சூப்பர்... இந்தியாவில் டொயோட்டா க்ளான்சா சிஎன்ஜி கார் விற்பனைக்கு வருவது உறுதி... எப்போனு தெரியுமா?

இந்தியாவில் டொயோட்டா க்ளான்சா சிஎன்ஜி கார் விற்பனைக்கு வருவது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பர்... இந்தியாவில் டொயோட்டா க்ளான்சா சிஎன்ஜி கார் விற்பனைக்கு வருவது உறுதி... எப்போனு தெரியுமா?

டொயோட்டா நிறுவனம் க்ளான்சா காருக்கு புத்துயிர் கொடுத்துள்ளது. வெகு சமீபத்தில்தான் க்ளான்சா காரின் 2022 மாடலை டொயோட்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. தற்போதைய நிலையில் டொயோட்டா க்ளான்சா காரில் ஒரே ஒரு இன்ஜின் தேர்வு மட்டுமே வழங்கப்படுகிறது. அது 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வாகும்.

சூப்பர்... இந்தியாவில் டொயோட்டா க்ளான்சா சிஎன்ஜி கார் விற்பனைக்கு வருவது உறுதி... எப்போனு தெரியுமா?

ஆனால் வெகு விரைவில் டொயோட்டா க்ளான்சா கார் சிஎன்ஜி தேர்வையும் பெறவுள்ளது. டொயோட்டா க்ளான்சா சிஎன்ஜி மாடல் அனேகமாக அடுத்த மாதம், அதாவது ஏப்ரல் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலின்படி பார்த்தால், டொயோட்டா க்ளான்சா சிஎன்ஜி காரானது, இ-சிஎன்ஜி என அழைக்கப்படலாம்.

சூப்பர்... இந்தியாவில் டொயோட்டா க்ளான்சா சிஎன்ஜி கார் விற்பனைக்கு வருவது உறுதி... எப்போனு தெரியுமா?

மாருதி சுஸுகி பலேனோ சிஎன்ஜி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, டொயோட்டா க்ளான்சா சிஎன்ஜி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி பலேனோ சிஎன்ஜி கார், நடப்பு மார்ச் மாதத்திலேயே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டாலும் கூட கொண்டு வரப்படலாம்.

சூப்பர்... இந்தியாவில் டொயோட்டா க்ளான்சா சிஎன்ஜி கார் விற்பனைக்கு வருவது உறுதி... எப்போனு தெரியுமா?

இல்லாவிட்டால் அடுத்த மாத தொடக்கத்தில் மாருதி சுஸுகி பலேனோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும். மாருதி சுஸுகி பலேனோ சிஎன்ஜி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு ஓரிரு நாட்களை கடந்த பின்னர் டொயோட்டா நிறுவனம் க்ளான்சா சிஎன்ஜி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர்... இந்தியாவில் டொயோட்டா க்ளான்சா சிஎன்ஜி கார் விற்பனைக்கு வருவது உறுதி... எப்போனு தெரியுமா?

மாருதி சுஸுகி பலேனோவின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன்தான் டொயோட்டா க்ளான்சா என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சுஸுகி நிறுவனத்துடனான கூட்டணியின் அடிப்படையில் டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் இப்படி மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களில் ஒரு சில மாற்றங்களை செய்து தனது பிராண்டில் விற்பனை செய்து வருகிறது.

சூப்பர்... இந்தியாவில் டொயோட்டா க்ளான்சா சிஎன்ஜி கார் விற்பனைக்கு வருவது உறுதி... எப்போனு தெரியுமா?

2022 டொயோட்டா க்ளான்சா காரில் மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் சிஎன்ஜி மாடலில், மேனுவல் கியர் பாக்ஸ் மட்டுமே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் டிசைனில் எந்த மாற்றங்களும் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

சூப்பர்... இந்தியாவில் டொயோட்டா க்ளான்சா சிஎன்ஜி கார் விற்பனைக்கு வருவது உறுதி... எப்போனு தெரியுமா?

க்ளான்சா காரின் பெட்ரோல் வேரியண்ட் எப்படி உள்ளதோ, அதேபோன்ற டிசைனில்தான் க்ளான்சா சிஎன்ஜி காரும் இருக்கும். இதன்படி பார்த்தால், டொயோட்டா க்ளான்சா சிஎன்ஜி காரின் வெளிப்புறத்தில், 16 இன்ச் அலாய் வீல்கள், எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்இடி பனி விளக்குகள் ஆகியவை வழங்கப்படும்.

சூப்பர்... இந்தியாவில் டொயோட்டா க்ளான்சா சிஎன்ஜி கார் விற்பனைக்கு வருவது உறுதி... எப்போனு தெரியுமா?

அதே நேரத்தில் பெட்ரோல் வேரியண்ட்டை விட சிஎன்ஜி வேரியண்ட்டின் விலை அதிகமாக இருக்கலாம். சுமார் 70 ஆயிரம் ரூபாய் முதல் 90 ஆயிரம் ரூபாய் விலை விலை அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான், அதிகாரப்பூர்வமான விலை அறிவிக்கப்படும்.

சூப்பர்... இந்தியாவில் டொயோட்டா க்ளான்சா சிஎன்ஜி கார் விற்பனைக்கு வருவது உறுதி... எப்போனு தெரியுமா?

இந்தியாவில் தற்போது வழக்கமான பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு பதிலாக சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் கார்கள் வேகமாக பிரபலமாகி வருகின்றன. சிஎன்ஜி கார்களை பொறுத்தவரை மாருதி சுஸுகி நிறுவனமும், எலெக்ட்ரிக் கார்களை பொறுத்தவரை டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளன.

சூப்பர்... இந்தியாவில் டொயோட்டா க்ளான்சா சிஎன்ஜி கார் விற்பனைக்கு வருவது உறுதி... எப்போனு தெரியுமா?

இதில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது சிஎன்ஜி கார்களிலும் தீவிர கவனம் செலுத்த தொடங்கி விட்டது. டாடா டியாகோ ஹேட்ச்பேக் மற்றும் டாடா டிகோர் செடான் ஆகிய இரண்டு கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்களும் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதை இதற்கு ஒரு உதாரணமாக சொல்ல முடியும்.

சூப்பர்... இந்தியாவில் டொயோட்டா க்ளான்சா சிஎன்ஜி கார் விற்பனைக்கு வருவது உறுதி... எப்போனு தெரியுமா?

வரும் காலங்களில் டாடா மோட்டார்ஸ் மற்றும் மாருதி சுஸுகி ஆகிய இரண்டு நிறுவனங்களுமே நிறைய சிஎன்ஜி கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன. குறிப்பாக மாருதி சுஸுகி நிறுவனம் தனது நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்படும் கார்களிலும் சிஎன்ஜி தேர்வை அதிகளவில் வழங்க முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாகதான் பலேனோ சிஎன்ஜி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 17, 2022, 18:13 [IST]
English summary
Toyota glanza cng india launch confirmed check details here
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+