காசே கட்டாம கார் வாங்க டொயோட்டா வழங்கும் அருமையான வாய்ப்பு... இதை நழுவ விட்டுறாதீங்க...
டொயோட்டா நிறுவனம் தனது அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரை சப்ஸ்கிரிப்ஷன் மாடலில் வழங்குகிறது. இதுகுறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

டொயோட்டா நிறுவனம் மாருதி நிறுவனத்துடன் சேர்ந்து செய்த ஒப்பந்தத்தில் உருவான கார் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார். இந்த கார் இந்த இரு நிறுவனங்களில் கூட்டு ஒப்பந்தத்தில் சப்-காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்டில் உருவான முதல் காராகும்.

இந்த காரை அந்நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் ரூ10.48 லட்சம் என்ற விலையிலிருந்து விற்பனைக்காக அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த கார் தீவிரமாக விற்பனையிலிருந்து வருகிறது. இந்நிலையில் இந்த காரை ஒரு பைசா கூட கொடுக்காமல் வாங்க புதிய திட்டம் ஒன்றை டொயோட்டா அறிவித்துள்ளது.

தற்போது கார் தயாரிப்பு நிறுவனங்களே, கார்களை சப்ஸ்கிரிப்ஷன் மாடலில் வழங்கும் திட்டத்தை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளனர். அதன்படி குறிப்பிட்ட நபர் கார் முழுவதுமாக பணம் கட்டி வாங்காமல் அந்த காரு சப்ஸ்கிரிப்ஷன் மாடலில் வாங்குவதன் மூலம் அவர் மாத மாதம் அந்த காருக்கான வாடகையை மட்டும் செலுத்திக்கொண்டு சொந்த காரை பயன்படுத்துவது போல இந்த காரை பயன்படுத்தலாம்.

ெ

இந்த ஆட்டோமெட்டிக் நியோ டிரைவ் வேரியன்ட் கார் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் கே15சி சிரீஸ் பெட்ரோல் இன்ஜின் கொண்டது. இது மைல்டு ஹைபிரிட் தொழிற்நுட்பத்தில் இங்கும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் 102 பிஎச்பி பவர் மற்றும் 137 என்எம் டார்க் திறனைக் கொண்டது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனை கொண்டது. இந்த இன்ஜின் காருக்கு லிட்டருக்கு 20 கி.மீ வரை மைலேஜ் கொடுக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த காரை சப்ஸ்கிரிப்ஷன் மாடலில் வாங்க வேண்டும் என்றால் ஒரு ஆண்டு முதல் 4 ஆண்டு வரையிலா கால கடத்திற்கும், ஆண்டிற்கு 12 ஆயிரம் முதல் 24 ஆயிரம் கி.மீ வரை பயணிக்கும் வகையிலான திட்டத்தையும் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது. எவ்வளவு காலத்திற்கு சப்ஸ்கிரிப்ஷன் செய்கிறோம், எவ்வளவு தூரம் பயணிக்க சப்ஸ்கிரிப்ஷன் செய்கிறோம் என்பதைப் பொறுத்து சப்ஸ்கிரிப்ஷனிற்கான தொகை வேறுபடும்.

இந்த டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரை சப்ஸ்கிரிப்ஷன் மாடலில் குறைந்த பட்சமாக ஒரு ஆண்டு மற்றும் ஆண்டிற்கு 12 ஆயிரம் கி.மீ வரையிலான பயணம் என்ற திட்டத்தில் எடுத்தால் ரூ56,473 சப்ஸ்கிரிப்ஷன் கட்டணத்தை மாதாமாதம் செலுத்த வேண்டியது வரும். இதுவே 4 ஆண்டுகள், ஆண்டிற்கு 24 ஆயிரம் கி.மீ பயணம் என்ற சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தில் காரை வாங்கினால் மாதம் ரூ47,729 சப்ஸ்கிரிப்ஷன் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

இந்த சப்ஸ்கிரிப்ஷன் காலத்தில் காருக்கு சர்வீஸ் அனைத்தும் இலவசமாகவே டொயோட்டா சர்வீஸ் சென்டரில் செய்து கொள்ளலாம். சப்ஸ்கிரிப்ஷன் காலம் முடிந்ததும், அதே காரை சப்ஸ்கிரிப்ஷன் எடுத்த நபரே தனக்குச் சொந்தமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளலாம். அதற்காகவும் வசதிகள் உள்ளது. அல்லது வேறு புதிய காருக்கு மாற வேண்டும் என்றாலும் மாறலாம்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரை பொருத்தவரை மார்கெட்டில் உள்ள ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா, ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன், மற்றும் டாடா ஹாரியர் ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த காரும் களம் இறங்குகிறது.


Click it and Unblock the Notifications








