டொயோட்டாவின் இரட்டை பயன்பாட்டு வசதிக் கொண்ட ஹைலக்ஸ் காருக்கு புக்கிங் தொடங்கியது! எவ்ளோ முன் தொகை தெரியுமா?

இந்தியாவில் டொயோட்டா ஹைலக்ஸ் (Toyota Hilux) பிக்-அப் ட்ரக்கிற்கு புக்கிங் பணிகள் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டொயோட்டாவின் இரட்டை பயன்பாட்டு வசதிக் கொண்ட ஹைலக்ஸ் காருக்கு புக்கிங் தொடங்கியது! எவ்ளோ முன் தொகை தெரியுமா?

டொயோட்டா (Toyota) நிறுவனத்தின் புகழ்பெற்ற பிக்-அப் ட்ரக் ரக வாகனம் ஹைலக்ஸ் (Hilux). இந்த வாகனம் மிக விரைவில் நமது நாட்டில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இது விற்பனைக்கு அறிமுகமாக இருப்பதை முன்னிட்டு டொயோட்டா நிறுவனம் அதன் டீலர்கள் வாயிலாக ஹைலக்ஸ் பிக்-அப் ட்ரக்கிற்கான புக்கிங் பணிகளைத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டொயோட்டாவின் இரட்டை பயன்பாட்டு வசதிக் கொண்ட ஹைலக்ஸ் காருக்கு புக்கிங் தொடங்கியது! எவ்ளோ முன் தொகை தெரியுமா?

வரும் ஜனவரி 23ம் தேதி அன்றே டொயோட்டா ஹைலக்ஸ் இந்தியாவில் விற்பனைக்கான அறிமுகத்தை பெற இருக்கிறது. இந்த ரூ. 28 லட்சத்திற்கும் அதிகமான விலையில் இக்கார் சந்தையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. வரும் ஜனவரி 23ம் அன்று அறிமுகத்தின்போதே இதன் விலை அறிவிக்கப்பட இருக்கின்றது.

டொயோட்டாவின் இரட்டை பயன்பாட்டு வசதிக் கொண்ட ஹைலக்ஸ் காருக்கு புக்கிங் தொடங்கியது! எவ்ளோ முன் தொகை தெரியுமா?

இந்த நிலையிலேயே காருக்கான புக்கிங் பணிகள் நாட்டில் தொடங்கி இருக்கின்ரன. ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 2 லட்சம் வரை முன்தொகையில் ஹைலக்ஸ் பிக்-அப் ட்ரக்கிற்கான முன் பதிவுகள் ஏற்கப்பட்டு வருகின்றன. இந்த வாகனத்தில் நான்கு முதல் ஐந்து பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும்.

எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிக வேகத்தில் போகாதுனு யாரு சொன்னா? ரேஸ் பைக்குகளையே மிஞ்சும் அதி வேகம்!

மேலும், குறிப்பிட்ட அளவு சரக்குகளை ஏற்றி செல்லும் வகையில் பின் பக்கத்தில் கேரியர் அமைப்பையும் இந்த கார் பெற்றிருக்கின்றது. ஆகையால், பயணிகள் மற்றும் சரக்கு ஏற்றி செல்லும் வாகனமாக இதனை பயன்படுத்திக் கொள்ள முடியும். இத்தகைய இரட்டைப் பயன்பாட்டு வசதிக் கொண்ட பிக்-அப் ட்ரக் வாகனத்தையே மிக மிக விரைவில் டொயோட்டா விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிக வேகத்தில் போகாதுனு யாரு சொன்னா? ரேஸ் பைக்குகளையே மிஞ்சும் அதி வேகம்!

இந்த காரின் வருகை இந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் இசுஸு டி-மேக்ஸ் வாகனத்திற்கு போட்டியாக அமைய இருக்கின்றது. இந்த காரில், டொயோட்டா நிறுவனம், அதன் புகழ்பெற்ற கார் மாடல்களான இன்னோவா க்ரிஸ்டா மற்றும் ஃபார்ச்சூனர் ஆகிய கார் மாடல்களில் இடம் பெற்றிருக்கும் சிறப்பு வசதிகளை வழங்கி இருக்கின்றது.

எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிக வேகத்தில் போகாதுனு யாரு சொன்னா? ரேஸ் பைக்குகளையே மிஞ்சும் அதி வேகம்!

2.8 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போசார்ஜட் 1ஜிடி-எஃப்டிவி டீசல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 204 பிஎஸ் பவர் மற்றும் 500 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு தானியங்கி கன்வெர்டர் டிரான்ஸ்மிஷனும் வழங்கப்பட இருக்கின்றது.

எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிக வேகத்தில் போகாதுனு யாரு சொன்னா? ரேஸ் பைக்குகளையே மிஞ்சும் அதி வேகம்!

மேலும், டொயோட்டா ஹைலக்ஸ் பிக்-அப் ட்ரக்கில் பிரத்யேக அம்சங்களாக ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்ட 8 இன்ச் அளவு உள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நடுத்தர டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஸ்டியரிவீங் வீலில் பன்முக கன்ட்ரோல்கள் மற்றும் பல சிறப்பு வசதிகளுடன் இந்த கார் விற்பனைக்கு வர இருக்கின்றது.

எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிக வேகத்தில் போகாதுனு யாரு சொன்னா? ரேஸ் பைக்குகளையே மிஞ்சும் அதி வேகம்!

இந்தியாவில் பிக்-அப் ட்ரக் ரக வாகனங்களுக்கு சற்றே டிமாண்ட் அதிகம். ஆனால், இந்த ரக வாகனங்கள் மிக குறைந்த அளவிலான தேர்விலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றன. இந்த நிலையைக் கருத்தில் கொண்டே டொயோட்டா நிறுவனம் அதன் ஹைலக்ஸ் பிக்-அப் ட்ரக்கை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிக வேகத்தில் போகாதுனு யாரு சொன்னா? ரேஸ் பைக்குகளையே மிஞ்சும் அதி வேகம்!

இந்த காரில் இடம் பெற்றிருக்கும் அம்சங்கள் டொயோட்டா ஃபார்ச்சூனர் இடம் பெற்றிருக்கக் கூடியதாக இருக்கின்றது. ஆகையால், இந்தியர்கள் மத்தியில் இந்த இரட்டைப் பயன்பாட்டு வசதிக் கொண்ட பிக்-அப் ட்ரக்கிற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டொயோட்டாவின் இரட்டை பயன்பாட்டு வசதிக் கொண்ட ஹைலக்ஸ் காருக்கு புக்கிங் தொடங்கியது! எவ்ளோ முன் தொகை தெரியுமா?

எலெக்ட்ரிக்கல்லி அட்ஜெஸ்டபிள் ஓட்டுநர் இருக்கை, தானியங்கி ஏசி, எல்இடி மின் விளக்குகள் உள்ளிட்டவையும் டொயோட்டா ஹைலக்ஸ் காரில் இடம் பெற இருக்கின்றது. இத்துடன், காரை கவர்ச்சியானதாக காட்டும் வகையில் பிளாக் கிளாடிங், அலாய் வீல்கள், கட்டுமஸ்தான வீல் ஆர்ச்சுகள், முரட்டுத் தனமான தோற்றம் கொண்ட பம்பர் உள்ளிட்டவையும் ஹைலக்ஸில் இடம் பெற்றிருக்கும்.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota hilux bookings open in india
Story first published: Friday, January 7, 2022, 17:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X