இந்தியர்கள் தவம் கிடக்கும் புதிய டொயோட்டா காருக்கு புக்கிங் தொடங்கியது... டீலர்கள் ரகசியமா பண்றாங்க!

இந்தியர்கள் தவம் கிடக்கும் புதிய டொயோட்டா காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியர்கள் தவம் கிடக்கும் புதிய டொயோட்டா காருக்கு புக்கிங் தொடங்கியது... டீலர்கள் ரகசியமா பண்றாங்க!

டொயோட்டா மற்றும் சுஸுகி ஆகிய இரண்டு நிறுவனங்களும் தற்போது கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களை டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டிலும் விற்பனை செய்து வருகிறது. அப்படி விற்பனை செய்யப்படும் கார்களில் ஒன்றுதான் டொயோட்டா க்ளான்சா.

இந்தியர்கள் தவம் கிடக்கும் புதிய டொயோட்டா காருக்கு புக்கிங் தொடங்கியது... டீலர்கள் ரகசியமா பண்றாங்க!

இது மாருதி சுஸுகி பலேனோ காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். மாருதி சுஸுகி நிறுவனம் வெகு சமீபத்தில்தான் பலேனோ காரின் புதிய சிஎன்ஜி வெர்ஷனை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதன் ஆரம்ப விலை 8.28 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

இந்தியர்கள் தவம் கிடக்கும் புதிய டொயோட்டா காருக்கு புக்கிங் தொடங்கியது... டீலர்கள் ரகசியமா பண்றாங்க!

இதை தொடர்ந்து டொயோட்டா நிறுவனமும் க்ளான்சா காரின் புதிய சிஎன்ஜி வெர்ஷனை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு தற்போது தயாராகி வருகிறது. இது இந்திய வாடிக்கையாளர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் கார்களில் ஒன்றாகும். இப்படி டொயோட்டா க்ளான்சா காரின் சிஎன்ஜி வெர்ஷனுக்காக தவம் கிடப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியர்கள் தவம் கிடக்கும் புதிய டொயோட்டா காருக்கு புக்கிங் தொடங்கியது... டீலர்கள் ரகசியமா பண்றாங்க!

ஆம், இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட ஒரு சில டொயோட்டா டீலர்ஷிப்கள் க்ளான்சா காரின் புதிய சிஎன்ஜி வெர்ஷனுக்கு தற்போது முன்பதிவுகளை ஏற்க தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எனினும் டொயோட்டா க்ளான்சா காரின் சிஎன்ஜி வெர்ஷன் விரைவில் விற்பனைக்கு வரவிருப்பதை இது உணர்த்துகிறது.

இந்தியர்கள் தவம் கிடக்கும் புதிய டொயோட்டா காருக்கு புக்கிங் தொடங்கியது... டீலர்கள் ரகசியமா பண்றாங்க!

S, G மற்றும் V என டொயோட்டா க்ளான்சா காரின் சிஎன்ஜி வெர்ஷன் மொத்தமாக 3 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா க்ளான்சா காரின் புதிய சிஎன்ஜி வெர்ஷனில், சிஎன்ஜி கிட் உடன் கூடிய 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர், பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியர்கள் தவம் கிடக்கும் புதிய டொயோட்டா காருக்கு புக்கிங் தொடங்கியது... டீலர்கள் ரகசியமா பண்றாங்க!

பெட்ரோலில் இயங்கும்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 89 பிஹெச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியதாக இருக்கும். அதே நேரத்தில் சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 76 பிஹெச்பி பவரையும், 98.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடிய வகையில், ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம்.

இந்தியர்கள் தவம் கிடக்கும் புதிய டொயோட்டா காருக்கு புக்கிங் தொடங்கியது... டீலர்கள் ரகசியமா பண்றாங்க!

புதிய டொயோட்டா க்ளான்சா சிஎன்ஜி காரில், ஒரே ஒரு கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆகும். சிஎன்ஜி வெர்ஷனின் வருகைக்கு பின், இந்திய சந்தையில் டொயோட்டா க்ளான்சா காரின் விற்பனை எண்ணிக்கை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியர்கள் தவம் கிடக்கும் புதிய டொயோட்டா காருக்கு புக்கிங் தொடங்கியது... டீலர்கள் ரகசியமா பண்றாங்க!

டொயோட்டா நிறுவனம் க்ளான்சா காரின் சிஎன்ஜி வெர்ஷனுக்கு பின்னர், இன்னோவா காரின் புதிய மாடல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அது டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் ஆகும். வரும் நவம்பர் 25ம் தேதி, டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

இந்தியர்கள் தவம் கிடக்கும் புதிய டொயோட்டா காருக்கு புக்கிங் தொடங்கியது... டீலர்கள் ரகசியமா பண்றாங்க!

அதை தொடர்ந்து வரும் ஜனவரி மாதம், இந்த புதிய மாடலின் விலைகள் அறிவிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹைப்ரிட் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள கூட்டணியின் அடிப்படையில், மாருதி சுஸுகி நிறுவனம் இந்த காரை தனது பிராண்டிலும் விற்பனை செய்யலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியர்கள் தவம் கிடக்கும் புதிய டொயோட்டா காருக்கு புக்கிங் தொடங்கியது... டீலர்கள் ரகசியமா பண்றாங்க!

மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் வெகு சமீபத்தில் முறையே க்ராண்ட் விட்டாரா மற்றும் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்தன. இவை இரண்டும் ஹைப்ரிட் ரகத்தை சேர்ந்த கார்கள்தான். இந்த இரண்டு கார்களுக்கும் இடையே ஏராளமான ஒற்றுமைகளும் இருக்கின்றன.

இந்தியர்கள் தவம் கிடக்கும் புதிய டொயோட்டா காருக்கு புக்கிங் தொடங்கியது... டீலர்கள் ரகசியமா பண்றாங்க!

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் என 2 ஹைப்ரிட் கார்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக டொயோட்டா மற்றும் மாருதி சுஸுகி நிறுவனங்களிடம் இருந்து மேலும் ஒரு ஹைப்ரிட் கார் வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota glanza cng booking details
Story first published: Saturday, November 5, 2022, 12:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X