தேதி குறிச்சுட்டாங்க... யாருமே எதிர்பார்க்காத அவதாரத்தில் வருகிறது இன்னோவா... இனி ஆட்டத்தை மட்டும் பாருங்க!

டொயோட்டா இன்னோவா கார் புதிய அவதாரம் எடுக்கவுள்ள நிலையில், அதற்கான தேதி குறிக்கப்பட்டுள்ளது.

தேதி குறிச்சுட்டாங்க... யாருமே எதிர்பார்க்காத அவதாரத்தில் வருகிறது இன்னோவா... இனி ஆட்டத்தை மட்டும் பாருங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta). இந்திய வாடிக்கையாளர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ள கார்களில் ஒன்று என்றும் கூட இதனை குறிப்பிடலாம். இது எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் மிகவும் பிரபலமாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

தேதி குறிச்சுட்டாங்க... யாருமே எதிர்பார்க்காத அவதாரத்தில் வருகிறது இன்னோவா... இனி ஆட்டத்தை மட்டும் பாருங்க!

தாராளமான இடவசதி, தேவைக்கு ஏற்ற வசதிகள் மற்றும் சக்தி வாய்ந்த இன்ஜின் ஆகியவை இதற்கு மிகவும் முக்கியமான காரணங்கள் ஆகும். அத்துடன் டொயோட்டா நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மையும் கூட இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து, எதிர்மறை விமர்சனங்கள் இல்லாத காராக இன்னோவா க்ரிஸ்ட்டாவை மாற்றியுள்ளன.

தேதி குறிச்சுட்டாங்க... யாருமே எதிர்பார்க்காத அவதாரத்தில் வருகிறது இன்னோவா... இனி ஆட்டத்தை மட்டும் பாருங்க!

இந்த சூழலில், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) என்ற பெயரில், புதிய மாடல் ஒன்று இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார், வரும் நவம்பர் 25ம் தேதி (November 25) பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

தேதி குறிச்சுட்டாங்க... யாருமே எதிர்பார்க்காத அவதாரத்தில் வருகிறது இன்னோவா... இனி ஆட்டத்தை மட்டும் பாருங்க!

தற்போது வெளியாகியுள்ள இந்த புதிய தகவல், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் மீதான ஆவலை அதிகரிக்க செய்துள்ளது. இதை தொடர்ந்து 2023ம் ஆண்டின் தொடக்கத்தில் நடக்கவுள்ள ஆட்டோ எக்ஸ்போ (Auto Expo 2023) திருவிழாவில், இன்னோவா ஹைக்ராஸ் காரின் விலை எவ்வளவு? என்பதை டொயோட்டா நிறுவனம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேதி குறிச்சுட்டாங்க... யாருமே எதிர்பார்க்காத அவதாரத்தில் வருகிறது இன்னோவா... இனி ஆட்டத்தை மட்டும் பாருங்க!

இந்தியாவின் மிகப்பெரிய வாகன திருவிழாக்களில் ஒன்றாக கருதப்படும் ஆட்டோ எக்ஸ்போ வரும் ஜனவரி 13ம் தேதி (January 13) தொடங்குகிறது. முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே இன்னோவா ஹைக்ராஸ் காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளை டொயோட்டா நிறுவனம் தொடங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேதி குறிச்சுட்டாங்க... யாருமே எதிர்பார்க்காத அவதாரத்தில் வருகிறது இன்னோவா... இனி ஆட்டத்தை மட்டும் பாருங்க!

எனவே இன்னும் ஒரு சில மாதங்களில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரை நாம் சாலைகளில் காண முடியும். இதற்கு முன்னதாக வரும் நவம்பர் 20 அல்லது 21 ஆகிய தேதிகளிலேயே, இந்தோனேஷியாவில் புதிய டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டு விடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேதி குறிச்சுட்டாங்க... யாருமே எதிர்பார்க்காத அவதாரத்தில் வருகிறது இன்னோவா... இனி ஆட்டத்தை மட்டும் பாருங்க!

அங்கு டொயோட்டா இன்னோவா ஜெனிக்ஸ் (Toyota Innova Zenix) என்ற பெயரில் இந்த கார் விற்பனை செய்யப்படும். இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ள டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில், பனரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் செல்போன் சார்ஜிங் ஆகிய வசதிகள் இடம்பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேதி குறிச்சுட்டாங்க... யாருமே எதிர்பார்க்காத அவதாரத்தில் வருகிறது இன்னோவா... இனி ஆட்டத்தை மட்டும் பாருங்க!

மேலும் முந்தைய மாடல்களுடன் ஒப்பிடும்போது, டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் இடவசதியும் அதிகரிக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த காரில், டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படாது. அதற்கு பதிலாக 2.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

தேதி குறிச்சுட்டாங்க... யாருமே எதிர்பார்க்காத அவதாரத்தில் வருகிறது இன்னோவா... இனி ஆட்டத்தை மட்டும் பாருங்க!

இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் இன்னோவா ஹைக்ராஸ் காரின் விலைகளை நிர்ணயம் செய்வதற்கு தேவையான முயற்சிகளை டொயோட்டா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் வருகைக்கு பின்னர், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விற்பனை நிறுத்தப்பட்டு விடுமா? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.

தேதி குறிச்சுட்டாங்க... யாருமே எதிர்பார்க்காத அவதாரத்தில் வருகிறது இன்னோவா... இனி ஆட்டத்தை மட்டும் பாருங்க!

ஆனால் அப்படி நடக்க வாய்ப்புகள் இல்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஆகிய 2 மாடல்களுமே இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும். டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரை மாருதி சுஸுகி நிறுவனமும் பயன்படுத்தி கொள்ளவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

தேதி குறிச்சுட்டாங்க... யாருமே எதிர்பார்க்காத அவதாரத்தில் வருகிறது இன்னோவா... இனி ஆட்டத்தை மட்டும் பாருங்க!

டொயோட்டா மற்றும் சுஸுகி ஆகிய 2 நிறுவனங்களும் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றன. இந்த கூட்டணியின் மூலம், இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களில் ஒரு சில மாற்றங்களை செய்து டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில் விற்பனை செய்து வருகிறது. டொயோட்டா க்ளான்சா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஆகிய கார்கள் இதற்கு உதாரணம்.

தேதி குறிச்சுட்டாங்க... யாருமே எதிர்பார்க்காத அவதாரத்தில் வருகிறது இன்னோவா... இனி ஆட்டத்தை மட்டும் பாருங்க!

மாருதி சுஸுகி பலேனோ கார்தான், டொயோட்டா க்ளான்சா என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. மறுபக்கம் டொயோட்டா அர்பன் க்ரூஸர் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருவது, மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் ஆகும். இதன்படி புதிய டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரை, மாருதி சுஸுகி நிறுவனம் தனது பிராண்டின் கீழும் விற்பனை செய்யவுள்ளது.

தேதி குறிச்சுட்டாங்க... யாருமே எதிர்பார்க்காத அவதாரத்தில் வருகிறது இன்னோவா... இனி ஆட்டத்தை மட்டும் பாருங்க!

மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா டீலர்ஷிப்கள் மூலம் டொயோட்டா நிறுவனத்தின் புதிய இன்னோவா ஹைக்ராஸ் கார் விற்பனை செய்யப்படும். டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் இன்னோவா ஹைக்ராஸ் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்த பிறகு, மாருதி சுஸுகி நிறுவனத்தின் வெர்ஷன் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 1, 2022, 9:05 [IST]
English summary
Toyota innova hycross india unveil date
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+