குறிப்பிட்ட இரு கார் மாடல்களின் விலையை உயர்த்த பிரபல நிறுவனம் திட்டம்... ரெண்டுமே நல்ல விற்பனையாகுற மாடல்கள்!
பிரபல கார் உற்பத்தி நிறுவனம் அதன் குறிப்பிட்ட இரு கார் மாடல்களின் விலையை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் புதிய வாகனங்களின் விலை தொடர்ச்சியாக உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் மக்கள் சற்றும் விரும்பாத இந்த செயலை தொடர்ச்சியாக அரங்கேற்றி வருகின்றன. இந்த செயல் மக்கள் மத்தியில் பெருத்த சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors), பயணிகள் வாகன பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் அனைத்து புதிய வாகனங்களின் விலையையும் உயர்த்துவதாக அறிவிப்பு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து 1.1 சதவீதம் வரை விலை உயர்வை அது செய்தது. கூடுதல் ஷாக்காக அறிவிப்பு வெளியிட்ட அன்றைய தினமே விலை உயர்வு நடைமுறைக்கு வருவதாகவும் அது தெரிவித்தது.

டாடாவின் இந்த செயல் புதிய காரை வாங்க திட்டமிட்டிருந்தோரை பெருத்த சோகத்தில் ஆழ்த்தியது. டாடாவை போல் முன்னதாக மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனமும் விலை உயர்வை செய்தது. நிறுவனம் ரூ. 5 ஆயிரம் தொடங்கி ரூ. 12 ஆயிரம் வரை விலை உயர்வை செய்தது. இந்த முன்னணி நிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது டொயோட்டாவும் அதன் தயாரிப்புகளின் விலையை உயர்த்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டொயோட்டா (Toyota) அதன் குறிப்பிட்ட இரு மாடல்களின் விலையை மட்டும் உயர்த்த இருக்கின்றது. அர்பன் க்ரூஸர் (Toyota Urban Cruiser) காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் க்ளான்ஸா (Toyota Glanza) பிரீமியம் ஹேட்ச் ஆகிய இரு கார் மாடல்களின் விலையையே நிறுவனம் உயர்த்த இருக்கின்றது. இரு கார்களின் விலையும் வரும் மே1 (உழைப்பாளர்கள் தினம்) அன்று உயர்த்தப்பட இருக்கின்றன.

விலை உயர்வை விரைவில் பெற இருக்கும் இரு கார் மாடல்களும் இந்தியர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வரும் வாகன மாடல்களாக இருக்கின்றன. இந்த நிலையில் இரு கார்களின் விலையை உயர்த்த நிறுவனம் முடிவு செய்திருப்பது, அவற்றின் விற்பனையை பெருமளவில் பாதிக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. ஏற்கனவே இந்தியர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வில் சிக்கி தவித்து வருகின்றனர்.

நாட்டின் சில முக்கிய நகரங்களில் பெட்ரோல் ரூ. 110-ஐக் கடந்து விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. டீசலின் விலையும் பல மடங்கு உயர்ந்து பெட்ரோலுக்கு இணையான விலையில் விற்கம் சூழலை நம்மால் பார்க்க முடிகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் வாகன உற்பத்தியாளர்கள் தொடர்ச்சியாக புதிய வாகனங்களின் விலையை உயர்த்தி வருவது மக்கள் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

இந்த நிலை பலரின் புதிய வாகன கனவை கை விட செய்யும் வகையிலும் அமைந்துள்ளது. அதேவேலையில், வாகன உற்பத்தியாளர்கள் இந்த இக்கட்டான நிலையை கையிலெடுக்க அண்மைக் காலங்களாக புதிய வாகன கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்து வருவதே காரணமாக அமைந்துள்ளது.

வாகன உற்பத்தியில் முக்கிய பங்கினை வகிக்கும் உலோக பொருட்களின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. இதனைக் காரணம் காட்டியே வாகன உற்பத்தியாளர்கள் விலையை உயர்த்தி வருகின்றனர். டாடா, மாருதி, டொயோட்டா நிறுவனங்கள் மட்டுமல்ல இன்னும் சில நிறுவனங்களும் புதிய கார்களின் விலையை உயர்த்தியிருக்கின்றன. அந்தவகையில், பிஎம்டபிள்யூ மற்றும் பென்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் சமீபத்தில் கார்களின் விலையை உயர்த்தியிருக்கின்றன.

முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளர்களும் தங்களின் வாகனங்களின் விலையை உயர்த்தியிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே டொயோட்டா அதன் க்ளான்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் கார் மாடல்களின் விலையை உயர்த்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால், இதன் விலை எவ்வளவு உயர இருக்கின்றது என்பது தெரிய வில்லை. இதுகுறித்த தகவல் வரும் மே1 அன்று தெரிய வரும்.

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு நிறுவனம் அதன் இன்னோவா க்ரிஸ்டா மற்றும் ஃபார்ச்சூனர் ஆகிய கார் மாடல்களின் விலையை உயர்த்தியது குறிப்பிடத்தகுந்தது. ஏற்கனவே சில கார் மாடல்களின் விலையை உயர்த்திவிட்ட காரணத்தினாலேயே தற்போது எஞ்சியிருக்கும் சில வாகனங்களின் விலையையும் முயற்சியில் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது.

டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் 20 லட்சம் யூனிட்டு விற்பனை மைல்கல்லை எட்டியிருப்பதாக அண்மையில் தகவல் வெளியிட்டது. இந்நிறுவனம் தற்போது நாட்டில் ஏழு விதமான கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது. அது கிளான்ஸா, அர்பன் க்ரூஸர், இன்னோவா க்ரிஸ்டா, ஹைலக்ஸ், ஃபார்ச்சூனர், கேம்ரி ஹைபிரிட் மற்றும் வெல்ஃபையர் ஆகிய மாடல்களையே விற்பனைக்கு வழங்கி வருகின்றது.


Click it and Unblock the Notifications








