டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டாரின் மார்ச் 2022 விற்பனை நிலவரம்!
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் நடப்பாண்டு மார்ச் மாத விற்பனை நிலவரத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் நடப்பாண்டு மார்ச் மாதம் 17,130 கார்களை விற்பனை செய்துள்ளது. டொயோட்டா நிறுவனத்தின் மாடல் வாரியான விற்பனை விபரத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இன்னோவா க்ரிஸ்ட்டா (7,917 கார்கள்)
இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனம் நடப்பாண்டு மார்ச் மாதம் 7,917 இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா விற்பனையில் 38 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஏனெனில் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் டொயோட்டா நிறுவனம் 5,743 இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

அர்பன் க்ரூஸர் (3,079)
நடப்பாண்டு மார்ச் மாதம் டொயோட்டா நிறுவனம் 3,079 அர்பன் க்ரூஸர் கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை 3,162 ஆக இருந்தது. இது 2.62 சதவீத வீழ்ச்சியாகும். மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட மாடல்தான் டொயோட்டா அர்பன் க்ரூஸர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாருதி சுஸுகி நிறுவனம் கூடிய விரைவில் புதிய தலைமுறை விட்டாரா பிரெஸ்ஸா சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அதை தொடர்ந்து டொயோட்டா அர்பன் க்ரூஸர் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் புதிய தலைமுறை மாடலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இந்த கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

க்ளான்சா (2,987)
டொயோட்டா நிறுவனம் நடப்பாண்டு மார்ச் மாதம் 2,987 க்ளான்சா கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை 2,989 ஆக இருந்தது. இது 0.07 சதவீத வீழ்ச்சியாகும். டொயோட்டா நிறுவனம் 2022 க்ளான்சா காரை வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. எனவே வரும் மாதங்களில் விற்பனை உயரலாம்.

ஃபார்ச்சூனர் (2,984)
டொயோட்டா நிறுவனம் நடப்பாண்டு மார்ச் மாதம் 2,984 ஃபார்ச்சூனர் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 2,136 ஆக இருந்தது. இது 39.70 சதவீத வளர்ச்சியாகும். ஃபோர்டு எண்டேவர் இந்தியாவை விட்டு வெளியேறியிருப்பது, டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.

கேம்ரி (120)
டொயோட்டா நிறுவனம் நடப்பாண்டு மார்ச் மாதம் 120 கேம்ரி கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 31 ஆக இருந்தது. இது 287.10 சதவீத வளர்ச்சியாகும். நடப்பாண்டு மார்ச் மாதம் விற்பனையில் அதிக சதவீத வளர்ச்சியை பதிவு செய்த டொயோட்டா கார் என்ற பெருமையை கேம்ரி பெற்றுள்ளது.

ஹிலக்ஸ் (43)
டொயோட்டா நிறுவனம் நடப்பாண்டு மார்ச் மாதம் 43 ஹிலக்ஸ் பிக்-அப் டிரக்குகளை விற்பனை செய்துள்ளது. இதன் விற்பனை எண்ணிக்கையை கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிட முடியாது. ஏனெனில் டொயோட்டா ஹைலக்ஸ் பிக்-அப் டிரக், வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

வெல்ஃபயர் (0)
நடப்பாண்டு மார்ச் மாதம் இந்திய சந்தையில் ஒரு வெல்ஃபயர் காரை கூட டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்யவில்லை. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 65 வெல்ஃபயர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இது 100 சதவீத வீழ்ச்சியாகும். இது மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாரிஸ் (0)
நடப்பாண்டு மார்ச் மாதம் டொயோட்டா நிறுவனம் ஒரு யாரிஸ் காரை கூட விற்பனை செய்யவில்லை. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 871 யாரிஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இது 100 சதவீத வீழ்ச்சியாகும். உண்மையில் டொயோட்டா யாரிஸ் இந்திய சந்தையில் விற்பனையில் இருந்து விலக்கப்பட்டு விட்டது.

அடுத்து விற்பனைக்கு வரவுள்ள கார்கள்:
டொயோட்டா நிறுவனம் அடுத்ததாக க்ளான்சா பிரீமியம் ஹேட்ச்பேக்கின் சிஎன்ஜி மாடலை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. மாருதி சுஸுகி பலேனோ காரின் சிஎன்ஜி மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட, க்ளான்சா சிஎன்ஜி மாடலையும் நாம் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். மாருதி சுஸுகி பலேனோவின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட மாடல்தான் க்ளான்சா என்பதை இங்கே உங்களுக்கு நினைவுபடுத்தி கொள்கிறோம். இதை தொடர்ந்து ஏற்கனவே குறிப்பிட்டபடி அர்பன் க்ரூஸரின் புதிய தலைமுறை மாடலையும் டொயோட்டா விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.


Click it and Unblock the Notifications








