அழுகுபடுத்துவதற்காக செய்த காரியம்... காரையே நாஸ்தி பண்ணிருச்சு... தயவு செய்து இனியும் இப்படி செய்யாதீங்க!

தரமில்லாத அலாய் வீலால் விலையுயர்ந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் மிகக் கடுமையான சேதத்திற்கு ஆளாகியிருக்கின்றது. இந்நிகழ்வு விழிப்புணர்வு பதிவை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

அழுகுபடுத்துவதற்காக செய்த காரியம்... காரையே நாஸ்தி பண்ணிருச்சு... தயவு செய்து இனியும் இப்படி செய்யாதீங்க!

அழகு எப்போதுமே ஆபத்தானது என்பதை நிரூபிக்கும் வகையில் ஓர் சம்பவம் தற்போது அரங்கேறியிருக்கின்றது. இளைஞர் ஒருவர் அவரது காரை அழகுப்படுத்தும் விதமாக செய்த செயல், அந்த காரையே ஒட்டுமொத்தமாக உருக்குலைக்கச் செய்திருக்கின்றது. இன்றைய கால வாகன உரிமையாளர்கள் பலர், தங்களது வாகனங்களை அழகுப்படுத்துவதில் அதிகம் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

அழுகுபடுத்துவதற்காக செய்த காரியம்... காரையே நாஸ்தி பண்ணிருச்சு... தயவு செய்து இனியும் இப்படி செய்யாதீங்க!

வாகன உரிமையாளர்களின் இந்த செயலை ஊக்குவிக்கும் விதமாக சில வாகன உற்பத்தி நிறுவனங்கள் தரமான வாகன அணிகலன்களை புதிய வாகனங்களுடன் சேர்த்து விற்பனைக்கு வழங்கி வருகின்றன. ஆனால், அவை சற்று அதிக விலையைக் கொண்டதாக இருக்கின்றன. தரம் மற்றும் பிற காரணங்களினால் அவை அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

அழுகுபடுத்துவதற்காக செய்த காரியம்... காரையே நாஸ்தி பண்ணிருச்சு... தயவு செய்து இனியும் இப்படி செய்யாதீங்க!

அதேநேரத்தில் பல மடங்கு குறைவான விலையில் வாகனங்களை அலங்காரப்படுத்தக் கூடிய அணிகலன்களும் இங்கு விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவை ஆஃப்டர் மார்க்கெட்டில் நாம் எதிர்பார்ப்பதை விட மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அதேநேரத்தில், அவற்றின் தரம் கேள்விக் குறியானதாக காட்சியளிக்கின்றன.

அழுகுபடுத்துவதற்காக செய்த காரியம்... காரையே நாஸ்தி பண்ணிருச்சு... தயவு செய்து இனியும் இப்படி செய்யாதீங்க!

இதை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் நிகழ்வே தற்போது நம் நாட்டின் குறிப்பிட்ட பகுதியில் அறங்கேறியிருக்கின்றது. டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் உரிமையாளர் ஒருவர் அவரது காரை அலங்கரிக்கும் விதமாக ஆஃப்டர் மார்க்கெட்டில் இருந்து பெறப்பட்ட அலாய் வீலை பயன்படுத்தியிருக்கின்றார். இந்த வீலே விலையுயர்ந்த கார் தற்போது உருக்குலைக்கச் செய்திருக்கின்றது.

அழுகுபடுத்துவதற்காக செய்த காரியம்... காரையே நாஸ்தி பண்ணிருச்சு... தயவு செய்து இனியும் இப்படி செய்யாதீங்க!

காரின் வேகத்தையும், எடையையும் தாங்க முடியாத அந்த வீல் கார் சென்றுக் கொண்டிருக்கும்போதே உடைந்து நொறுங்கியிருக்கின்றது. இதன் விளைவாக டொயோட்டா ஃபார்ச்சூனர் ஆறு முறை வரை சாலையில் உருண்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக அக்கார் மிகக் கடுமையான சேதத்திற்கு ஆளாகியிருக்கின்றது.

அழுகுபடுத்துவதற்காக செய்த காரியம்... காரையே நாஸ்தி பண்ணிருச்சு... தயவு செய்து இனியும் இப்படி செய்யாதீங்க!

சிறிய பள்ளத்தில் கார் இறங்கி-ஏறிய போதே இந்த விபத்து சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. விபத்தை நேரில் பார்த்தவர்கள் சிலர் தெரிவித்ததன் அடிப்படையில் இந்த தகவல் தெரிய வந்திருக்கின்றது. அதேநேரத்தில், இந்த பள்ளத்தில் விழுந்ததுக்கே வீல் உடைஞ்சிருச்சு, என்று பலர் ஆச்சரியமடைந்ததையும் நம்மால் அறிய முடிகின்றது.

அழுகுபடுத்துவதற்காக செய்த காரியம்... காரையே நாஸ்தி பண்ணிருச்சு... தயவு செய்து இனியும் இப்படி செய்யாதீங்க!

ஆனால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் வழங்கும் அலாய் வீல்கள் இதுபோன்ற பள்ளங்களை எல்லாம் அசால்ட் செய்துவிடும். இவை பல கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே வாகனங்களில் பயன்படுத்தப்படுகின்றன. தரமான உலோகத்தால் அவை தயாரிக்கப்படுகின்ற காரணத்தினால் நீண்ட உழைப்பு மற்றும் அதிக உறுதித் தன்மையுடன் காட்சியளிக்கின்றன. இந்த விஷயம் ஆஃப்டர் மார்க்கெட் அலாய் வீல்களில் கேள்விக் குறியாக மாறுவதனாலயே அவற்றினால் விபத்து போன்று அசம்பாவிதங்கள் அரங்கேறுகின்றன.

அழுகுபடுத்துவதற்காக செய்த காரியம்... காரையே நாஸ்தி பண்ணிருச்சு... தயவு செய்து இனியும் இப்படி செய்யாதீங்க!

சந்தைக்கு பிறகான அலாய் வீல்களை பயன்படுத்தும் வாகனங்களுக்கு உத்தரவாதம் ரத்து செய்யப்படும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் சில எச்சரிக்கை விடுத்திருக்கின்றன. சஸ்பென்ஷன் செட்-அப்பை பாதிக்கச் செய்தல், அதிக எடையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களினால் இந்த நடவடிக்கையை வாகன உற்பத்தியாளர்கள் மேற்கொள்கின்றனர்.

ஏன் சில நேரங்களில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்கூட க்ளைமை நிராகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம் என கூறப்படுகின்றது. உற்பத்தி நிறுவனம் வழங்கக் கூடிய உபகரணங்களுக்கு மட்டுமே இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீட்டை வழங்குகின்றன. எனவே, சந்தைக்கு பிறகான பொருட்களுக்கு இன்சூரன்ஸ் க்ளைம் வழங்கப்படுவதில்லை.

அழுகுபடுத்துவதற்காக செய்த காரியம்... காரையே நாஸ்தி பண்ணிருச்சு... தயவு செய்து இனியும் இப்படி செய்யாதீங்க!

ஆகையால், அனைத்து தரப்பிலும் ஆஃப்டர் மார்க்கெட் பொருட்களால் பிரச்னையே அதிகம் என்பது தெளிவாக தெரிகின்றது. இதுபோன்ற காரணங்களினாலேயே வாகனத்துறை வல்லுநர்கள் ஆஃப்டர் மார்க்கெட் வாகன கூறுகளை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர்.

Article Published On: Friday, April 1, 2022, 13:58 [IST]
English summary
Toyota fortuner met crash due to unquality alloy wheels usage
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+