தரமான காரை வாங்கிய ரேப் பாடகர்!.. இவரை யாருனு தெரியுதா?.. ராஷ்மிகாவை சுற்றி சுற்றி வந்தவர்ல இவரும் ஒருவர்!

டாப் டக்கர் பாடலில் ராஷ்மிகா மந்தனாவை சுற்றி சுற்றி வரும் கேரக்டராக நடித்தவர்களில் ரேப் பாடகர் பாட்ஷாவும் ஒருவர். இவர் தற்போது மிக விலையுயர்ந்த சொகுசு கார் ஒன்றை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

தரமான காரை வாங்கிய ரேப் பாடகர்!.. இவரை யாருனு தெரியுதா?.. ராஷ்மிகாவை சுற்றி சுற்றி வந்தவர்ல இவரும் ஒருவர்!

இந்தியர்களை தெறிக்க விட்ட ஆல்பம் பாடல்களில் 'டாப் டக்கர்' பாடலும் ஒன்று. முதலில் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகள் கலந்த கலவையாக ஆரம்பிக்கும் இந்த பாடல் யுவானின் தோன்றலுக்கு பின்னர் தமிழில் பட்டையைக் கிளப்பும். மும்மொழிகள் கலந்த கலவையாக டாப்பர் உருவாகியிருப்பதனால், அப்பாடலுக்கு பன்முக ரசிகர்கள் உள்ளனர்.

தரமான காரை வாங்கிய ரேப் பாடகர்!.. இவரை யாருனு தெரியுதா?.. ராஷ்மிகாவை சுற்றி சுற்றி வந்தவர்ல இவரும் ஒருவர்!

இளைஞர்களின் கனவு கன்னியான ராஷ்மிகா மந்தனாவின் அழகிய குத்தாட்டம் மற்றும் யுவானின் சிறப்பு தோன்றல் டாப்பர் பாடலுக்கு பலமடங்கு கூடுதல் பூஸ்ட்டை சேர்க்கும் வகையில் அமைந்தது. இந்த பாடலில் யுவான்ஷங்கர் ராஜா உடன் சேர்ந்து இன்னும் இரு முன்னணி பாடகர்களும் டாப் டக்கர் பாடலுக்கு தங்களின் குரல் வலிமையை சேர்த்திருக்கின்றனர்.

தரமான காரை வாங்கிய ரேப் பாடகர்!.. இவரை யாருனு தெரியுதா?.. ராஷ்மிகாவை சுற்றி சுற்றி வந்தவர்ல இவரும் ஒருவர்!

உச்சனா அமித் மற்றும் ரேப்பர் பாட்ஷா ஆகியோரே யுவானுடன் இணைந்து டாப்பு டக்கர் பாடலை பாடியிருக்கின்றனர். இவர்களில் ஒருவரே ஆடி நிறுவனத்தின் விலையுயர்ந்த காரை தற்போது வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாடலில் கொழு கொழு பாயாக, ராஷ்மிகா மந்தனாவை சுற்றி சுற்றி வரும் பாட்ஷாவே ஆடி நிறுவனத்தின் மிக மிக விலையுயர்ந்த கார் மாடலான க்யூ8-ஐ வாங்கியவர் ஆவார்.

தரமான காரை வாங்கிய ரேப் பாடகர்!.. இவரை யாருனு தெரியுதா?.. ராஷ்மிகாவை சுற்றி சுற்றி வந்தவர்ல இவரும் ஒருவர்!

ஆடி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கி வரும் மிக முக்கியமான சொகுசு வாகன மாடல்களில் க்யூ8-ம் ஒன்று. விலைக்கேற்ப ஆடம்பரம் மற்றும் லக்சூரி அம்சங்களை மிக ஏராளமாக இக்கார் தாங்கியிருக்கின்றது. எனவேதான் இதன் விலை கோடி ரூபாய்க்கும் அதிகமானதாக உள்ளது.

தரமான காரை வாங்கிய ரேப் பாடகர்!.. இவரை யாருனு தெரியுதா?.. ராஷ்மிகாவை சுற்றி சுற்றி வந்தவர்ல இவரும் ஒருவர்!

மிக துள்ளியமாகக் கூற வேண்டுமானால் ரூ. 1.38 கோடிக்கும் அதிகமான தொகையைக் கொடுத்தே ரேப் பாடகர் சொகுசு காரை வாங்கியிருக்கின்றார். தனது புதிய கார் கொள்முதல்குறித்த தகவலை பாட்ஷா அவரது இன்ஸ்டா பக்கத்தின் வாயிலாக தெரிவித்திருக்கின்றார்.

தரமான காரை வாங்கிய ரேப் பாடகர்!.. இவரை யாருனு தெரியுதா?.. ராஷ்மிகாவை சுற்றி சுற்றி வந்தவர்ல இவரும் ஒருவர்!

காருடன் நிற்கும் படத்தை பகிர்ந்த அவர், "என்னை போன்றே மிகவும் ஸ்டைலாக இக்கார் இருக்கிறது. ஆடி க்யூ8 உடன் என்னுடைய பயணத்தை ஆடி தொடங்குவதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளேன்" என்று கூறியிருக்கின்றார். இத்துடன், ஆடி கார் விற்பனையாளர், தில்லன் பல்பிர் உள்ளிட்ட சிலருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அப்பதிவில் கூறியுள்ளார்.

தரமான காரை வாங்கிய ரேப் பாடகர்!.. இவரை யாருனு தெரியுதா?.. ராஷ்மிகாவை சுற்றி சுற்றி வந்தவர்ல இவரும் ஒருவர்!

பாட்ஷா மிகவும் ஃபேமஸான ரேப் பாடகர் ஆவார். இவர் இந்தி, பஞ்சாபி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடியிருக்கின்றார். ஆகையால், இவருக்கென பாலிவுட்டில் தனி ரசிக பட்டாளமே உண்டு. இந்த நிலையிலேயே தான் புதிய கார் வாங்கியிருப்பதை தன் ரசிகர்களுக்கு பாட்ஷா தெரியப்படுத்தியிருக்கின்றார்.

தரமான காரை வாங்கிய ரேப் பாடகர்!.. இவரை யாருனு தெரியுதா?.. ராஷ்மிகாவை சுற்றி சுற்றி வந்தவர்ல இவரும் ஒருவர்!

இவரிடத்தில் ஏற்கனவே பல்வேறு சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. ரோல்ஸ் ராய்ஸ் விரைத் காரைகூட அவர் பயன்படுத்தி வருகின்றார். இந்த காரை கடந்த 2019ம் ஆண்டிலேயே அவர் வாங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே தன்னுடைய கார் நிறுத்துமிடத்தை அலங்கரிக்கும் விதமாக புதிய ஆடி சொகுசு காரை வாங்கியிருக்கின்றார்.

தரமான காரை வாங்கிய ரேப் பாடகர்!.. இவரை யாருனு தெரியுதா?.. ராஷ்மிகாவை சுற்றி சுற்றி வந்தவர்ல இவரும் ஒருவர்!

ஆடி க்யூ8 ஓர் கூபே ரக எஸ்யூவி கார் மாடலாகும். இக்காரில் 3.0 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 340 பிஎச்பி பவர் மற்றும் 500 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இத்தகைய சூப்பர் திறன் வெளிப்பாட்டு வசதியை மட்டுமில்லைங்க மிக அதிக ஆடம்பர வசதிகளையும் க்யூ8 கொண்டிருக்கின்றது.

தரமான காரை வாங்கிய ரேப் பாடகர்!.. இவரை யாருனு தெரியுதா?.. ராஷ்மிகாவை சுற்றி சுற்றி வந்தவர்ல இவரும் ஒருவர்!

அந்தவகையில், மசாஜ் மற்றும் வென்டிலேஷன் வசதிக் கொண்ட இருக்கைகள், 4-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஃப்ரேக்ரன்ஸ் மற்றும் ஐயோனைசர் உள்ளிட்ட வசதிகளை இக்கார் பெற்றிருக்கின்றது. இத்துடன், 10.1 மற்றும் 8.6 இன்சஸ் கொண்ட இரு பெரிய திரைகள் காரின் டேஷ்போர்டில் வழங்கப்பட்டுள்ளன. இது பல தரப்பட்ட முக்கிய தகவல்களை வழங்க உதவும். இதுதவிர 12.3 அங்குல உயர் ரெசல்யூஷன் கொண்ட திரை ஒன்றும் இக்காரில் கொடுக்கப்பட்டுள்ளது

தரமான காரை வாங்கிய ரேப் பாடகர்!.. இவரை யாருனு தெரியுதா?.. ராஷ்மிகாவை சுற்றி சுற்றி வந்தவர்ல இவரும் ஒருவர்!

தொடர்ந்து, காரின் கவர்ச்சியை கூட்டும் வகையில் கட்டுமஸ்தான பாடி பேனல்கள், எச்டி மேட்ரிக்ஸ் ரக எல்இடி ஹெட்லேம்ப், பிரத்யேக எல்இடி டிஆர்எல்கள் உள்ளிட்டவை ஆடி க்யூ8-இல் வழங்கப்பட்டுள்ளன. கூடுதல் சிறப்பு வசதியாக நேச்சுரல் லாங்குவேஜ் வாய்ஸ் கன்ட்ரோல், மை ஆடி இணைப்பு உள்ளிட்ட அம்சங்களும் ஆடி க்யூ8 காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, May 9, 2022, 11:29 [IST]
English summary
Top tucker singer badshah buys audi q8 luxury suv
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+