கெத்து காட்டிய டாடா, ஸ்கோடா நிறுவனங்கள்... வாயை பிளந்த போட்டியாளர்கள்... மேட்டர் என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க
அதிகம் விற்பனை செய்யப்பட்ட செடான் கார்களின் பட்டியலில் டாடா மற்றும் ஸ்கோடா நிறுவனங்கள் கெத்து காட்டியுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 செடான் கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், மாருதி சுஸுகி டிசையர் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14,073 டிசையர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டு ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை 10,701 ஆக குறைந்துள்ளது. இது 24 சதவீத வீழ்ச்சியாகும்.

விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும், மாருதி சுஸுகி டிசையர் முதலிடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. இந்த பட்டியலில் ஹோண்டா அமேஸ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் மாதம் 4,467 அமேஸ் கார்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை 3,920 ஆக மட்டுமே இருந்தது.

இது 14 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் ஹூண்டாய் அவ்ரா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3,347 ஆக இருந்த ஹூண்டாய் அவ்ரா காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஏப்ரல் மாதம் 4,035 ஆக உயர்ந்துள்ளது. இது 21 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் டாடா டிகோர் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1,627 டிகோர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை 3,803 ஆக உயர்ந்துள்ளது. இது 134 சதவீத வளர்ச்சியாகும். இது மிக பிரம்மாண்டமான வளர்ச்சி என்பதில் சந்தேகமில்லை. டாடா டிகோர் காரானது, ஐசி இன்ஜின், எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி என மூன்று விதமான எரிபொருள் தேர்வுகளில் கிடைக்கிறது.

இது டாடா டிகோர் காரின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் புது வரவான ஸ்கோடா ஸ்லாவியா ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் மாதம் ஸ்கோடா நிறுவனம் 2,431 ஸ்லாவியா கார்களை விற்பனை செய்துள்ளது. ஸ்கோடா ஸ்லாவியா கார் நடப்பாண்டுதான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

எனவே இதன் விற்பனை எண்ணிக்கையை கடந்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிட முடியாது. இந்த பட்டியலில் ஹோண்டா சிட்டி ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3,128 ஹோண்டா சிட்டி கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டு ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை 2,300 ஆக குறைந்துள்ளது. இது 26 சதவீத வீழ்ச்சியாகும்.

ஹோண்டா நிறுவனம் வெகு சமீபத்தில்தான் சிட்டி செடானின் ஹைப்ரிட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சரான நிதின் கட்காரி கூட சமீபத்தில் பார்வையிட்டார். இந்த புதிய மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே இந்த பட்டியலில் ஹூண்டாய் வெர்னா ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2,552 ஆக இருந்த ஹூண்டாய் வெர்னா காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஏப்ரல் மாதம் வெறும் 781 ஆக குறைந்துள்ளது. இது 69 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் மாருதி சுஸுகி சியாஸ் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1,567 ஆக இருந்த சியாஸ் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஏப்ரல் மாதம் வெறும் 579 ஆக குறைந்துள்ளது. இது 63 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் ஸ்கோடா ஆக்டேவியா காருக்கு ஒன்பதாவது இடம் கிடைத்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரலில் ஸ்கோடா நிறுவனம் விற்பனை செய்திருந்த ஆக்டேவியா கார்களின் எண்ணிக்கை வெறும் 5 மட்டுமே.

ஆனால் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது. இது 2,840 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் பத்தாவது மற்றும் கடைசி இடத்தை டொயோட்டா கேம்ரி பிடித்துள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் மாதம் 129 டொயோட்டா கேம்ரி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் டாடா டிகோர் மற்றும் ஸ்கோடா ஆக்டேவியா ஆகிய 2 கார்களும் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

வெகு விரைவில் செடான் செக்மெண்ட்டில் போட்டி அதிகரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவின் மிட்-சைஸ் செடான் செக்மெண்ட்டில் வெகு விரைவில் விர்டுஸ் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. ஹோண்டா சிட்டி, ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் மாருதி சுஸுகி சியாஸ் போன்ற கார்களுக்கு இது நேரடி போட்டியாக இருக்கும். ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்றாகும்.


Click it and Unblock the Notifications








