இன்னோவா ரசிகர்கள் தலையில் குண்டை தூக்கி போட்டுட்டாங்க! கத்தை கத்தையா பணத்தை கொட்டினாலும் வாங்கறது கஷ்டம்!

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) கார் வெகு சமீபத்தில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. எஸ்யூவி (SUV) மற்றும் எம்பிவி (MPV) ரக கார்களின் கலவையாக டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

சௌகரியம், பிரீமியம் மற்றும் அதிநவீன வசதிகள் கொண்ட ஒரு காரை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும். இவற்றுடன் டொயோட்டா நிறுவனம் மீதான நம்பகத்தன்மையும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகமாக இருப்பதால், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் விற்பனையில் சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. G, GX, VX, ZX மற்றும் ZX (O) என மொத்தம் 5 வேரியண்ட்களில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் கிடைக்கும்.

இன்னோவா ரசிகர்கள் தலையில் குண்டை தூக்கி போட்டுட்டாங்க! கத்தை கத்தையா பணத்தை கொட்டினாலும் வாங்கறது கஷ்டம்!

இதில், G மற்றும் GX ஆகிய வேரியண்ட்களில், 2.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படும். அதே நேரத்தில் எஞ்சிய VX, ZX மற்றும் ZX (O) ஆகிய வேரியண்ட்களில் 2.0 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்படும். இந்த இரண்டு இன்ஜின்களுடனும், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்ஜின் சக்தியானது, முன் பக்க வீல்களுக்கு செலுத்தப்படும்.

ஆனால் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படாது. எனினும் இந்த காரில் போதும் போதுமெனும் அளவிற்கு டொயோட்டா நிறுவனம் வசதிகளை வாரி வழங்கியுள்ளது. இதில், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் உடன் கூடிய 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்றவை குறிப்பிடத்தகுந்தவை.

இதுதவிர முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள் மற்றும் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் பெரிய பனரோமின் சன்ரூஃப் வசதிகளையும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் பெற்றுள்ளது. பாதுகாப்பை பொறுத்தவரையில், டைனமிக் ரேடார் க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோ ஹை பீம், ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டர், 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், இபிடி உடன் ஏபிஎஸ் ஆகிய வசதிகள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன.

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் 2.0 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 21.1 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உருவத்தில் மிகவும் பெரிய டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் இவ்வளவு அதிகமான மைலேஜ் வழங்குவது, உண்மையிலே மிகவும் சிறப்பான ஒரு விஷயம் ஆகும். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்த டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரை, வெற்றிகரமான ஒன்றாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காருக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 50 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் டாப் வேரியண்ட்களைதான் இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது மிகவும் அதிக அளவில் முன்பதிவு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி கொண்டுள்ளன.

இதை எல்லாம் வைத்து பார்க்கையில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் ஒரு சில வேரியண்ட்களுக்கான காத்திருப்பு காலம் 6 மாதங்கள் வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நாட்டின் சில பகுதிகளில், இந்த காரின் ஒரு சில வேரியண்ட்களுக்கான காத்திருப்பு காலம் 12 மாதங்களை தொடுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே புதிய டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரை டெலிவரி பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் பொறுமை காக்க வேண்டியிருக்கும்.

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் விலைகள் வரும் ஜனவரி மாதம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையிலான விலையை இந்த காருக்கு டொயோட்டா நிறுவனம் நிர்ணயம் செய்யும் என நாம் எதிர்பார்க்கலாம். டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் வருகையில், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) காரின் விற்பனை நிறுத்தப்படாது. அந்த காரும் இந்திய சந்தையில் தொடர்ந்து விற்பனை செய்யப்படும்.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota innova hycross waiting period details
Story first published: Monday, December 12, 2022, 13:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X