சாவிகூட தயாரிக்க முடியாத நிலைக்குப் போன டொயோட்டா... மீண்டும் கற்காலத்திற்கே போயிடுவாங்க போல...

டொயோட்டா நிறுவனம் உலக அளவில் செமி கண்டெக்டர் தட்டுப்பாட்டில் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. இதனால் சில கார்களுக்கு சாவிகள் கூட தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

சாவிகூட தயாரிக்க முடியாத நிலைக்குப் போன டொயோட்டா . . . மீண்டும் கற்காலத்திற்கே போயிடுவாங்க போல . . .

டொயோட்டா நிறுவனம் உலக அளவில் ஆட்டோமொபைல் துறையில் மிக முக்கியமான நிறுவனம். இந்நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் கோடிக் கணக்கில் வாகனங்களைத் தயார் செய்து விற்பனை செய்து வருகிறது. ஒவ்வொரு நாட்டிற்கும் மக்களின் பயன்பாடு மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வாகனங்களைத் தயாரித்து விற்பனைக்குக் கொண்டுவந்து இன்று முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.

சாவிகூட தயாரிக்க முடியாத நிலைக்குப் போன டொயோட்டா . . . மீண்டும் கற்காலத்திற்கே போயிடுவாங்க போல . . .

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இந்நிறுவனம் தனது வாகனங்களில் புதுப்புது வசதிகளையும் அம்சங்களையும் அறிமுகப்படுத்துவதில் மிக முக்கியமான ஒரு நிறுவனம். இந்நிறுவனம் தங்கள் கார்களில் மற்ற நிறுவனங்கள் வழங்காத வித்தியாசமான வசதிகளை எல்லாம் வழங்கி வருகிறது.

சாவிகூட தயாரிக்க முடியாத நிலைக்குப் போன டொயோட்டா . . . மீண்டும் கற்காலத்திற்கே போயிடுவாங்க போல . . .

இந்நிறுவனம் தான் முதலில் கார்களுக்கு ஸ்மார்ட் கீ என்ற ஒரு விஷயத்தை மார்கெட்டிற்கு அறிமுகப்படுத்தியது. வழக்கமான மெக்கானிக்கல் சாவியாக இல்லாமல் சாவி அருகிலிருந்தாலே டோர் அனலாக் ஆகும் வசதி இந்த காரில் இருக்கிறது.

சாவிகூட தயாரிக்க முடியாத நிலைக்குப் போன டொயோட்டா . . . மீண்டும் கற்காலத்திற்கே போயிடுவாங்க போல . . .

ஜப்பானில் உள்ள 2 கார்களில் இந்த வசதிகளை அந்நிறுவனம் வழங்கி வந்தது. இந்நிலையில் தான் இந்நிறுவனத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறைக்கே பேரிடியாக அமைந்தது சிப் தட்டுப்பாடு.

சாவிகூட தயாரிக்க முடியாத நிலைக்குப் போன டொயோட்டா . . . மீண்டும் கற்காலத்திற்கே போயிடுவாங்க போல . . .

உலகம் முழுவதும் செமி கண்டெக்டர் சிப் தட்டுப்பாடு காரணமாக எலெக்டரானிக் பொருட்கள் தயாரிப்பு மந்தமடைந்து வருகிறது. கார்கள் தயாரிப்புக்கும் செமி கண்டெக்டர் சிப் கட்டாயம். செமி கண்டெக்டர் இல்லாமல் கார்களை இன்று தயாரிக்கவே முடியாது என்ற நிலை வந்துவிட்டது.

சாவிகூட தயாரிக்க முடியாத நிலைக்குப் போன டொயோட்டா . . . மீண்டும் கற்காலத்திற்கே போயிடுவாங்க போல . . .

இதனால் தற்போது கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் முழு கேப்பாசிட்டியில் கார்களை தயாரிக்க முடியவில்லை. இதனால் கார் வாங்க நினைப்பவர்களுக்கான காத்திருப்பு காலம் அதிகரித்துள்ளது. உலக அளவில் பல நிறுவனங்கள் ஓராண்டிற்கு மேல் தங்கள் கார்களை புக் செய்தவர்களுக்கு டெலிவரி செய்ய நேரம் எடுத்துக்கொள்கிறது. டொயோட்டா நிறுவனத்திடமும் சர்வதேச அளவில் அதிக காத்திருப்பு காலம் கொண்ட கார்கள் அதிகமாக இருக்கிறது.

சாவிகூட தயாரிக்க முடியாத நிலைக்குப் போன டொயோட்டா . . . மீண்டும் கற்காலத்திற்கே போயிடுவாங்க போல . . .

இந்நிலையில் ஜப்பானில் அந்நிறுவனம் 2 கார்களுக்கு ஸ்மார்ட் கீ வசதியை வழங்கி வருகிறது என குறிப்பிட்டிருந்தோம், அந்த காருக்கான காத்திருப்பு காலமும் அதிகமாக இருக்கிறது. இந்த காரை தயாரிப்பில் மந்தத்தை ஏற்படுத்துவது ஸ்மார்ட் கீயை தயாரிக்கும் விஷயம் தான்.

சாவிகூட தயாரிக்க முடியாத நிலைக்குப் போன டொயோட்டா . . . மீண்டும் கற்காலத்திற்கே போயிடுவாங்க போல . . .

ஸ்மார்ட் கீ யில் உள்ள செமி கண்டெக்டர் சிப் தட்டுப்பாடு காரணமாக இந்த கார் தயாரிப்பு மந்தமாக இருந்தது. இந்நிலையில் டொயோட்டா நிறுவனம் தற்காலிகமாக இந்த காரிலிருந்து ஸ்மார்ட் கீ அம்சத்தை நீக்கியுள்ளது.

சாவிகூட தயாரிக்க முடியாத நிலைக்குப் போன டொயோட்டா . . . மீண்டும் கற்காலத்திற்கே போயிடுவாங்க போல . . .

அதற்குப் பதிலாகச் சாதாரண மெக்கானிக்கல் கீயையே பொருத்த திட்டமிட்டுள்ளது. இதனால் கார்களின் உற்பத்தியை அதிகம் செய்து இந்த கார்களை புக் செய்தவர்களுக்கு விரைவில் டெலிவரியை கொடுக்க முடியும். ஸ்மார்ட் கீ யின் செமி கண்டர்க்டர் சிப் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கும் வரை இந்த மெக்கானிக்கல் கீயை மட்டுமே இந்த காரில் பொருத்தவும், செமி கண்டெக்டர் தட்டுப்பாடு சரியானவுடன் மீண்டும் ஸ்மார்ட் கீயையே பொருத்தும் முடிவை அந்நிறுவனம் எடுத்துள்ளது.

சாவிகூட தயாரிக்க முடியாத நிலைக்குப் போன டொயோட்டா . . . மீண்டும் கற்காலத்திற்கே போயிடுவாங்க போல . . .

இந்தாண்டு செமி கண்டெக்டர் தட்டுப்பாடு டொயோட்டா நிறுவனத்தை மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது. இது மற்றுமில்லாமல்ல இயற்கை பேரிடர் மற்றும் மற்ற பல விஷயங்களால் டொயோடா நிறுவனம் திண்டாடி வருகிறது.

சாவிகூட தயாரிக்க முடியாத நிலைக்குப் போன டொயோட்டா . . . மீண்டும் கற்காலத்திற்கே போயிடுவாங்க போல . . .

இந்நிறுவனம் இந்தாண்டு துவக்கத்தில் ஆண்டிற்கு 9.7 மில்லியன் கார்களை தயாரிக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது உள்ள நிலையில் இந்த 9.7 மில்லியன் இலக்கை கூட எட்ட முடியாத நிலையில் தான் தற்போது டொயோட்டா நிறுவனம் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, October 28, 2022, 11:17 [IST]
English summary
Toyota downs productions after semiconductor chip shortage
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+