டுகோ பெயரில் புதிய நிறுவனத்தை தொடங்கிய டொயோட்டா... செகண்ட் ஹேண்ட் கார்களை சூப்பரான வசதிகளுடன் இங்கு வாங்கலாம்!

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான டொயோட்டா (Toyota) புதிதாக டுகோ (TUCO) எனும் புதிய நிறுவனத்தைத் தொடங்கி இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் வாயிலாக என்ன மாதிரியான செயலை டொயோட்டா இந்தியாவில் மேற்கொள்ள இருக்கின்றது என்பது பற்றிய தகவலை இந்தப் பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

டுகோ பெயரில் புதிய நிறுவனத்தை தொடங்கிய டொயோட்டா... செகண்ட் ஹேண்ட் கார்களை சூப்பரான வசதிகளுடன் இங்கு வாங்கலாம்!

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (Toyota Kirloskar Motor) இந்தியாவில் டுகோ (TUCO) எனும் புதிய நிறுவனத்தைத் தொடங்கியிருக்கின்றது. 'டொயோட்டா பயன்படுத்திய கார் விற்பனையகம்' (Toyota Used Car Outlet) என்பதே டுகோ-வின் விரிவாக்கம் ஆகும். ஆமாங்க, இந்தியாவின் யூஸ்டு கார் விற்பனையில் களமிறங்கும் விதமாக டொயோட்டா இந்த புதிய நிறுவனத்தைத் தொடங்கியிருக்கின்றது. புதிய நிறுவனத்தின் தொடக்கமாக முதல் டுகோ ஷோரூமை கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் டொயோட்டா தொடங்கியிருக்கின்றது.

டுகோ பெயரில் புதிய நிறுவனத்தை தொடங்கிய டொயோட்டா... செகண்ட் ஹேண்ட் கார்களை சூப்பரான வசதிகளுடன் இங்கு வாங்கலாம்!

இந்த நிறுவனத்தின் வாயிலாக பயன்படுத்திய கார்களை அப்படியே விற்பனைக்கு வழங்காமல், அவற்றை புதுப்பித்து (refurbished) விற்பனைக்கு வழங்க இருக்கின்றது, டொயோட்டா. இந்த புதுப்பித்தலின்போது ஏதேனும் உதிரி பாகம் மோசாமான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டால் அவற்றை நிறுவனத்தின் ஒரிஜினல் பாகங்களைக் கொண்டு மாற்ற இருப்பதாக டொயோட்டா தெரிவித்துள்ளது. இந்தியாவில் இன்னும் சில முன்னணி கார் உற்பத்தியாளர்களும் இதுபோன்று செகண்ட்-ஹேண்ட் கார் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன.

டுகோ பெயரில் புதிய நிறுவனத்தை தொடங்கிய டொயோட்டா... செகண்ட் ஹேண்ட் கார்களை சூப்பரான வசதிகளுடன் இங்கு வாங்கலாம்!

ஆனால், அந்த நிறுவனங்கள் டொயோட்டாவைப் போல் ரீஃபர்பிஸ் செய்து கார்களை விற்பனைக்கு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதாவது, ஒரிஜினல் பாகங்களைக் கொண்டு ரீஃபர்பிஸ் செய்து கார்களை விற்பனைக்கு வழங்கவில்லை. ஆகையால், நாட்டின் முதல் ஒரிஜினில் பாகங்களை செகண்ட் கார்களுக்கு வழங்கும் யூஸ்டு கார் விற்பனையாளராக டொயோட்டா மாறியிருக்கின்றது.

டுகோ பெயரில் புதிய நிறுவனத்தை தொடங்கிய டொயோட்டா... செகண்ட் ஹேண்ட் கார்களை சூப்பரான வசதிகளுடன் இங்கு வாங்கலாம்!

மேலும், நிறுவனம் தங்களுடைய சொந்த பிராண்ட் கார்களை மட்டுமே வாங்குதல் மற்றும் விற்றல் ஆகியவற்றை செய்ய இருக்கின்றது. இத்தகைய செயலுக்கான மையத்தையே பெங்களூருவில் பைலட் திட்டத்தின்கீழ் தற்போது டொயோட்டா தொடங்கியிருக்கின்றது. இங்கு டுகோ நிறுவனத்திற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்தே நாட்டின் பிற பகுதிகளுக்கும் இந்த புதிய பிசினஸை கொண்டு செல்ல இருப்பதாக டொயோட்டா தெரிவித்திருக்கின்றது.

டுகோ பெயரில் புதிய நிறுவனத்தை தொடங்கிய டொயோட்டா... செகண்ட் ஹேண்ட் கார்களை சூப்பரான வசதிகளுடன் இங்கு வாங்கலாம்!

டொயோட்டா நிறுவனம் யூஸ்டு கார் பிரிவின்கீழ் விற்பனைக்கு வழங்கும் அனைத்து கார்களையும் முறையான சோதனை மற்றும் பல பரீட்சைக்கு உட்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. இதில், ஏதேனும் பழுது அல்லது சிக்கல் இருப்பது கண்டறியப்பட்டால், அவை உடனடியாக சரிபார்க்கப்பட்டு, அதன் பின்னரே விற்பனைக்கு அக்கார் அனுப்பி வைக்கப்படுமாம்.

டுகோ பெயரில் புதிய நிறுவனத்தை தொடங்கிய டொயோட்டா... செகண்ட் ஹேண்ட் கார்களை சூப்பரான வசதிகளுடன் இங்கு வாங்கலாம்!

மேலும், நிறுவனத்தின்கீழ் விற்பனைக்கு வழங்கப்படும் அனைத்து செகண்ட் ஹேண்ட் கார்களுக்கும் கடன், இன்சூரன்ஸ் மற்றும் அக்ஸசெரீஸ் உள்ளிட்ட சேவைகளை வழங்கவும் டொயோட்டா திட்டமிட்டுள்ளது. இதுதவிர புதிய கார்கள் விற்பனையகத்திற்கு இருப்பதைப் போலவே இந்த செகண்ட் ஹேண்ட் கார்களுக்கு என்று பிரத்யேகமான இணையதளம் உருவாக்கப்பட்டு, அதில் கார்கள் குறித்த முழு விபரமும் வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

டுகோ பெயரில் புதிய நிறுவனத்தை தொடங்கிய டொயோட்டா... செகண்ட் ஹேண்ட் கார்களை சூப்பரான வசதிகளுடன் இங்கு வாங்கலாம்!

இதன் வாயிலாக வாடிக்கையாளர்களால் அனைத்து தகவல்களையும் எளிதாக அறிந்துக் கொள்ள முடியும். காரின் தரம், கார் சார்ந்த ஆவணங்கள், வாகனத்தின் வரலாறு மற்றும் என்ன மாதிரியான புதுப்பித்தல்கள் வழங்கப்பட்டுள்ளன உள்ளிட்ட பல்வேறு தகவல்களை டொயோட்டா அத்தளத்தில் வழங்கும்.

டுகோ பெயரில் புதிய நிறுவனத்தை தொடங்கிய டொயோட்டா... செகண்ட் ஹேண்ட் கார்களை சூப்பரான வசதிகளுடன் இங்கு வாங்கலாம்!

இதுதவிர காரை வாங்குபவர்களுக்கு அக்கார்குறித்த சில சான்றுகள், வாரண்டி மற்றும் வேல்யூ-ஆடட் சர்வீஸ் உள்ளிட்டவையும் வழங்கப்பட உள்ளது. இந்தியாவில் புதிய கார்களுக்கு நிலவுவதைப் போலவே பயன்படுத்திய கார்களுக்கும் மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

டுகோ பெயரில் புதிய நிறுவனத்தை தொடங்கிய டொயோட்டா... செகண்ட் ஹேண்ட் கார்களை சூப்பரான வசதிகளுடன் இங்கு வாங்கலாம்!

இதனால்தான் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களான மாருதி சுஸுகி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களும்கூட செகண்ட் கார் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இதுதவிர, போர்ஷே சொகுசு கார் உற்பத்தி நிறுவனங்களும் யூஸ்டு கார் விற்பனையை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையிலேயே புதிதாக டொயோட்டா நிறுவனமும் அதன் பங்களிப்பை பயன்படுத்திய கார்கள் விற்பனை பிரிவில் வழங்கும் விதமாக அதன் நுழைவை வழங்கியிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, July 8, 2022, 11:32 [IST]
English summary
Toyota launches used car division in india
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+