இந்தியாவில் தற்சமயம் அதிக பேரால் தேர்வு செய்யப்படும் எஸ்யூவி கார்!! இதுதான்... செம்ம குஷியில் டாடா மோட்டார்ஸ்!

கடந்த சில வருடங்களில் எஸ்யூவி கார்கள் விரிவு செய்திருக்கும் சந்தை பெரியது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிலை நமது இந்தியாவில் மட்டுமில்லை. உலக நாடுகள் பலவற்றிலும் எஸ்யூவி கார்கள் விற்பனையில் மிகுந்த ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இந்தியாவில் தற்சமயம் அதிக பேரால் தேர்வு செய்யப்படும் எஸ்யூவி கார்!! இதுதான்... செம்ம குஷியில் டாடா மோட்டார்ஸ்!

இதனாலேயே முன்னணி கார் பிராண்ட்கள் அனைத்தும் குறைந்தது ஒரு எஸ்யூவி காரையாவது தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. இவ்வாறு விற்பனை செய்யப்படும் எஸ்யூவி கார்களில் கடந்த ஜனவரி மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்டவைகளை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் தற்சமயம் அதிக பேரால் தேர்வு செய்யப்படும் எஸ்யூவி கார்!! இதுதான்... செம்ம குஷியில் டாடா மோட்டார்ஸ்!

புதிய 2022ஆம் காலாண்டர் ஆண்டின் முதல் மாதத்தில் டாடா நெக்ஸான் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி மாடலாக முதலிடத்தை பிடித்துள்ளது. 2017இல் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும், சமீப மாதங்களாக தான் நெக்ஸானிற்கு மிக அதிகப்படியான வரவேற்பு திடீரென கிடைப்பதுபோல் உள்ளது. கடந்த 2021 டிசம்பர் மாதத்திலும் அதிகம் விற்கப்பட்ட எஸ்யூவி காராக நெக்ஸான் இருந்தது.

இந்தியாவில் தற்சமயம் அதிக பேரால் தேர்வு செய்யப்படும் எஸ்யூவி கார்!! இதுதான்... செம்ம குஷியில் டாடா மோட்டார்ஸ்!

கடந்த ஜனவரி மாதத்தில் மொத்தம் 13,816 நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதுவே 2021 ஜனவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை வெறும் 8,225 ஆக இருந்தது. இந்த வகையில் நெக்ஸான் கார்களின் விற்பனை கிட்டத்தட்ட 67.9% வருடம்-வருடம் ஒப்பீடுகையில் கடந்த மாதத்தில் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தற்சமயம் அதிக பேரால் தேர்வு செய்யப்படும் எஸ்யூவி கார்!! இதுதான்... செம்ம குஷியில் டாடா மோட்டார்ஸ்!

நெக்ஸானின் இத்தகைய வளர்ச்சி உண்மையில் ஆச்சிரியம் அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது. இத்தனைக்கும் இதன் பின்பே நெக்ஸானின் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் மாடலை சந்தையில் அறிமுகப்படுத்த டாடா திட்டமிட்டு வருகிறது. இந்த அறிமுகத்திற்கு பிறகு டாடா நெக்ஸான் கார்களின் விற்பனை மேலும் உச்சத்தை தொட பிரகாசமாக வாய்ப்புள்ளது.

Rank Model Jan 2022 Jan 2021 Growth (%)
1 Tata Nexon 13,816 8,225 67.9
2 Kia Seltos 11,483 9,869 16.3
3 Hyundai Venue 11,377 11,779 -3.4
4 Tata Punch 10,027 - -
5 Hyundai Creta 9,869 12,284 -19.6
6 Maruti Vitara Brezza 9,576 10,623 -9.8
7 Kia Sonet 6,904 8,859 -22
8 Mahindra Thar 4,646 3,152 47.3
9 Mahindra XUV300 4,550 4,612 -1.3
10 Mahindra XUV700 4,119 - -
இந்தியாவில் தற்சமயம் அதிக பேரால் தேர்வு செய்யப்படும் எஸ்யூவி கார்!! இதுதான்... செம்ம குஷியில் டாடா மோட்டார்ஸ்!

டாடா நெக்ஸானிற்கு அடுத்து இந்த லிஸ்ட்டில் கியா செல்டோஸ் எஸ்யூவி கார்கள் 11,483 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளன. இந்த தென்கொரிய எஸ்யூவி காரின் விற்பனையும் இந்தியாவில் 2021 ஜனவரியை காட்டிலும் கடந்த மாதத்தில் 16.3 சதவீதம் என்கிற அளவில் அதிகரித்துள்ளது. ஏனெனில் அந்த மாதத்தில் 9,869 யூனிட் செல்டோஸ் கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்தியாவில் தற்சமயம் அதிக பேரால் தேர்வு செய்யப்படும் எஸ்யூவி கார்!! இதுதான்... செம்ம குஷியில் டாடா மோட்டார்ஸ்!

கியா செல்டோஸின் ஆயுட் காலத்தை அதிகரிக்கும் வகையிலான அதன் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் நடப்பு 2022ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மூன்றாவது இடத்தை ஹூண்டாய் வென்யூ 11,377 யூனிட்களின் விற்பனை உடன் பிடித்துள்ளது. 2021 ஜனவரியிலும் (11,779 யூனிட்கள்) கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான வென்யூ கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன என்றாலும், அந்த மாதத்தில் லிஸ்ட்டில் 2வது இடத்தை இந்த ஹூண்டாய் எஸ்யூவி மாடல் பெற்றிருந்தது.

இந்தியாவில் தற்சமயம் அதிக பேரால் தேர்வு செய்யப்படும் எஸ்யூவி கார்!! இதுதான்... செம்ம குஷியில் டாடா மோட்டார்ஸ்!

டாடா மோட்டார்ஸில் இருந்து கடந்த ஆண்டில் புத்தம் புதிய எஸ்யூவி மாடலாக அறிமுகப்படுத்தப்பட்ட பஞ்ச் இந்த லிஸ்ட்டில் நான்காவது இடத்தை சொந்தமாக்கியுள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா போன்ற பிரபலமான எஸ்யூவி கார்களை விற்பனையில் பின்னுக்கு தள்ளி இருக்கும் பஞ்ச் கடந்த 2022 ஜனவரி மாதத்தில் மொத்தமாக 10,027 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவை 4 மட்டுமே விற்பனையில் 10 ஆயிரம் என்ற மைல்கல்லை கடந்த எஸ்யூவி கார்களாகும்.

இந்தியாவில் தற்சமயம் அதிக பேரால் தேர்வு செய்யப்படும் எஸ்யூவி கார்!! இதுதான்... செம்ம குஷியில் டாடா மோட்டார்ஸ்!

இதற்கு கீழ் உள்ளவை அதற்கும் குறைவான யூனிட்களே விற்பனையில் பதிவு செய்துள்ளன. இந்த வகையில் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களில் உள்ள ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 9,869 மற்றும் 9,576 ஆகும். ஆனால் இவை இரண்டின் 2021 ஜனவரி மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 12,284 மற்றும் 10,623 யூனிட்களாக இருந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 3, 2022, 12:37 [IST]
English summary
Top selling suv january 2022 tata nexon punch xuv300 venue creta details
மேலும்... #விற்பனை #sales
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+