தம்பி கேட்ட மூட்றா... புதிய அவதாரம் எடுக்கிறது டொயோட்டா இன்னோவா... போட்டி நிறுவனங்களுக்கு குளிர் காய்ச்சல்!
டொயோட்டா இன்னோவா கார் வெகு விரைவில் புதிய அவதாரம் எடுக்கவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டொயோட்டா நிறுவனம் வெகு சமீபத்தில் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த ஹைப்ரிட் கார் ஆகும். மைல்டு ஹைப்ரிட் மற்றும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் ஆப்ஷன்களில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) காரை டொயோட்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இது எம்பிவி ரகத்தை சேர்ந்த ஹைப்ரிட் கார் ஆகும். டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்னதாக இன்னோவா ஹைக்ராஸ் காரின் டீசரை டொயோட்டா நிறுவனம் தற்போது அதிரடியாக வெளியிட்டுள்ளது.

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் முதலில் இந்தோனேஷிய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக இந்த புதிய மாடல் வரும் நவம்பர் மாதமே அங்கு அறிமுகம் செய்யப்பட்டு விடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதை தொடர்ந்து இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் புதிய டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

டொயோட்டா நிறுவனத்தின் சர்வதேச மாடல்களில் இருந்து பெறப்பட்ட கம்பீரமான க்ரில் அமைப்பு முன் பகுதியில் இடம்பெற்றிருப்பதை, புதிய இன்னோவா ஹைக்ராஸ் காரின் டீசர் புகைப்படம் நமக்கு எடுத்து காட்டுகிறது. புதிய டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் தற்போது இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகி, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்துள்ளன.

புதிய டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாள் இன்னும் வெகு தூரத்தில் இல்லை என்பதை இந்த புகைப்படங்கள் நமக்கு எடுத்து காட்டுகின்றன. அதாவது வெகு விரைவிலேயே இந்த புதிய மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். அனேகமாக நடப்பாண்டு இறுதிக்குள்ளாகவோ அல்லது 2023ம் ஆண்டின் தொடக்கத்திலேயோ டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

புதிய டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில், 2.0 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆனால் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படாது என கூறப்படுகிறது. டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் விற்பனைக்கு வந்த பின்பு, மாருதி சுஸுகி நிறுவனமும் இந்த காரில் தனது வெர்ஷனை விற்பனைக்கு கொண்டு வரலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது சுஸுகி நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ள கூட்டணியின் அடிப்படையில் இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களை டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டின் கீழ் ரீ-பேட்ஜ் செய்து விற்பனை செய்து கொண்டுள்ளது. டொயோட்டா அர்பன் க்ரூஸர் (மாருதி சுஸுகி பிரெஸ்ஸா) மற்றும் டொயோட்டா க்ளான்சா (மாருதி சுஸுகி பலேனோ) போன்ற கார்களை இதற்கு உதாரணமாக கூற முடியும்.

இதே பாணியில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரை, மாருதி சுஸுகி நிறுவனம் தனது பிராண்டில் ரீ-பேட்ஜ் செய்து விற்பனை செய்யலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் டொயோட்டா இன்னோவா என்ற பெயர் ஏற்கனவே மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது. இந்த சூழலில் விற்பனைக்கு வரவுள்ள புதிய இன்னோவா ஹைக்ராஸ் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








