டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை இன்னமும் மக்கள் ரொம்ப நம்பறாங்க... சர்வீசும் சூப்பர்... அதுனாலதான் இது நடந்துச்சு!

டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை இன்னமும் மக்கள் ரொம்ப நம்பறாங்க... சர்வீசும் சூப்பர்... அதுனாலதான் இது நடந்துச்சு!

இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வரும் எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாக டொயோட்டா ஃபார்ச்சூனர் திகழ்கிறது. இது ஃபுல்-சைஸ் எஸ்யூவி கார்களில் ஒன்றாகும். சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்கள், அதிநவீன வசதிகள் என பல்வேறு விதங்களிலும் டொயோட்டா ஃபார்ச்சூனர் இந்திய வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை இன்னமும் மக்கள் ரொம்ப நம்பறாங்க... சர்வீசும் சூப்பர்... அதுனாலதான் இது நடந்துச்சு!

ஆனால் இதை காட்டிலும் மற்றொரு விஷயத்தையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அது நம்பகத்தன்மை. ஆம், டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் மீதான நம்பகத்தன்மை இங்கே மிகவும் அதிகம். அத்துடன் விற்பனைக்கு பிந்தைய சேவை, அதாவது ஆஃப்டர் சேல்ஸ் சர்வீஸ் சிறப்பாக இருப்பதும், டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் விற்பனையில் முன்னணியில் இருப்பதற்கு மிக முக்கியமான காரணம்.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை இன்னமும் மக்கள் ரொம்ப நம்பறாங்க... சர்வீசும் சூப்பர்... அதுனாலதான் இது நடந்துச்சு!

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை நாங்கள் மிகைப்படுத்தி பேசி கொண்டிருக்கவில்லை. அதன் சமீபத்திய விற்பனை தொடர்பான புள்ளி விபரங்களே அதனை நமக்கு மிக தெளிவாக எடுத்து காட்டுகின்றன. டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் கடந்த ஜூன் மாதம் விற்பனையில் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை இன்னமும் மக்கள் ரொம்ப நம்பறாங்க... சர்வீசும் சூப்பர்... அதுனாலதான் இது நடந்துச்சு!

டொயோட்டா நிறுவனம் நடப்பாண்டு ஜூன் மாதம் 3,133 ஃபார்ச்சூனர் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் டொயோட்டா நிறுவனம் வெறும் 571 ஃபார்ச்சூனர் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் வருடாந்திர ரீதியிலான விற்பனை ஒப்பீட்டில் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் 471 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை இன்னமும் மக்கள் ரொம்ப நம்பறாங்க... சர்வீசும் சூப்பர்... அதுனாலதான் இது நடந்துச்சு!

அதே நேரத்தில் நடப்பாண்டு மே மாதத்துடன் ஒப்பிட்டால், ஜூன் மாதத்தில், டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் விற்பனையில் 164 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இவை இரண்டுமே மிகவும் சிறப்பான விற்பனை வளர்ச்சி என்பதில் சந்தேகமில்லை. இந்திய சந்தையில் எம்ஜி க்ளோஸ்ட்டர் போன்ற கார்களுடன் டொயோட்டா ஃபார்ச்சூனர் போட்டியிட்டு வருகிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை இன்னமும் மக்கள் ரொம்ப நம்பறாங்க... சர்வீசும் சூப்பர்... அதுனாலதான் இது நடந்துச்சு!

தற்போதைய நிலையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில், 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.8 லிட்டர் டீசல் ஆகும். இதில், பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 166 ஹெச்பி பவரை வெளிப்படுத்த கூடியது. அதே நேரத்தில் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 177 ஹெச்பி பவரை உருவாக்கும்.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை இன்னமும் மக்கள் ரொம்ப நம்பறாங்க... சர்வீசும் சூப்பர்... அதுனாலதான் இது நடந்துச்சு!

இதில் பெட்ரோல் இன்ஜினுடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. மறுபக்கம் டீசல் இன்ஜினுடன், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை இன்னமும் மக்கள் ரொம்ப நம்பறாங்க... சர்வீசும் சூப்பர்... அதுனாலதான் இது நடந்துச்சு!

இதுதவிர அதிநவீன வசதிகளும், டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் பயணிக்கும் அனுபவத்தை மிகவும் சொகுசாகவும், நடைமுறைக்கு ஏற்றதாகவும் மாற்றுகின்றன. பாதுகாப்பு விஷயத்திலும் டொயோட்டா ஃபார்ச்சூனர் வாடிக்கையாளர்களுக்கு குறை வைப்பதில்லை. ஏராளமான பாதுகாப்பு வசதிகளை ஃபார்ச்சூனர் காரில் டொயோட்டா நிறுவனம் வழங்கியுள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை இன்னமும் மக்கள் ரொம்ப நம்பறாங்க... சர்வீசும் சூப்பர்... அதுனாலதான் இது நடந்துச்சு!

இதில், 7 ஏர்பேக்குகள், ட்ராக்ஸன் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், ஹில்-டெசண்ட் கண்ட்ரோல் போன்றவை மிகவும் முக்கியமானவை. இந்திய சந்தையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் வெற்றிக்கு பின்னால் பல்வேறு முக்கியமான காரணங்கள் உள்ளன. இதில், சக்தி வாய்ந்த இன்ஜின் தேர்வுகள், சௌகரியமான மற்றும் விசாலமான கேபின், நீண்டு கொண்டே செல்லும் வசதிகளின் பட்டியல் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவை மிகவும் முக்கியமானவை.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை இன்னமும் மக்கள் ரொம்ப நம்பறாங்க... சர்வீசும் சூப்பர்... அதுனாலதான் இது நடந்துச்சு!

டொயோட்டா நிறுவனம் தற்போது ஃபார்ச்சூனர் காரின் புதிய ஹைப்ரிட் வெர்ஷனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய ஹைப்ரிட் வெர்ஷன் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே டொயோட்டா நிறுவனம் வெகு சமீபத்தில், அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரையும் பொது பார்வைக்கு கொண்டு வந்தது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை இன்னமும் மக்கள் ரொம்ப நம்பறாங்க... சர்வீசும் சூப்பர்... அதுனாலதான் இது நடந்துச்சு!

இது மிட்-சைஸ் எஸ்யூவி கார் ஆகும். இந்த கார் இன்னும் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்படவில்லை. கூடிய விரைவில் இந்த காரின் விலைகள் அறிவிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வரப்படும். அதற்கு முன்னதாக அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காருக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவுகளை ஏற்கும் பணிகளை டொயோட்டா நிறுவனம் தொடங்கியுள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை இன்னமும் மக்கள் ரொம்ப நம்பறாங்க... சர்வீசும் சூப்பர்... அதுனாலதான் இது நடந்துச்சு!

விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 25 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்திய சந்தையில் கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டா, ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷாக் போன்ற கார்களுடன் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் போட்டியிடும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 12, 2022, 23:56 [IST]
English summary
Toyota fortuner suv registers 471 per cent growth in june 2022
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+