2022 டொயோட்டா க்ளான்ஸா கார் எவ்ளோ மைலேஜ் தரும் தெரியுமா? புக்கிங் ஏற்கனவே தொடங்கிட்டாங்க... வாங்க தயாரா?

2022 டொயோட்டா க்ளான்ஸா (2022 Toyota Glanza) காரின் மைலேஜ் திறன் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாாங்க.

2022 டொயட்டா க்ளான்ஸா கார் எவ்ளோ மைலேஜ் தரும் தெரியுமா? புக்கிங் ஏற்கனவே தொடங்கிட்டாங்க... வாங்க தயாரா?

இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரும் காராக மாருதி சுசுகி நிறுவனத்தின் செலிரியோ கார் மாடல் இருக்கின்றது. இந்த காரின் தானியங்கி வேரியண்ட் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 26-க்கும் அதிகமான கிமீ வரை மைலேஜ் தரும் என நிறுவனம் தெரிவிக்கின்றது. இதற்கு போட்டியளிக்கும் வகையில் அதிக மைலேஜ் திறனுடன் டொயோட்டாவின் க்ளான்ஸா கார் உருவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2022 டொயட்டா க்ளான்ஸா கார் எவ்ளோ மைலேஜ் தரும் தெரியுமா? புக்கிங் ஏற்கனவே தொடங்கிட்டாங்க... வாங்க தயாரா?

டொயோட்டா நிறுவனம் மிக விரைவில் 2022 க்ளான்ஸா (2022 Toyota Glanza) கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இக்காருக்கான புக்கிங் பணிகள் மிக சமீபத்திலேயே நாட்டில் தொடங்கின. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே டொயோட்டா க்ளான்ஸாவின் தானியங்கும் வேரியண்டும் ஒரு லிட்டருக்கு அதிகபட்சமாக 22.9 கிமீ வரை மைலேஜ் தரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

2022 டொயட்டா க்ளான்ஸா கார் எவ்ளோ மைலேஜ் தரும் தெரியுமா? புக்கிங் ஏற்கனவே தொடங்கிட்டாங்க... வாங்க தயாரா?

இது மிக சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகமான புதிய பலேனோ காருக்கும் போட்டியளிக்கும் வகையில் இருக்கின்றது. லிட்டர் ஒன்றிற்கு 22 முதல் 23 கிமீ வரை பலேனோ மைலேஜ் தரும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேநேரத்தில், பலேனோவின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனே இந்த க்ளான்ஸா என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

2022 டொயட்டா க்ளான்ஸா கார் எவ்ளோ மைலேஜ் தரும் தெரியுமா? புக்கிங் ஏற்கனவே தொடங்கிட்டாங்க... வாங்க தயாரா?

டோயோட்டா-மாருதி சுசுகி இணைவை அடுத்து மாருதி நிறுவனம் சில முன்னணி மாடல்களை தன்னுடைய பேட்ஜின்கீழ் டொயோட்டா விற்பனைக்கு வழங்கி வருகின்றது. அந்தவகையில், மாருதியின் விட்டாரா ப்ரெஸ்ஸா, அர்பன் க்ரூஸர் என்கிற பெயரில் விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

2022 டொயட்டா க்ளான்ஸா கார் எவ்ளோ மைலேஜ் தரும் தெரியுமா? புக்கிங் ஏற்கனவே தொடங்கிட்டாங்க... வாங்க தயாரா?

டொயோட்டா நிறுவனம் இக்கார்களை வெறும் ரீபேட்ஜிற்கு மட்டுமே உட்படுத்தவில்லை. அது, சில புதிய மற்றும் சிறப்பம்சங்கள் சேர்ப்பையும் செய்திருக்கின்றது. எனவேதான், இக்கார்கள் சற்று அதிக விலையில் விற்கப்படுகின்றன. கூடுதல் விலையைக் கொண்டிருந்தாலும், டொயோட்டா நிறுவனத்தையே தூக்கி நிற்க வைக்கின்ற அளவிற்கு நல்ல வரவேற்பை இரு கார்களும் பெற்று வருகின்றன.

2022 டொயட்டா க்ளான்ஸா கார் எவ்ளோ மைலேஜ் தரும் தெரியுமா? புக்கிங் ஏற்கனவே தொடங்கிட்டாங்க... வாங்க தயாரா?

குறிப்பாக க்ளான்ஸா மிக சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையிலேயே புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனுக்கான புக்கிங் பணிகள் தற்போது இந்தியாவில் தொடங்கியிருக்கின்றது. ரூ. 11 ஆயிரம் முன்தொகை செலுத்தி 2022 க்ளான்ஸா காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். கூடிய விரைவில் இக்காரின் விற்பனைக்கான அறிமுகம் அரங்கேற இருக்கின்றது.

2022 டொயட்டா க்ளான்ஸா கார் எவ்ளோ மைலேஜ் தரும் தெரியுமா? புக்கிங் ஏற்கனவே தொடங்கிட்டாங்க... வாங்க தயாரா?

அப்கிரேடாக, ஸ்டைலிஷான க்ரில் மற்றும் பம்பர் ஆகியவற்றை 2022 க்ளான்ஸா பெற்றிருக்கின்றது. தொடர்ந்து, ஆறு ஏர்பேக்குகள், குரல் கட்டளை வசதி, ஹெட்-அப் திரை மற்றும் 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா உள்ளிட்டவையும் இக்காரில் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றுடன், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட ஸ்மார்ட்போன் இணைப்பு அம்சங்களும் 2022 க்ளான்ஸாவில் எதிர்பார்க்கப்படுகின்றன.

2022 டொயட்டா க்ளான்ஸா கார் எவ்ளோ மைலேஜ் தரும் தெரியுமா? புக்கிங் ஏற்கனவே தொடங்கிட்டாங்க... வாங்க தயாரா?

டொயோட்டா நிறுவனம் பலேனோ காரிடம் இருந்து க்ளான்ஸா மாறுபட்டு காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக வெளிப்புறத்தைப் போலவே உட்புறத்திலும் சில மாற்றங்களைச் செய்திருக்கின்றது. அந்தவகையில், பீஜ் மற்றும் கருப்பு ஆகிய இரு நிற உட்புறம், ஆறு ஸ்பீக்கர்கள், 9 இன்ச் அளவுள்ள தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களை வழங்கியிருக்கின்றது.

2022 டொயட்டா க்ளான்ஸா கார் எவ்ளோ மைலேஜ் தரும் தெரியுமா? புக்கிங் ஏற்கனவே தொடங்கிட்டாங்க... வாங்க தயாரா?

ஆகையால், மிக சிறந்த பிரீமியம் தர காராக க்ளான்ஸா காட்சியளிக்கின்றது. இத்தகைய ஓர் வாகனத்தை இன்னும் அதிக பிரீமியம் தர காராக விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் டொயோட்டா களமிறங்கியிருக்கின்றது. வெகு விரைவில் 2022 க்ளான்ஸா விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, March 11, 2022, 19:33 [IST]
English summary
Toyota glanza mileage details revealed here is full details
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+