ரொம்ப நாள் எதிர்பார்ப்பு! டொயோட்டா ஹைலக்ஸ் விற்பனைக்கு அறிமுகம்... விலை மற்றும் முக்கிய விபரங்கள்!

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட டொயோட்டா ஹைலக்ஸ் (Toyota Hilux) பிக்-அப் ட்ரக் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

ரொம்ப நாள் எதிர்பார்ப்பு! டொயோட்டா ஹைலக்ஸ் விற்பனைக்கு அறிமுகம்... விலை மற்றும் முக்கிய விபரங்கள்!

பிரபல கார் உற்பத்தி நிறுவனான டொயோட்டா, அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிக்-அப் ட்ரக் ரக ஹைலக்ஸ் (Toyota Hilux) காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 33.99 லட்சம் என்ற உச்சபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

ரொம்ப நாள் எதிர்பார்ப்பு! டொயோட்டா ஹைலக்ஸ் விற்பனைக்கு அறிமுகம்... விலை மற்றும் முக்கிய விபரங்கள்!

அதாவது, வரி மற்றும் பிற கட்டணங்களும் எதுவும் சேர்க்கப்படாத விலை விபரம் இதுவாகும். ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் இந்த பிக்-அப் ட்ரக் விற்பனைக்குக் கிடைக்கும். மேலும், இதில் 4 வீல்களும் இயங்கும் திறன் ஸ்டாண்டர்டு அம்சமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, இன்னும் பல்வேறு சிறப்பு வசதிகள் இக்காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

ரொம்ப நாள் எதிர்பார்ப்பு! டொயோட்டா ஹைலக்ஸ் விற்பனைக்கு அறிமுகம்... விலை மற்றும் முக்கிய விபரங்கள்!

எனவேதான் இதன் விலை மிக மிக அதிகமானதாக காணப்படுகின்றது. டொயோட்டா ஹைலக்ஸ் பன்முக நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். எமோஷனல் ரெட் (Emotional Red), கிரே மெட்டாலிக் (Grey Metallic), சில்வர் மெட்டாலிக் (Silver Metallic), சூப்பர் வெள்ளை (Super White) மற்றும் ஒயிட் பியர்ல் (White Pearl) ஆகிய நிற தேர்வுகளிலேயே ஹைலக்ஸ் கிடைக்கும்.

ரொம்ப நாள் எதிர்பார்ப்பு! டொயோட்டா ஹைலக்ஸ் விற்பனைக்கு அறிமுகம்... விலை மற்றும் முக்கிய விபரங்கள்!

இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில் இந்த நிற தேர்வுகளை டொயோட்டா வழங்கியிருக்கின்றது. இதுமட்டுமின்றி, கவர்ச்சிகரமான தொழில்நுட்ப அம்சங்களையும் இக்காரில் டொயோட்டா வாரி வழங்கியிருக்கின்றது. அந்தவகையில், ஹாலோஜன் ரக ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லைட், எல்இடி பனி மின் விளக்கு, எல்இடி இன்டிகேட்டர்களைக் கொண்ட ஓஆர்விஎம்கள் (இதனை பொத்தான் வாயிலாக அட்ஜெஸ்ட் செய்ய முடியும்), குரோம் பூச்சுக் கொண்ட டூர் கைப்பிடிகள் மற்றும் 17 இன்ச் அளவுள்ள அலாய் வீல்கள் உள்ளிட்டவை ஹைலக்ஸ் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

ரொம்ப நாள் எதிர்பார்ப்பு! டொயோட்டா ஹைலக்ஸ் விற்பனைக்கு அறிமுகம்... விலை மற்றும் முக்கிய விபரங்கள்!

மேலே பார்த்த அம்சங்கள் அனைத்தும் வெளிப்புறத்தை அலங்கரிக்கும் வழங்கப்பட்டவை ஆகும். இதேபோல், காரின் உட்புறமும் மிக சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. பன்முக சிறப்பு தொழில்நுட்ப வசதிகளால் அவை அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ரொம்ப நாள் எதிர்பார்ப்பு! டொயோட்டா ஹைலக்ஸ் விற்பனைக்கு அறிமுகம்... விலை மற்றும் முக்கிய விபரங்கள்!

மல்டி ஃபங்க்சன் வசதிக் கொண்ட ஸ்டியரிங் வீல் (இதனை டில்ட் மற்றும் டெலிஸ்கோபிக் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து கொள்ள முடியும்), ஃபேப்ரிக் இருக்கைகள் (டிரைவருக்கு மேனுவல் அட்ஜெஸ்ட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது), கூல்டு அப்பர் குளோவ் பாக்ஸ், ஸ்மார்ட் என்ட்ரீ வசதிக் கொண்ட புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் மற்றும் எலெக்ட்ரோகுரோமிக் ஐஆர்விஎம் உள்ளிட்ட அம்சங்கள் வவங்கப்பட்டுள்ளன.

ரொம்ப நாள் எதிர்பார்ப்பு! டொயோட்டா ஹைலக்ஸ் விற்பனைக்கு அறிமுகம்... விலை மற்றும் முக்கிய விபரங்கள்!

இதுதவிர, நடுத்தர டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (இது தொடுதிரை, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிக் கொண்டது), 6 ஸ்பீக்கர்கள், பார்க் அசிஸ்ட் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களும் டொயோட்டா ஹைலக்ஸ் பிக்-அப் ட்ரக்கில் வழங்கப்பட்டுள்ளன.

ரொம்ப நாள் எதிர்பார்ப்பு! டொயோட்டா ஹைலக்ஸ் விற்பனைக்கு அறிமுகம்... விலை மற்றும் முக்கிய விபரங்கள்!

மேலே, இந்த டொயோட்டா ஹைலக்ஸ் காரில் ஹாலேஜன் ரக ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லைட்டுகள் வழங்கப்பட்டிருப்பதாக கூறியிருந்தோம். ஆனால், இந்த காரின் உயர்நிலை வேரியண்டில் எல்இடி மின் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, பல அணிகலன்கள் குரோம் பூச்சுடன் வழங்கப்பட்டுள்ளன.

ரொம்ப நாள் எதிர்பார்ப்பு! டொயோட்டா ஹைலக்ஸ் விற்பனைக்கு அறிமுகம்... விலை மற்றும் முக்கிய விபரங்கள்!

தொடர்ந்து, 18 இன்ச் அலாய் வீல்கள், லெதர் இருக்கைகள், எலெக்ட்ரிகல்லி அட்ஜஸ்டபிள் டிரைவர் இருக்கை மற்றும் ட்யூவல் டோன் ஆட்டோ ஏர்-கன்டிஷன் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. எஞ்ஜினை பொருத்தவரை, டொயோட்டா ஹைலக்ஸ் கார் மாடலில் 2.8 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ டீசல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரொம்ப நாள் எதிர்பார்ப்பு! டொயோட்டா ஹைலக்ஸ் விற்பனைக்கு அறிமுகம்... விலை மற்றும் முக்கிய விபரங்கள்!

இந்த மோட்டார் அதிகபட்சமாக 204 எச்பி பவரையும், 420 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு ஏடி ஆகிய தேர்வுகள் இக்காரில் வழங்கப்படுகின்றது. இரு கியர்பாக்ஸ் தேர்வுகளும் நான்கு வீல்கள் இயக்கம் அம்சத்துடன் கிடைக்கின்றன.

ரொம்ப நாள் எதிர்பார்ப்பு! டொயோட்டா ஹைலக்ஸ் விற்பனைக்கு அறிமுகம்... விலை மற்றும் முக்கிய விபரங்கள்!

டொயோட்டா ஹைலக்ஸ் ஓர் பன்முக பயன்பாட்டு வசதிக் கொண்ட வாகனமாகும். அதாவது, இதனை பயணிகள் வாகனமாகவும், சரக்குகளை ஏற்றி செல்லும் வாகனமாகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இது மிக சிறந்த ஆஃப்-ரோடு வாகனமாகவும் செயல்படும். ஆம், கரடு-முரடான பாதை மற்றும் 700 மிமீ ஆழமான நீர் நிலைகளில்கூட இவ்வாகனம் அசால்டாக பயணிக்கும்.

ரொம்ப நாள் எதிர்பார்ப்பு! டொயோட்டா ஹைலக்ஸ் விற்பனைக்கு அறிமுகம்... விலை மற்றும் முக்கிய விபரங்கள்!

மேலும், இக்காரில் பாதுகாப்பு அம்சங்களாக 7 ஏர் பேக்குகள், சைல்டு ரெஸ்ட்ரைண்ட் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட் வசதி உடன் கூடிய வெயிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் ஹைலக்ஸ் காரில் வழங்கப்பட்டுள்ளன.

ரொம்ப நாள் எதிர்பார்ப்பு! டொயோட்டா ஹைலக்ஸ் விற்பனைக்கு அறிமுகம்... விலை மற்றும் முக்கிய விபரங்கள்!

டொயோட்டா ஹைலக்ஸ் பிக்-அப் ட்ரக்கின் விலை விபரம்:

டொயோட்டா ஹைலக்ஸ் எக்ஸ்-ஷோரூம் விலை
4*4 MT Standard ₹33,99,000
4*4 MT High ₹35,80,000
4*4 AT High ₹36,80,000

More from DriveSpark

Article Published On: Thursday, March 31, 2022, 15:09 [IST]
English summary
Toyota hilux pickup truck launched in india at inr 33 99 lakhs
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+