அதிகம் மைலேஜ் தரும் இன்னோவா ஹைகிராஸ் ஷோரூம்களுக்கு வர ஆரம்பிச்சிருச்சு... ஷோரூம்களில் கூட்டம் அல மோதபோகுது!
டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் எம்பிவி ஷோரூம்களுக்கு வர தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த கார் ஷோரூமில் இருப்பதைப் போன்ற படங்கள் இணையத்தில் வெளியாக தொடங்கி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
டொயோட்டா நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையில் இன்னோவா ஹைகிராஸ் காரை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்தியாவில் இன்னோவா கிரிஸ்டா எம்பிவி காருக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் வகையில் நிறுவனம் புதிய இன்னோவா ஹைகிராஸை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க உள்ளது. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் இன்னோவா கிரிஸ்டா உடன் இணைந்து இந்த கார் விற்பனையில் இருக்கும் என டொயோட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

2023 ஜனவரியிலேயே இந்த கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட உள்ளது. இதன் வருகையை முன்னிட்டு ஏற்கனவே நாட்டில் புக்கிங் பணிகள் தொடங்கிவிட்டன. ரூ. 50 ஆயிரம் முன் தொகையில் இன்னோவா ஹைகிராஸ் காருக்கான முன் பதிவுகள் ஏற்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே விற்பனைக்காக டொயோட்டா ஷோரூம்களுக்கு இன்னோவா ஹைகிராஸ் வர தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஷோரூம்களில் இன்னோவா ஹைகிராஸ் கார் காட்சியளிக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
இதன் வாயிலாக வெறும் படங்களில் மட்டுமே காட்சியளித்து வந்த இன்னோவா ஹைகிராஸ் தற்போது நேரில் காட்சியளிக்கத் தொடங்கியிருக்கின்றது. இப்போது வரை காரின் விலை பற்றிய விபரம் அறிவிக்கப்படவில்லை. ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் அறிமுக நிகழ்வின்போதே விலை விபரம் அறிவிக்கப்பட இருக்கின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் இன்னோவா ஹைகிராஸ் கார் ரூ. 18 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது.

புதிய இன்னோவா ஹைகிராஸ் அளவிலும், சிறப்பு வசதிகளும் இன்னோவா கிரிஸ்டாவைக் காட்டிலும் மிக சிறப்பான தயாரிப்பாக உருவாக்கியுள்ளது. ஆகையால், இதன் விலையும் சற்றும் அதிகமாகவே இருக்கும் என கூறப்படுகின்றது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் இன்னோவா ஹைகிராஸ் ரூ. 21 லட்சம் தொடங்கி ரூ. 22 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரை டொயோட்டா நிறுவனம் வெறும் பெட்ரோல் மோட்டார் தேர்வில் மட்டுமே விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.
அதேவேளையில் இரு விதமான பெட்ரோல் மோட்டார் தேர்வு இதில் வழங்கப்படும். ஒன்று வழக்கமான பெட்ரோல் மோட்டாராகவும், மற்றொன்று ஹைபிரிட் தொழில்நுட்பம் வசதிக் கொண்ட பெட்ரோல் மோட்டாரகவும் விற்பனைக்குக் கிடைக்கும். இதில் ஹைபிரிட் வசதியுடன் இன்னோவா ஹைகிராஸ் அதிக மைலேஜ் தரும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரு லிட்டருக்கே 21 கிமீ மைலேஜை அது வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லைங்க, அதிக சிறப்பு வசதிகள் நிறைந்த காராகவும் இது உருவாக்கப்பட்டுள்ளது.

அதேவேலையில், இதன் வழக்கமான பெட்ரோல் வெர்ஷன் ஒரு லிட்டருக்கு 15 கிமீ வரை மைலேஜ் தரும். இதுமட்டுமில்லைங்க இந்த காரை சற்று முரட்டு தனமான தோற்றம் கொண்டதாகவும் டொயோட்டா உருவாக்கி உள்ளது. புதிய க்ரில், குரோம் அக்செண்டுகள், பிளாக் இன்செர்டுகள், புதிய பம்பர், அகலமான ஏர் இன்லெட், புதிய ஸ்டைலிலான எல்இடி டே டைம் லைட், எல்இடி புரஜெக்டர் ரக ஹெட்லைட் இவையே காரின் முரட்டுத் தனமான தோற்றத்திற்கு காரணமாக உள்ளது.
இது தவிர, பனோரமிக் சன்ரூஃப், அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் போன்ற நவீன கால தொழில்நுட்ப வசதிகளும் புதிய இன்னோவா ஹைகிராஸில் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக பார்த்த அம்சங்கள் மட்டும் இன்றி இன்னும் பற்பல பிரீமியம் அம்சங்கள் இந்த காரில் அலங்கரிக்கும் விதமாக வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமான ஒன்றாக அடாஸ் அம்சம் இருக்கின்றது. இந்த அம்சத்தின் வாயிலாக தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம், லேன் டிபார்ச்சர் வார்னிங், லேன் கீப் அசிஸ்ட், ரியர் கிராஸ் டிராஃபிக் அலர்ட், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டரிங் அம்சம் உள்ளிட்டவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ரியர் மற்றும் முன் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த அதிகம் மைலேஜ் தரும் இன்னோவா ஹைகிராஸ் காரை கேப் துறையிலும் வாங்கி பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்காக இன்னோவா ஹைகிராஸின் ஆரம்ப நிலை தேர்வு ஒதுக்கப்பட்டுள்ளது. ஜி எனும் வேரியண்டே இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஜி, ஜிஎக்ஸ், விஎக்ஸ், இசட்எக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் (ஓ) ஆகிய தேர்வுகளிலேயே இன்னோவா ஹைகிராஸ் விற்பனைக்குக் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








