளமாகக் கூறலாம். இதனால்தான் பல ஆண்டுகளைக் கடந்து இப்போதும் இந்த எஸ்யூவி ரக கார் மாடல் சந்தையில் விற்பனையில் இருக்கின்றது. இத்தகைய காரை சிறப்பிக்கும் விதமாக மஹிந்திரா நிறுவனம் கொண்டு வந்ததே ஸ்கார்பியோ என். வழக்கமான ஸ்கார்பியோவைக் காட்டிலும் பல மடங்கு அதிக சிறப்புகள் கொண்ட எஸ்யூவி ரக காராக இதனை மஹிந்திரா நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது.

அளவிலும் வழக்கமான ஸ்கார்பியோவைக் காட்டிலும் இது சற்று பெரியதாக உள்ளது. இதுபோன்ற தனி சிறப்புகளை இந்த கார் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயோ என்னமோ இந்த காருக்கும் இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. பழைய தலைமுறை ஸ்கார்பியோவிற்கே டஃப் கொடுக்கும் வகையில் அதற்கு வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரை இரு விதமான மோட்டார் தேர்வில் மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு வழங்குகின்றது.
200 பிஎச்பி திறன் கொண்ட பெட்ரோல் மோட்டார் மற்றும் 130 பிஎச்பி டீசல் ஆகிய இரு விதமான மோட்டார் தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த காரை சமீபத்தில் குளோபல் என்சிஏபி மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது. இந்த ஆய்வில் ஸ்கார்பியோ என் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களைப் பெற்று அசத்தியது குறிப்பிடத்தகுந்தது. தற்போதைய நிலவரப்படி இந்த கார் ரூ. 11.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா:
இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்யூவி ரக கார் மாடலில் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாராவும் ஒன்று. இந்த காரை மாருதி சுஸுகி நிறுவனம் டொயோட்டா நிறுவனத்துடனான கூட்டணியின் கீழே உருவாக்கியிருக்கின்றது. மிக சிறந்த மைலேஜ் தரும் வாகனமாக இதனை நிறுவனம் உருவாக்கியிருப்பது கூடுதல் சிறப்பு தகவலாக உள்ளது. மைல்டு ஹைபிரிட் மற்றும் ஸ்ட்ராங் ஹைபிரிட் என இரு விதமான ஆப்ஷன்களில் இந்த வாகனம் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இதன் மைல்டு ஹைபிரிட் வெர்ஷன் ரூ. 10.45 லட்சம் தொடங்கி ரூ. 16.89 லட்சம் வரையிலான விலையிலும், ஸ்ட்ராங் ஹைபிரிட் வெர்ஷன் ரூ. 17.99 லட்சம் தொடங்கி ரூ. 19.49 லட்சம் வரையிலான விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் மைலேஜ் திறன் லிட்டருக்கு 21கிமீ தொடங்கி 27.97 கிமீட்டராக உள்ளது. இத்தகைய சூப்பரான திறன்கள் கொண்ட காராகவே இந்தியாவில் மாருதி சுஸுகியின் கிராண்ட் விட்டாரா கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
மஹிந்திரா எக்ஸ்யூவி 300 டர்போ ஸ்போர்ட்:
நடப்பாண்டில் இந்தியாவில் அறிமுகமாகிய மிக தரமான கார் மாடல்களில் மஹிந்திரா எக்ஸ்யூவி 300 டர்போ ஸ்போர்ட்டும் ஒன்று. இந்த காரை வழக்கமான எக்ஸ்யூவி 300-ஐக் காட்டிலும் பல மடங்கு அதிக திறன் வெளியேற்றும் கொண்டதாக மஹிந்திரா நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதற்காக 1.2 லிட்டர் எம்ஸ்டாலின் டிஜிடிஐ மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டாரைக் கொண்டிருக்கும் ஒரே எஸ்யூவி ரக கார் இதுதான் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டார் 5,000 ஆர்பிஎம்மில் 130 பிஎஸ் பவரையும், 230 என்எம் டார்க் திறனை 1,500 - 3,750 ஆர்பிஎம்மில் வெளிப்படுத்தும். ரூ11.65 லட்சம், டூயல் டோன் விலை ரூ11.80 லட்சமாகும். W8(O) TGDi வேரியன்டும் மோனோ மற்றும் டூயல் டோனில் கிடைக்கிறது. ரூ. 12.75 லட்சம் தொடங்கி ரூ. 12.90 லட்சம் வரையில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
கியா இவி6:
கியா நிறுவனத்தின் இந்தியாவிற்கான முதல் எலெக்ட்ரிக் இவி6 ஆகும். இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் கணிசமான அளவு சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, சொகசு வசதிகளை அதிகம் விரும்புவோர்கள் மத்தியில் இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மெட்ராஸ் திரைப்பட நடிகையான கேத்ரின் தெரசாகூட இந்த காரை மிக சமீபத்தில் வாங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. மிக அழகிய காராக இதனை கியா நிறுவனம் வடிவமைத்துள்ளது. அதுமட்டுமில்லைங்க ஃபுல் சார்ஜில் 700 கிமீ ரேஞ்ஜை வழங்கும் வகையில் பெரிய பேட்டரி பேக் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 77.4 kWh பேட்டரி பேக்கே இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 59.95 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
டாடா டியாகோ இவி:
டாடா மோட்டார்ஸின் மலிவு விலை எலெக்ட்ரிக் காராக டியாகோ இவி இருக்கின்றது. இதன் விலை ரூ. 8.49 லட்சம் ஆகும். இந்த காரை இரு விதமான பேட்டரி பேக் தேர்வில் டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. 19.2 kWh மற்றும் 24 kWh என்கிற இரு விதமான பேட்டரி பேக் தேர்வுகளிலேயே டியாகோ இவி விற்பனைக்குக் கிடைக்கின்றது. முதல் ஒன்று ஃபுல் சார்ஜில் 250 கிமீ ரேஞ்ஜையும், அடுத்த ஒன்று 315 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும் திறன் கொண்டது.


Click it and Unblock the Notifications








