இன்னோவாங்கற பேருக்காகவே வாங்கலாம்! இதுல இவ்ளோ வசதிலாம் வேற இருக்கா! போட்டி நிறுவனங்களுக்கு தூக்கம் போச்சு!

டொயோட்டா இன்னோவா காரின் புதிய மாடல் தொடர்பாக பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இன்னோவாங்கற பேருக்காகவே வாங்கலாம்! இதுல இவ்ளோ வசதிலாம் வேற இருக்கா! போட்டி நிறுவனங்களுக்கு தூக்கம் போச்சு!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross). இந்த புதிய மாடல் வரும் நவம்பர் 21ம் தேதி இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அங்கு டொயோட்டா இன்னோவா ஜெனிக்ஸ் (Toyota Innova Zenix) என்ற பெயரில் இந்த கார் விற்பனை செய்யப்படும்.

இன்னோவாங்கற பேருக்காகவே வாங்கலாம்! இதுல இவ்ளோ வசதிலாம் வேற இருக்கா! போட்டி நிறுவனங்களுக்கு தூக்கம் போச்சு!

இதைத்தொடர்ந்து வரும் நவம்பர் 25ம் தேதி இந்தியாவில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இதன்பின் வரும் ஜனவரி மாதம் இந்தியாவில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் விலைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலைகள் அறிவிக்கப்பட்ட உடனேயே டெலிவரி பணிகள் உடனடியாக தொடங்கப்படலாம்.

இன்னோவாங்கற பேருக்காகவே வாங்கலாம்! இதுல இவ்ளோ வசதிலாம் வேற இருக்கா! போட்டி நிறுவனங்களுக்கு தூக்கம் போச்சு!

இதற்கு முன்னதாக டொயோட்டா நிறுவனம் புதிய இன்னோவா ஹைக்ராஸ் காரின் டீசர் புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. முதலில் இன்னோவா ஹைக்ராஸ் காரின் முன் பகுதியை வெளிக்காட்டும் டீசர் புகைப்படம் ஒன்றை டொயோட்டா வெளியிட்டிருந்தது. இந்த புதிய மாடலின் கம்பீரமான க்ரில் மற்றும் நேர்த்தியான எல்இடி ஹெட்லேம்ப்களை இதன் மூலமாக நம்மால் பார்க்க முடிந்தது.

இன்னோவாங்கற பேருக்காகவே வாங்கலாம்! இதுல இவ்ளோ வசதிலாம் வேற இருக்கா! போட்டி நிறுவனங்களுக்கு தூக்கம் போச்சு!

இதை தொடர்ந்து டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் இரண்டாவது டீசர் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. புதிய டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் பக்கவாட்டு பகுதி எப்படி இருக்கும்? என்பதை இந்த புதிய டீசர் புகைப்படம் நமக்கு ஓரளவிற்கு காட்டுகிறது. குறிப்பாக இந்த காரின் கேரக்டர் லைன்களை ஹைலைட் செய்யும் விதத்தில் இந்த டீசர் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

இன்னோவாங்கற பேருக்காகவே வாங்கலாம்! இதுல இவ்ளோ வசதிலாம் வேற இருக்கா! போட்டி நிறுவனங்களுக்கு தூக்கம் போச்சு!

மேலும் முன் பக்க கதவில், ஹைப்ரிட் பேட்ஜ் இடம்பெற்றுள்ளதையும் காண முடிகிறது. ஆம், இது ஹைப்ரிட் கார்தான். டொயோட்டா நிறுவனம் வெகு சமீபத்தில் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் என்ற ஹைப்ரிட் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்த நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்னோவா ஹைக்ராஸ் ஹைப்ரிட் காரை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

இன்னோவாங்கற பேருக்காகவே வாங்கலாம்! இதுல இவ்ளோ வசதிலாம் வேற இருக்கா! போட்டி நிறுவனங்களுக்கு தூக்கம் போச்சு!

புதிய டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில், 2.0 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆனால் டீசல் இன்ஜின் ஆப்ஷன் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதேசமயம் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் அதிநவீன வசதிகள் எல்லாம் இடம்பெற்றிருக்கும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னோவாங்கற பேருக்காகவே வாங்கலாம்! இதுல இவ்ளோ வசதிலாம் வேற இருக்கா! போட்டி நிறுவனங்களுக்கு தூக்கம் போச்சு!

இதன்படி டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) தொழில்நுட்ப வசதி வழங்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் இந்திய சந்தையில் அடாஸ் வசதியை பெறும் டொயோட்டா நிறுவனத்தின் முதல் கார் என்ற பெருமையை இன்னோவா ஹைக்ராஸ் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இன்னோவாங்கற பேருக்காகவே வாங்கலாம்! இதுல இவ்ளோ வசதிலாம் வேற இருக்கா! போட்டி நிறுவனங்களுக்கு தூக்கம் போச்சு!

இதன்படி டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில், லேன் கீப் அஸிஸ்ட், ஆட்டோ ஹை பீம் அஸிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் லேன் டிபார்ச்சர் வார்னிங் போன்ற பல்வேறு வசதிகள் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பனரோமிக் சன்ரூஃப் வசதியும் வழங்கப்பட்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னோவாங்கற பேருக்காகவே வாங்கலாம்! இதுல இவ்ளோ வசதிலாம் வேற இருக்கா! போட்டி நிறுவனங்களுக்கு தூக்கம் போச்சு!

எனவே டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன. இந்திய சந்தையில் தற்போது டொயோட்டா நிறுவனம் இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) காரை விற்பனை செய்து வருகிறது. டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் அறிமுகத்திற்கு பின், இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விற்பனை நிறுத்தப்படாது என கூறப்படுகிறது.

இன்னோவாங்கற பேருக்காகவே வாங்கலாம்! இதுல இவ்ளோ வசதிலாம் வேற இருக்கா! போட்டி நிறுவனங்களுக்கு தூக்கம் போச்சு!

அதாவது இரண்டு மாடல்களுமே விற்பனை செய்யப்படும். இதற்கு முன்னதாக டொயோட்டா நிறுவனம் க்ளான்சா காரின் புதிய சிஎன்ஜி மாடலை (Toyota Glanza CNG) விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா க்ளான்சா காரானது, இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றாகும்.

இன்னோவாங்கற பேருக்காகவே வாங்கலாம்! இதுல இவ்ளோ வசதிலாம் வேற இருக்கா! போட்டி நிறுவனங்களுக்கு தூக்கம் போச்சு!

மாருதி சுஸுகி பலேனோ, டாடா அல்ட்ராஸ் போன்ற கார்கள், டொயோட்டா க்ளான்சா காரின் மிக முக்கியமான போட்டியாளர்களாக இருந்து வருகின்றன. பெட்ரோல், டீசலின் அதிகப்படியான விலை காரணமாக இந்தியாவில் தற்போது சிஎன்ஜி கார்கள் பிரபலமடைந்து வரும் நிலையில், டொயோட்டா க்ளான்சா காரின் புதிய சிஎன்ஜி மாடல் வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota innova hycross hybrid mpv side profile teased
Story first published: Friday, November 4, 2022, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X