மின்னல் முரளி வாங்கிய மின்னல் வேகத்தில் செல்லும் கார்! நாட்டிலேயே இந்த கார இவருதான் முதல் ஆளா வாங்கியிருக்காரு

மலையாளம், தமிழ் என தென்னிந்தியாவின் முன்னணி மொழிகளில் பல விதமான ரோல்களை நடித்துள்ளார் டோவினோ தாமஸ். இவரே இந்தியாவிலேயே முதல் ஆளாக லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் சொகுசு காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மாரி 2, மின்னல் முரளி போன்ற முன்னணி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் டோவினோ தாமஸ். இவருடைய நடிப்பில் வெளி வந்த திரைப்படங்களை போலவே இவரிடத்தில் அதிக எண்ணிக்கையில் சொகுசு கார்கள் உள்ளன. உயர் ரக சொகுசு வாகனங்கள் பல இருக்கின்றன. இந்த நிலையிலேயே சமீபத்தில் மேலும் ஓர் சொகுசு காரை வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2023 ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் காரையே அவர் வாங்கியிருக்கின்றார்.

டோவினோ தாமஸ்

Image Courtesy: Kochi Lifestyle

இந்தியாவிலேயே இந்த வெர்ஷன் காரை வாங்கும் முதல் பிரபலம் இவரே ஆவார். ஆகையால், ஒட்டுமொத்த திரையுலகின் கவனமும் இவரின் பக்கம் திரும்பியிருக்கின்றது. மிக சமீபத்திலேயே லேண்ட் ரோவர் நிறுவனம் 2023 ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது மூன்றாம் தலைமுறை வெர்ஷனாகும். இந்த லேட்டஸ்ட் தயாரிப்பையே விற்பனைக்கு வந்த சில நாட்களிலேயே டோவினோ தாமஸ் வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார்.

இந்த காரின் விலை ரூ. 1.64 கோடிகள் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேலையில், இது ஆரம்ப நிலை மாடலின் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் உயர்நிலை தேர்வு ரூ. 1.84 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலையே ஆகும். இத்தகைய விலை உயர்ந்த சொகுசு காரையே டோவினோ தாமஸ் தற்போது புதிதாக வாங்கியிருக்கின்றார். இந்த சொகுசு கார் மணிக்கு 234 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டோவினோ தாமஸ்

தன்னுடைய இந்த மின்னல் வேக கார் கொள்முதல்குறித்த தகவலை இணையத்தின் வாயிலாக அவர் தெரிவித்துள்ளார். காருடன் அவர் நிற்பது போன்ற படங்களே இணையத்தில் வெளியாகி உள்ளன. முந்தைய தலைமுறையைக் காட்டிலும் மிக முரட்டுத் தனமான வெர்ஷனாக லேட்டஸ்ட் ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் ஸ்டைலும், அதில் வழங்கப்பட்டிருக்கும் அம்சங்களும்கூட காரின் முரட்டுத் தனமான தோற்றத்திற்கு ஏதுவானதாகவே உள்ளது. பொதுவாக அதிக வேகத்தில் செல்லக் கூடிய வாகனங்கள் ஷார்ப்பான முகப் பகுதி தோற்றத்துடனேயே உருவாக்க்கப்பட்டிருக்கும்.

ஆனால், இந்த காரோ பெரிய பெட்டி போன்று உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய தனித்துவமான தோற்றத்தைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே உலகளவில் இந்த காருக்கு ஃபேன்கள் மிக அதிகமாக உள்ளனர். மேலும், காரை கூடுதல் சிறப்பானதாக மாற்றும் விதமாக ஃப்ளஷ் ஃபிட்டிங் டூர் ஹேண்டில்கள், லேசான ஸ்லோப்பாக காணப்படும் ரூஃப், ஸ்மூத்தான முனைகள் என மாறுபட்ட வடிவமைப்பு யுக்தியையே இந்த காரில் லேண்ட் ரோவர் கையாண்டு உள்ளது.

டோவினோ தாமஸ்

இந்த பிரத்யேக வடிவமைப்பு யுக்தியே கார் சாலையில் செல்லும் தனித்துவமானதாகக் காட்சியளிக்க காரணமாக இருக்கின்றது. காருக்கு கூடுதல் கவர்ச்சி சேர்க்கும் விதமாக சில அலங்கார பொருட்களை (அணிகலன்களை)க் பேக்கேஜ் திட்டத்தின்கீழ் வழங்குகின்றது. 21 அங்குலம் முதல் 23 அங்குலம் வரையிலான வீல் தேர்வுகள் இந்த காரில் வழங்கப்படுகின்றன. டோவினோ தாமஸ் தனது காருக்கு இந்த பேக்கேஜின்கீழ் 23 அங்குல வீலை பொருத்தி உள்ளார்.

இந்த வீல் காருக்கு மேலும் முருட்டுத் தனமான தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இதுதவிர சொகுசு மற்றும் பிரீமியம் அம்சங்கள் ஆகியவற்றாலும் இந்த கார் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இவற்றுடன், 13.1 அங்குல வளைவான தொடுதிரை, டிரைவருக்கான 13.7 அங்குல திரை என இரு திரைகள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த திரை உயர் கிராஃபிக் வசதிகள் கொண்டது ஆகும். இதுமட்டுமின்றி, ஒயர்லெஸ் ஆன்டிராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஒயர்லெஸ் சார்ஜர் மற்றும் அலெக்ஸா ஆகிய தொழில்நுட்பங்கள் இந்த திரைகளில் வழங்கப்பட்டுள்ளன.

இந்த அம்சங்களால் காரின் கேபின் பிரைவேட் ஜெட்டின் உட்பகுதிக்கு இணையானதாக மாறியுள்ளது. இதுமட்டுமின்றி லெதர் பேடால் ஆன டேஷ்போர்டு, பன்முக கன்ட்ரோல்கல் கொண்ட ஸ்டியரிங் வீல், வெண்டிலேட் இருக்கைகள், மசாஜ் செய்யும் வசதிக் கொண்ட இருக்கை என எக்கச்சக்க அம்சங்கள் இக்காரில் கொடுக்கப்பட்டுள்ளன. இதுமாதிரியான சூப்பரான அம்சங்கள் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த காரை டோவினோ தாமஸ் தற்போது வாங்கியிருக்கின்றார். அதுவும் இந்தியாவிலேயே முதல் ஆளாக அவர் வாங்கியுள்ளார்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 15, 2022, 16:02 [IST]
English summary
Tovino thomas range rover sport
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+