டாப் வேரியன்டை குறி வச்சுட்டாங்க! ஹைகிராஸ் காருக்கு புக்கிங் வந்து குவியுது!

டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா ஹைகிராஸ் காருக்கான புக்கிங் துவங்கப்பட்டு நடந்து வரும் சூழ்நிலையில் இந்த காரின் டாப் வேரியன்ட் காருக்கு தான் புக்கிங் அதிகமாக குவிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

டொயோட்டா நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் இந்தோனேஷியாவில் தனது இன்னோவா ஹைகிராஸ் காரை அறிமுகப்படுத்தியது. இங்கு அறிமுகமான 4வது நாளே இந்தியாவிலும் அறிமுகமாகிவிட்டது. இந்த கார் பிரிமியம் எம்பிவி காராக இந்தியாவிற்குள் விற்பனைக்கு வரவுள்ளது. இந்தகார் அறிமுகமான போதே இந்த காருக்கான புக்கிங் துவங்கிவிட்டது. டொயோட்டாவின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடம் இந்த காருக்கான புக்கிங்கை செய்து கொள்ளலாம் .

டாப் வேரியன்டை குறி வச்சுட்டாங்க! ஹைகிராஸ் காருக்கு புக்கிங் வந்து குவியுது!

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரை பொருத்தவரை மொத்தம் G, GX, VX, ZX மற்றும் ZX (O) என மொத்தம் 5 வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த காருக்கான விலை இதுவரை வெளியாகவில்லை. அடுத்த மாதம் தான் இந்த காரின் விலைகுறித்த விபரங்கள் வெளியிடப்படும் என்றும். விலை வெளியாகி ஒரு சில நாட்களிலேயே இந்த காரின் டெலிவரியும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னோவா ஹைகிராஸ் காரை பொருத்தவரை இன்னோவா கிரைஸ்டா காரை விட அதிக பிரிமியம் வசதிகளுடன் அதிக மஸ்குலராக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கிரைஸ்டா காரை விட அதிகமான தொழிற்நுட்ப அம்சங்கள் நிறைந்த காராக இந்த கார் இருக்கிறது. இந்நிலையில் தற்போது இந்த காருக்கான புக்கிங் நடந்து வரும் நிலையில் இந்த காரின் டாப் வேரியன்களான ZX மற்றும் ZX (O) ஆகிய வேரியன்ட்களுக்கு தான் புக்கிங் அதிக அளவில் நடந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரின் டாப் வேரியன்டை பொருத்தவரை அது ஸ்டிராங்க் ஹைபிரிட் இன்ஜினை கொண்ட காராகும். இந்த காரில் இது மட்டுமல்ல பல அட்வான்ஸ்டு தொழிற்நுட்பங்கள் இருக்கிறது. முக்கியாக ஏடிஏஎஸ் என்ற பாதுகாப்பு அம்சம் இந்த காரில் இருக்கிறது. இந்த கார் இந்தியாவில் 7 சீட்டர் காராக விற்பனைக்கு வருகிறது.

இந்த டாப் வேரியன்ட் காரின் விற்பனையைப் பொருத்தவரை 2.0 லிட்டர் 4-சிலிண்டர் அட்கின்சன் சைக்கிள் என்ஜிஏ பெட்ரோல் ஸ்டிராங்க் ஹைபிரிட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 186 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது இ-சிவிடி ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஒரு லிட்டரக்கு 21.1 கி.மீ மைலேஜை வழங்கும் திறன் கொண்டது.

இந்த காரில் ஃப்ளோட்டிங் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டூயல் பேன் பானரோமிக் சன் ரூஃப் முன்பக்கத்தில் வென்டிலேட்டட் மற்றும் பவர்டு சீட், மல்டிபிள் ஏர் பேக்கள், 18இன்ச் அலாய் வீல்கள், அனைத்து வீல்களுக்குமான டிஸ்க் பிரேக், எலெக்டரோ க்ரோமிக் ஐஆர்விஎம் ஆகிய அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது.

இந்த கார் டிஎன்ஜிஏ-சி பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டது. இது முழுவதுமாக முன்பக்க வீல் டிரைவில் இயங்கும் திறன் கொண்டது. இந்த காரின் முக்கியமான பாதுகாப்பு அம்சமாக டொயோட்டா சேஃப்டி சென்ஸ் 3.0 சூட் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஹைபீம் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்டோல், லேன் கீம் அசிஸ்ட், லேன் டிப்ரேட்ச்சர் அலர்ட், ரியர் கிராஸ் டிராஃபிக் வார்னிங், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டரிங் ஆகிய அம்சங்களுடன் இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Top variant of Toyota Innova hycross getting more bookings
Story first published: Friday, December 9, 2022, 18:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X