300 பிஎச்பி ஆற்றலை வெளியேற்றும் திறனுடன் Toyota GR Corolla வெளியீடு... செம்மையான வேகத்தில் போகலாம்!

ஜப்பானிய கார் உற்பத்தி நிறுவனமான டொயோட்டா, ஜிஆர் கொரோல்லா (Toyota GR Corolla) எனும் அட்டகாசமான மாடலை வெளியீடு செய்திருக்கின்றது. இது அதிகபட்சமாக 300 பிஎச்பி வரை திறனை வெளியேற்றக் கூடியது. இதன் வருகை மற்றும் பிற முக்கிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

300 பிஎச்பி ஆற்றலை வெளியேற்றும் திறனுடன் Toyota GR Corolla வெளியீடு... செம்மையான வேகத்தில் போகலாம்!

டொயோட்டா நிறுவனம் வெளியீடு செய்திருக்கும் ஜிஆர் கொரோல்லா, கஜு ரேசிங் நிறுவனத்தின் கை வண்ணத்தில் உருவாக்கப்பட்ட வாகனமாகும். எனவேதான் இக்காரின் பெயரில் ஜிஆர் எனும் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் கொரோல்லாவைக் காட்டிலும் அதிக திறன் வெளியேற்றும் மற்றும் கவர்ச்சியான காராக இது உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான விபரங்களையே கீழே தொடர்ச்சியாக பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

300 பிஎச்பி ஆற்றலை வெளியேற்றும் திறனுடன் Toyota GR Corolla வெளியீடு... செம்மையான வேகத்தில் போகலாம்!

டொயோட்டா கஜு ரேசிங் கொரோல்லா காரில் அதே டர்போசார்ஜட் 1.6 லிட்டர் இன்-லைன் 3 சிலிண்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜிஆர் யாரிஸ் கார் மாடலிலும் இதே எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. லேசான அப்டேட்டுகளுடன் இந்த எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

300 பிஎச்பி ஆற்றலை வெளியேற்றும் திறனுடன் Toyota GR Corolla வெளியீடு... செம்மையான வேகத்தில் போகலாம்!

இந்த மாற்றத்தினாலேயே ரேஸ் டிராக்கைச் சந்திக்க தயாராக இருக்கும் கார் மாடலாக இது மாறியிருக்கின்றது. இந்த காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மோட்டார் அதிகபட்சமாக 304 எச்பி பவரையும், 370 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இது நிச்சயம் சூப்பர் ஃபாஸ்ட் திறன் ஆகும்.

300 பிஎச்பி ஆற்றலை வெளியேற்றும் திறனுடன் Toyota GR Corolla வெளியீடு... செம்மையான வேகத்தில் போகலாம்!

இந்த எஞ்ஜினில் 6 ஸ்பீடு ஷார்ட் த்ரோ மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன், அனைத்து வீல்கள் இயக்கம் வசதியும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி காரின் முன் பக்கத்தில் மெக்பெர்ஷன் மற்றும் டபுள் விஸ்போன் சஸ்பென்ஷன் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இரு ஆக்ஸில்களிலும் டோரிசன் லிமிடெட் ஸ்லிப் டிஃபெரன்சியல் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மிக சிறப்பான இயக்க அனுபவத்தை வழங்குகின்றன.

300 பிஎச்பி ஆற்றலை வெளியேற்றும் திறனுடன் Toyota GR Corolla வெளியீடு... செம்மையான வேகத்தில் போகலாம்!

சிறந்த பிரேக்கிங் வசதிக்காக அனைத்து வீல்களிலும் வென்டிலேட் வசதிக் கொண்ட டிஸ்க்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர கேலிபர்கள் செட்-அப்பும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன. புதிய ஜிஆர் கொரோல்லா காரில் 18 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் 235/40 R18 அளவுள்ள மிஷ்லின் பைலட் ஸ்போர்ட் டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

300 பிஎச்பி ஆற்றலை வெளியேற்றும் திறனுடன் Toyota GR Corolla வெளியீடு... செம்மையான வேகத்தில் போகலாம்!

இந்த காரின் உருவம் மிகவும் கவர்ச்சியானதாக காட்சியளிக்கின்றது. இதற்காக பன்முக சிறப்பு பேனல்கள் மற்றும் அணிகலன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில், காரின் முன் பக்கத்தில் அகலமான பம்பர் பெரிய காற்று துளையுடன் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, நாசி துவாரங்கள் போன்ற துளை அமைப்பு உடைய பம்பரும் இக்காரில் இடம் பிடித்துள்ளது.

300 பிஎச்பி ஆற்றலை வெளியேற்றும் திறனுடன் Toyota GR Corolla வெளியீடு... செம்மையான வேகத்தில் போகலாம்!

இவை அனைத்தும் காரின் முகப்பு பகுதிக்கு வெற லெவல் கவர்ச்சியான தோற்றத்தை வழங்குகின்றன. இந்த தோற்றத்தை மேலும் மெருகேற்றும் வகையில் 15 அங்குல ஸ்போக் அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்று அனைத்து அம்சங்களும் இந்த காரை தான் ரேஸுக்கு தயார் என்பதை கூறும் வகையில் இடம் பெற்றிருக்கின்றன.

300 பிஎச்பி ஆற்றலை வெளியேற்றும் திறனுடன் Toyota GR Corolla வெளியீடு... செம்மையான வேகத்தில் போகலாம்!

காரின் ரூஃப் பகுதி கார்பன் ஃபைபரால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பின் பகுதியில் மூன்று எக்சாஸ்ட் செட்-அப்புகளை நம்மால் காண முடிகின்றது. இது வழக்கத்திற்கு மாறான அகலமான தோற்றம் கொண்ட ஸ்பாய்லரில் இடம் பெற்றிருக்கின்றது. இதனால் ஜிஆர் கொரோல்லா சற்றே முரட்டுத் தனமான தோற்றத்திலும் காட்சியளிக்கின்றது. இதுமட்டுமின்றி பின்னழகை பல மடங்கு கூட்டும் வகையில் கட்டுமஸ்தான பம்பர், பூட் கதவுகள் காட்சியளிக்கின்றன.

300 பிஎச்பி ஆற்றலை வெளியேற்றும் திறனுடன் Toyota GR Corolla வெளியீடு... செம்மையான வேகத்தில் போகலாம்!

வெளிபுறத்தைப் போலவே காரின் உட்புறமும் மிக சிறப்பானதாக காட்சியளிக்கின்றது. ஸ்போர்ட்ஸ் கார் இருக்கைகள், லெதர் போர்த்தப்பட்ட ஸ்டியரிங் வீல் மற்றும் அலுமினியம் பெடல்கள் உள்ளிட்டவற்றால் கேபின் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இத்துடன், ஸ்டியரிங் வீலிற்கு அருகில் 12.3 இன்ச் அளவுள்ள திரை கொடுக்கப்பட்டுள்ளது.

300 பிஎச்பி ஆற்றலை வெளியேற்றும் திறனுடன் Toyota GR Corolla வெளியீடு... செம்மையான வேகத்தில் போகலாம்!

இந்த திரை பன்முக தகவல்களை வழங்கக் கூடியது. இத்துடன், சேர்த்து 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஒன்றும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் வசதிக் கொண்டது. இத்துடன், கிளவுட் அடிப்படியிலான நேவிகேஷம் அம்சமும் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றது. இவையே தற்போது வெளியீட்டை பெற்றிருக்கும் ஜிஆர் கொரோல்லா காரின் சிறப்பு வசதிகள் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, April 4, 2022, 16:37 [IST]
English summary
Toyota revealed 300 bhp gr corolla officially
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+