ஒரு மாச சம்பளம் கையில் இருந்தா போதும்... டொயோட்டா ஹைரைடர் சிஎன்ஜி காரை புக் செய்துவிடலாம்!

சிஎன்ஜிக்கு கார்களுக்கு இந்தியாவில் வரவேற்பு அதிகரித்துக் காணப்படும் நிலையில் டொயோட்டா நிறுவனம் அதன் இரண்டாவது புதுமுக சிஎன்ஜிக்கு கார் மாடலுக்கும் ப்ரீ புக்கிங்கை ஏற்கத் தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஒரு மாச சம்பளம் கையில் இருந்தா போதும்... டொயோட்டா ஹைரைடர் சிஎன்ஜி காரை புக் செய்துவிடலாம்!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அடுத்தபடியாக சிஎன்ஜி வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனைக் கருத்தில் கொண்டு வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் சிஎன்ஜி ஆப்ஷன்களை வழங்கத் தொடங்கியிருக்கின்றனர்.

ஒரு மாச சம்பளம் கையில் இருந்தா போதும்... டொயோட்டா ஹைரைடர் சிஎன்ஜி காரை புக் செய்துவிடலாம்!

ஏற்கனவே இந்த பிரிவில் மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் ஆதிக்கத்தைச் செலுத்தி வரும்நிலையில் புதிதாக ஓர் நிறுவனமும் இந்த பட்டியலில் இணைய இருக்கின்றது. முதல் முறையாக க்ளான்சா சிஎன்ஜி காரை விற்பனைக்குக் கொண்டு வந்ததன் வாயிலாக டொயோட்டா நிறுவனம் ஏற்கனவே இந்தியாவின் சிஎன்ஜி கார்கள் பிரிவில் கால் தடம் பதித்தது.

ஒரு மாச சம்பளம் கையில் இருந்தா போதும்... டொயோட்டா ஹைரைடர் சிஎன்ஜி காரை புக் செய்துவிடலாம்!

இதுவே நிறுவனத்தின் இந்தியாவிற்கான முதல் சிஎன்ஜி தயாரிப்பாகும். இந்த வாகனத்தைத் தொடர்ந்து இரண்டாவது சிஎன்ஜி தயாரிப்பாக டொயோட்டா நிறுவனம் அதன் ஹைரைடர் காரையும் இந்தியாவில் சிஎன்ஜி ஆப்ஷனில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இதன் வருகையை ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்த நிலையில் தற்போது காருக்கான புக்கிங்கை ஏற்க தொடங்கியிருக்கின்றது.

ஒரு மாச சம்பளம் கையில் இருந்தா போதும்... டொயோட்டா ஹைரைடர் சிஎன்ஜி காரை புக் செய்துவிடலாம்!

இதற்கு பலரின் ஒரு மாத சம்பளமாக இருக்கும் ரூ. 25 ஆயிரத்தையே டொயோட்டா நிறுவனம் முன் தொகைக் கட்டணாக வசூலிக்கத் தொடங்கியிருக்கின்றது. ஹைரைடர் சிஎன்ஜி இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். எஸ் மற்றும் ஜி எனும் ட்ரிம்களிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கும். தயாரிப்பு ஆலையிலேயே சிஎன்ஜி கிட்கள் பொருத்தப்பட்ட ட்ரிம்களாக இவை விற்பனைக்கு கிடைக்கும்.

ஒரு மாச சம்பளம் கையில் இருந்தா போதும்... டொயோட்டா ஹைரைடர் சிஎன்ஜி காரை புக் செய்துவிடலாம்!

1.5 லிட்டர் கே15சி 4சிலிண்டர் பெட்ரோல் மோட்டாரிலேயே ஹைரைடர் சிஎன்ஜி விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இதே மோட்டாரையே எர்டிகாவின் சிஎன்ஜி தேர்விலும், எக்ஸ்எல்6 சிஎன்ஜி தேர்விலும் மாருதி சுஸுகி பயன்படுத்தி வருகின்றது. இந்த மோட்டார் நல்ல மைலேஜ் வழங்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஒரு மாச சம்பளம் கையில் இருந்தா போதும்... டொயோட்டா ஹைரைடர் சிஎன்ஜி காரை புக் செய்துவிடலாம்!

தற்போது விற்பனையில் இருக்கும் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 சிஎன்ஜி ஒரு கிலோவிற்கு 26.32 கிமீ மைலேஜை வழங்கும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதேபோல், டொயோட்டோ ஹைரைடர் சிஎன்ஜி ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 26.10 கிமீ வரை மைலேஜ் தரலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை சிஎன்ஜி வாகனம் என தெரியப்படுத்தும் விதமாக டொயோட்டா நிறுவனம் காரின் லோகோவுடன் சேர்த்து சிஎன்ஜி எனும் பேட்ஜ்களையும் வழங்க இருக்கின்றது.

ஒரு மாச சம்பளம் கையில் இருந்தா போதும்... டொயோட்டா ஹைரைடர் சிஎன்ஜி காரை புக் செய்துவிடலாம்!

இதுபோன்ற சிறிய சிறிய மாற்றங்களுடனேயே ஹைரைடர் சிஎன்ஜி வெர்ஷன் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதவிர வேறு எந்த மாற்றத்தையும் டொயோட்டா இக்காரில் மேற்கொள்ளவில்லை. ஆகையால், வழக்கமான ஹைரைடர் காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே தொழில்நுட்ப வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களே சிஎன்ஜி ஹைரைடரிலும் இடம் பெற்றிருக்கின்றது.

ஒரு மாச சம்பளம் கையில் இருந்தா போதும்... டொயோட்டா ஹைரைடர் சிஎன்ஜி காரை புக் செய்துவிடலாம்!

அதாவது, 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், அலெக்ஸா மற்றும் கூகுள் அசிஸ்டன்ஸ், கார் இணைப்பு தொழில்நுட்பம், 4 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், ஸ்டியரிங் வீலில் பன்முக கன்ட்ரோல்கள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா, பேடில் ஷிஃப்டர்கள் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கும்.

ஒரு மாச சம்பளம் கையில் இருந்தா போதும்... டொயோட்டா ஹைரைடர் சிஎன்ஜி காரை புக் செய்துவிடலாம்!

மேலே பார்த்தவை எஸ் ட்ரிம்மில் இடம் பெற்றிருக்கும் அம்சங்களின் பட்டியல் ஆகும். மிடில் ஸ்பெக்கான ஜி ட்ரிம்மில் சற்று பெரிய திரை வழங்கப்பட இருக்கின்றது. 9 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 6 ஸ்பீக்கர் ஆர்கேமிஸ் சவுண்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், மூடுக்கு ஏற்றவாறு ஒளிரக் கூடிய ஆம்பியன்ட் லைட்டுகள், ஒயர்லெஸ் சார்ஜிங் சிஸ்டம், ஹெட் அப் திரை, 6 ஏர்பேக்குகள், குரோம் வின்டோ லைன் கார்னிஷ், ஆட்டோ ஃபோல்டிங் விங் மிர்ரர்கள் என எக்கசக்க அம்சங்கள் இந்த ட்ரிம்மில் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு மாச சம்பளம் கையில் இருந்தா போதும்... டொயோட்டா ஹைரைடர் சிஎன்ஜி காரை புக் செய்துவிடலாம்!

டொயோட்டா நிறுவனம் இந்த சிஎன்ஜி தேர்வுகளின் விலையை இப்போது வரை அறிவிக்கவில்லை. விரைவில் இதுகுறித்த தகவலை அது அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது விற்பனையில் உள்ள பெட்ரோல் மோட்டார் கொண்ட எஸ் மற்றும் ஜி வேரியண்டுகளைக் காட்டிலும் சற்று அதிக விலையில் சிஎன்ஜி வெர்ஷன் எஸ் மற்றும் ஜி ட்ரிம்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. ரூ. 12 லட்சத்துக்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, November 11, 2022, 10:39 [IST]
English summary
Toyota opens pre booking for hyryder cng
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+