அச்சு அசலா டொயோட்டா இன்னோவா மாதிரியே இருக்கும்... மைலேஜை வாரி வழங்கும் புதிய காரை களத்தில் இறக்குகிறது மாருதி!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கார்களில் ஒன்று டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross). டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த நவம்பர் மாத இறுதியில், புதிய இன்னோவா ஹைக்ராஸ் காரை பொது பார்வைக்கு கொண்டு வந்தது.

ஏற்கனவே விற்பனையில் உள்ள டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) காரை விட பெரியதாக டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த கார் என்றாலும், எஸ்யூவி (SUV) ரக கார்களின் சாயலும் தெரிகிறது. ஆனால் இன்னோவா ஹைக்ராஸ் காரின் விலைகளை டொயோட்டா நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. வரும் ஜனவரி மாதம் 2023 ஆட்டோ எக்ஸ்போ (2023 Auto Expo) நடைபெறுகிறது.

அச்சு அசலா டொயோட்டா இன்னோவா மாதிரியே இருக்கும்... மைலேஜை வாரி வழங்கும் புதிய காரை களத்தில் இறக்குகிறது மாருதி!

பொங்கல் பண்டிகையை கூடுதல் சிறப்பாக்கும் வகையில், ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் விலைகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரை தனது பிராண்டின் கீழ் விற்பனைக்கு செய்வதற்கு மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனமும் திட்டமிட்டு வருகிறது. டொயோட்டா மற்றும் சுஸுகி நிறுவனங்களுக்கு இடையே கூட்டணி இருந்து வருவது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் மாருதி சுஸுகி வெர்ஷன் வரும் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டிசைனை பொறுத்தவரையில், புதிய க்ரில் உள்பட மாருதி சுஸுகி வெர்ஷனில் ஒரு சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள இரண்டாவது ஹைப்ரிட் (Hybrid) கார் ஆகும்.

முன்னதாக க்ராண்ட் விட்டாரா (Grand Vitara) என்ற ஹைப்ரிட் காரை மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் வழங்கப்பட்டுள்ள அதே 2.0 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜின்தான், மாருதி சுஸுகி வெர்ஷனிலும் இடம்பெறும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 183 பிஹெச்பி பவரையும், 206 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் இந்த இன்ஜினுடன், இ-சிவிடி கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ஒரு லிட்டருக்கு 21.1 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே மாருதி சுஸுகி வெர்ஷனும் சிறப்பான மைலேஜை வழங்கும். இதுதவிர டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில், ஹைப்ரிட் அல்லாமல், ப்யூர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. அது 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகும்.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 172 பிஹெச்பி பவரையும், 197 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ஆப்ஷனும் மாருதி சுஸுகி வெர்ஷனில் வழங்கப்படலாம். அத்துடன் டொயோட்டா நிறுவனத்தை போல், மாருதி சுஸுகி நிறுவனமும் இந்த எம்பிவி காரில், அடாஸ் (ADAS) வசதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அடாஸ் வசதி இடம்பெறும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் கார் என்ற பெருமையை இது பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்திய கார்களில் அடாஸ் வசதி தற்போது மிகவும் வேகமாக பிரபலமடைந்து வருகிறது. இது மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பம் ஆகும். எனவே இந்த வசதி கொண்ட கார்களுக்கு வாடிக்கையாளர்கள் நல்ல வரவேற்பை வழங்கி வருகின்றனர். இதற்கிடையே டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் மாருதி சுஸுகி வெர்ஷன் பிரீமியமான மாடல் என்பதால், அந்நிறுவனத்தின் நெக்ஸா (NEXA) ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 21, 2022, 17:37 [IST]
English summary
Toyota innova hycross maruti suzuki version india launch new details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+