7-இருக்கைகளுடன் பலர் தேர்வு செய்யும் கார்கள் இவைதான்!! பலத்த போட்டி உடன் இன்னோவா & எர்டிகா

கடந்த 2022 மார்ச் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட 7-இருக்கை கார்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

7-இருக்கைகளுடன் பலர் தேர்வு செய்யும் கார்கள் இவைதான்!! பலத்த போட்டி உடன் இன்னோவா & எர்டிகா

இந்தியாவில் பெரும்பாலானோர் பயணிகள் கார்களை 5-இருக்கைகளுடன் வாங்கவே விரும்புகின்றனர். அதையும் தாண்டி, 7 இருக்கைகளுடன் வாங்குவோர் என்று பார்த்தால், குறைவே. இத்தகையவர்களில் பெரும்பான்மையானவர்களின் தேர்வு இன்னோவாவை நோக்கியே உள்ளது.

7-இருக்கைகளுடன் பலர் தேர்வு செய்யும் கார்கள் இவைதான்!! பலத்த போட்டி உடன் இன்னோவா & எர்டிகா

ஏனெனில் கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவிலேயே அதிகளவில் விற்பனையாகக்கூடிய 7-இருக்கை காராக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மொத்தம் 7,917 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை ஆனது 2021 மார்ச்சில் விற்பனை செய்யப்பட்ட இன்னோவா கார்களுடன் ஒப்பிடுகையில் 38% அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 5,743 இன்னோவா கார்களையே டொயோட்டா விற்பனை செய்திருந்தது.

7-இருக்கைகளுடன் பலர் தேர்வு செய்யும் கார்கள் இவைதான்!! பலத்த போட்டி உடன் இன்னோவா & எர்டிகா

இன்னோவாவிற்கு அடுத்த இடத்தை இந்தியாவின் மலிவான எம்பிவி காராக விளங்கும் மாருதி சுஸுகி எர்டிகா 7,888 யூனிட்களின் விற்பனை உடன் பிடித்துள்ளது. ஆனால் இதன் விற்பனை எண்ணிக்கை கடந்த ஆண்டு மார்ச்சை காட்டிலும் 15% சரிந்துள்ளது. ஏனென்றால் 2021 மார்ச்சில் 9,303 எர்டிகா கார்களே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

7-இருக்கைகளுடன் பலர் தேர்வு செய்யும் கார்கள் இவைதான்!! பலத்த போட்டி உடன் இன்னோவா & எர்டிகா

இவற்றை தொடர்ந்து 3வது இடத்தை சமீபத்திய அறிமுகமான கியா கேரன்ஸ் எம்பிவி பெற்றுள்ளது. நடப்பு 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கேரன்ஸின் 7,008 யூனிட்களை கியா நிறுவனம் கடந்த மாதத்தில் விற்பனை செய்துள்ளது. இத்தகைய புதிய அறிமுகங்களினால் மஹிந்திரா பொலிரோ போன்ற நீண்ட வருடங்களாக விற்பனையில் இருக்கும் 7-இருக்கை கார்களின் விற்பனை குறைந்துள்ளது.

7-இருக்கைகளுடன் பலர் தேர்வு செய்யும் கார்கள் இவைதான்!! பலத்த போட்டி உடன் இன்னோவா & எர்டிகா

இந்த வரிசையில் 4வது இடத்தில் உள்ள பொலிரோ கடந்த மார்ச்சில் 6,924 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2021 மார்ச்சில் பொலிரோவின் விற்பனை எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கி இருந்தது. 5வது மற்றும் 6வது இடங்களில் உள்ள மற்ற மஹிந்திரா தயாரிப்புகளான ஸ்கார்பியோ & எக்ஸ்யூவி700 மாடல்கள் கடந்த மாதத்தில் முறையே 6,061 யூனிட்கள் மற்றும் 6,040 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

7-இருக்கைகளுடன் பலர் தேர்வு செய்யும் கார்கள் இவைதான்!! பலத்த போட்டி உடன் இன்னோவா & எர்டிகா

இதில் ஸ்கார்பியோவின் விற்பனை 2021 மார்ச் உடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் சுமார் 160% அதிகரித்துள்ளது. ஏனெனில் அந்த மாதத்தில் வெறும் 2,331 ஸ்கார்பியோ கார்களே விற்பனை செய்யப்பட்டிருந்தன. எக்ஸ்யூவி700 மஹிந்திராவின் சமீபத்திய அறிமுகங்களுள் ஒன்றாகும். இவற்றிற்கு அடுத்து இந்த லிஸ்ட்டில் உள்ளவை சற்று பெரிய அளவிலான வித்தியாசங்களுடனே விற்பனை எண்ணிக்கைகளை பதிவு செய்துள்ளன.

7-இருக்கைகளுடன் பலர் தேர்வு செய்யும் கார்கள் இவைதான்!! பலத்த போட்டி உடன் இன்னோவா & எர்டிகா

எந்த அளவிற்கு என்றால், எக்ஸ்யூவி700-க்கு அடுத்து 7வது இடத்தில் உள்ள ரெனால்ட் ட்ரைபரின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 3,561 யூனிட்கள் ஆகும். ஆனால் கடந்த ஆண்டு மார்ச்சில் 4,133 டிரைபர் எம்பிவி கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது இந்த ரெனால்ட் காரின் விற்பனை கிட்டத்தட்ட 14% குறைந்துள்ளது.

7-இருக்கைகளுடன் பலர் தேர்வு செய்யும் கார்கள் இவைதான்!! பலத்த போட்டி உடன் இன்னோவா & எர்டிகா

8வது இடத்தில், கடந்த 2021ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட ஹூண்டாய் அல்கஸார் உள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் மொத்தம் 2,502 அல்கஸார் கார்களை ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. இந்த ஹூண்டாய் 7-இருக்கை காருக்கு விற்பனையில் போட்டியாக உள்ள டாடா சஃபாரி இந்த வரிசையில் 9வது இடத்தை பிடித்துள்ளது.

7-இருக்கைகளுடன் பலர் தேர்வு செய்யும் கார்கள் இவைதான்!! பலத்த போட்டி உடன் இன்னோவா & எர்டிகா

அல்கஸாருக்கு சில மாதங்கள் முன்னதாக கடந்த ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சஃபாரி கடந்த மாதத்தில் மட்டும் 2,227 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது 2021 மார்ச்சில் விற்கப்பட்ட சஃபாரி கார்களுடன் ஒப்பிடுகையில் சில யூனிட்கள் மட்டுமே அதிகமாகும். இதற்கடுத்து இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி 10வது இடத்தில் மாருதி சுஸுகி எக்ஸ்.எல்6 மாடல் உள்ளது.

7-இருக்கைகளுடன் பலர் தேர்வு செய்யும் கார்கள் இவைதான்!! பலத்த போட்டி உடன் இன்னோவா & எர்டிகா

மலிவான எர்டிகா எம்பிவி காரின் பிரீமியம் தர வெர்சனாக விளங்கும் எக்ஸ்.எல்6 கடந்த மாதத்தில் சரியாக 2 ஆயிரம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதுவே 2021 மார்ச்சில் இந்த எண்ணிக்கை 3,062 ஆக பதிவாகி இருந்தது. இந்த வகையில் பார்த்தோமேயானால், எக்ஸ்.எல்6 கார்களின் விற்பனை கடந்த மாதத்தில் கிட்டத்தட்ட 35% குறைந்துள்ளது. விரைவில் எர்டிகாவின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதனை தொடர்ந்து எக்ஸ்.எல்6-இன் ஃபேஸ்லிஃப்ட் மாடலையும் எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, April 11, 2022, 11:16 [IST]
English summary
Toyota innova finished on top of seven seater sales march 2022
மேலும்... #விற்பனை #sales
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+