டொயோட்டா கார்கள் யாருக்குதான் பிடிக்காது! அதனாலதான் இது நடந்திருக்கு! மூக்கின் மேல் விரல் வைத்த போட்டியாளர்கள்

டொயோட்டா நிறுவனம் தனது போட்டியாளர்களை பிரம்மிக்க வைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டொயோட்டா கார்கள் யாருக்குதான் பிடிக்காது! அதனாலதான் இது நடந்திருக்கு! மூக்கின் மேல் விரல் வைத்த போட்டியாளர்கள்

நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட்டை டொயோட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி டொயோட்டா நிறுவனம் நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் ஒட்டுமொத்தமாக 14,959 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் வெறும் 12,772 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

டொயோட்டா கார்கள் யாருக்குதான் பிடிக்காது! அதனாலதான் இது நடந்திருக்கு! மூக்கின் மேல் விரல் வைத்த போட்டியாளர்கள்

இதன் மூலம் டொயோட்டா நிறுவனம் கார் விற்பனையில் 17 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. வரும் மாதங்களில் டொயோட்டா நிறுவன கார்களின் விற்பனை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் டொயோட்டா நிறுவனத்தின் கார்களுக்கு தற்போது நல்ல எண்ணிக்கையில் முன்பதிவுகள் கிடைத்து வருகின்றன.

டொயோட்டா கார்கள் யாருக்குதான் பிடிக்காது! அதனாலதான் இது நடந்திருக்கு! மூக்கின் மேல் விரல் வைத்த போட்டியாளர்கள்

அத்துடன் எதிர்வரும் பண்டிகை காலத்திலும் கார்களின் விற்பனை இயல்பாகவே அதிகமாக நடக்கும். இந்த 2 காரணங்களாலும் வரும் மாதங்களில் கார்களின் விற்பனை இன்னும் அதிகரிக்கும் என டொயோட்டா நிறுவனம் எதிர்பார்க்கிறது. இதுதவிர விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் மீதும் டொயோட்டா நிறுவனம் மிகுந்த நம்பிக்கையை வைத்துள்ளது.

டொயோட்டா கார்கள் யாருக்குதான் பிடிக்காது! அதனாலதான் இது நடந்திருக்கு! மூக்கின் மேல் விரல் வைத்த போட்டியாளர்கள்

இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா, ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகிய கார்களுடன் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் போட்டியிடும். அத்துடன் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காருக்கும் இது விற்பனையில் சவால் அளிக்கும்.

டொயோட்டா கார்கள் யாருக்குதான் பிடிக்காது! அதனாலதான் இது நடந்திருக்கு! மூக்கின் மேல் விரல் வைத்த போட்டியாளர்கள்

இங்கே குறிப்பிடத்தக்க மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா ஆகிய 2 எஸ்யூவி கார்களுக்கும் இடையே ஏகப்பட்ட ஒற்றுமைகள் இருக்கின்றன. சரி, நாம் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரை பற்றி விஷயத்திற்கு வருவோம்.

டொயோட்டா கார்கள் யாருக்குதான் பிடிக்காது! அதனாலதான் இது நடந்திருக்கு! மூக்கின் மேல் விரல் வைத்த போட்டியாளர்கள்

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரில், 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் மைல்டு ஹைப்ரிட் கே15சி பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 103 பிஎஸ் பவரையும், 135 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படும்.

டொயோட்டா கார்கள் யாருக்குதான் பிடிக்காது! அதனாலதான் இது நடந்திருக்கு! மூக்கின் மேல் விரல் வைத்த போட்டியாளர்கள்

இந்த இன்ஜினுடன் 4 வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதுதவிர 1.5 லிட்டர் மூன்று சிலிண்டர் Atkinson Cycle TNGA ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரில் வழங்கப்பட்டுள்ளது. டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரை கடந்த ஆகஸ்ட் மாதமே இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதாகதான் இருந்தது.

டொயோட்டா கார்கள் யாருக்குதான் பிடிக்காது! அதனாலதான் இது நடந்திருக்கு! மூக்கின் மேல் விரல் வைத்த போட்டியாளர்கள்

ஆனால் எதிர்பாராத காரணங்களால் அதன் அறிமுகம் தள்ளி போய் விட்டது. இதற்கு என்ன காரணம்? என்பதை டொயோட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும் நடப்பு செப்டம்பர் மாதத்தில் டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரை முறைப்படி விற்பனைக்கு கொண்டு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, September 2, 2022, 9:05 [IST]
English summary
Toyota august 2022 sales report
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+