டொயோட்டா இன்னோவா காரில் இப்படி ஒரு புது மாடல் வரப்போகுதா! வாங்கறதுக்கு எல்லாரும் க்யூ-ல நிக்க போறாங்க!

இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் பற்றிய முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டொயோட்டா இன்னோவா காரில் இப்படி ஒரு புது மாடல் வரப்போகுதா! வாங்கறதுக்கு எல்லாரும் க்யூ-ல நிக்க போறாங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross). இந்த காரை டொயோட்டா நிறுவனம் தீபாவளி பண்டிகைக்கு பிறகு இந்திய சந்தையில் பொது பார்வைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா இன்னோவா காரில் இப்படி ஒரு புது மாடல் வரப்போகுதா! வாங்கறதுக்கு எல்லாரும் க்யூ-ல நிக்க போறாங்க!

அனேகமாக இந்த கார் வரும் நவம்பர் மாதம் பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதை தொடர்ந்து இந்த புத்தம் புதிய எம்பிவி கார் வரும் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இன்னும் சுமார் 4 மாத காலத்திற்குள் இந்த புதிய எம்பிவி காரின் விலை எவ்வளவு? என்பது நமக்கு தெரியவந்து விடும்.

டொயோட்டா இன்னோவா காரில் இப்படி ஒரு புது மாடல் வரப்போகுதா! வாங்கறதுக்கு எல்லாரும் க்யூ-ல நிக்க போறாங்க!

இங்கே குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம் என்னவென்றால் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) காருடன் இணைந்தே டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரும் விற்பனை செய்யப்படும். டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் நடப்பாண்டு பொது பார்வைக்கு கொண்டு வரவுள்ள 2வது மிகப்பெரிய காராக டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கருதப்படுகிறது.

டொயோட்டா இன்னோவா காரில் இப்படி ஒரு புது மாடல் வரப்போகுதா! வாங்கறதுக்கு எல்லாரும் க்யூ-ல நிக்க போறாங்க!

முன்னதாக நடப்பாண்டில் டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) காரை அறிமுகம் செய்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். இதை தொடர்ந்து விற்பனைக்கு வரவுள்ள டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் உலக சந்தைக்கான கார் ஆகும். இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் டொயோட்டா நிறுவனம் இந்த இன்னோவா ஹைக்ராஸ் காரை விற்பனை செய்யவுள்ளது.

டொயோட்டா இன்னோவா காரில் இப்படி ஒரு புது மாடல் வரப்போகுதா! வாங்கறதுக்கு எல்லாரும் க்யூ-ல நிக்க போறாங்க!

அனேகமாக வெளிநாடுகளில் இந்த கார், டொயோட்டா இன்னோவா ஜெனிக்ஸ் (Toyota Innova Zenix) என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் அதற்கு முந்தைய வெர்ஷன்கள் ரியர் வீல் டிரைவ் செட்-அப்பை கொண்டுள்ளன. ஆனால் புதிய டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் ஃப்ரண்ட் வீல் டிரைவ் செட்-அப்பை பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா இன்னோவா காரில் இப்படி ஒரு புது மாடல் வரப்போகுதா! வாங்கறதுக்கு எல்லாரும் க்யூ-ல நிக்க போறாங்க!

இந்தோனேசியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டபோது ஏற்கனவே கேமராவின் கண்களில் சிக்கியுள்ளது. அந்த புகைப்படங்களை வைத்து பார்க்கையில் வழக்கமான எம்பிவி கார்களின் டிசைனை இது பெற்றிருக்கும் என்பது தெரிய வருகிறது.

டொயோட்டா இன்னோவா காரில் இப்படி ஒரு புது மாடல் வரப்போகுதா! வாங்கறதுக்கு எல்லாரும் க்யூ-ல நிக்க போறாங்க!

மேலும் டொயோட்டா நிறுவனத்தின் புதிய கார்களில் வழங்கப்பட்டிருக்கும் டிசைன் மொழியையும் இன்னோவா ஹைக்ராஸ் கொண்டிருக்கும். அத்துடன் தற்போது விற்பனையில் உள்ள டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை விட, புதிய இன்னோவா ஹைக்ராஸ் கார் சற்று நீளமாக இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டொயோட்டா இன்னோவா காரில் இப்படி ஒரு புது மாடல் வரப்போகுதா! வாங்கறதுக்கு எல்லாரும் க்யூ-ல நிக்க போறாங்க!

அதே நேரத்தில் எம்பிவி கார்களுக்கே உரித்தான இடவசதி, பல்வேறு இருக்கை ஆப்ஷன்கள் ஆகியவற்றை டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கொண்டிருக்கும். செயல்திறனை பொறுத்தவரையில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் இருக்காது என கூறப்படுகிறது. அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரை போல், பெட்ரோல்-ஹைப்ரிட் ஆப்ஷனை மட்டுமே இந்த புதிய மாடல் கொண்டிருக்கும்.

டொயோட்டா இன்னோவா காரில் இப்படி ஒரு புது மாடல் வரப்போகுதா! வாங்கறதுக்கு எல்லாரும் க்யூ-ல நிக்க போறாங்க!

ஆனால் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரில் வழங்கப்பட்டிருப்பது சிறிய 1.5 லிட்டர் இன்ஜின் ஆகும். புதிய டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரிலோ பெரிய 2.0 லிட்டர் இன்ஜின் வழங்கப்படலாம். வரும் நாட்களில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் பற்றிய கூடுதல் தகவல்கள் நமக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா இன்னோவா காரில் இப்படி ஒரு புது மாடல் வரப்போகுதா! வாங்கறதுக்கு எல்லாரும் க்யூ-ல நிக்க போறாங்க!

இந்திய சந்தையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஏற்கனவே மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த சூழலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள புதிய டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காருக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உற்சாகமான வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 14, 2022, 17:09 [IST]
English summary
Toyota innova hycross india launch details
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+