என்ன போசுக்குன்னு இன்னோவாக்கு புக்கிங்கை டொயோட்டா நிப்பாட்டிட்டாங்க? என்ன நடக்கப்போகுதோ?
டொயோட்டா நிறுவனம் தற்போது திடீரென இன்னோவா க்ரைஸ்டா காரின் டீசல் கார்களுக்கான புக்கிங்கை நிறுத்தியுள்ளது.
Recommended Video
புதிய கார் வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இது குறித்த விரிவான மற்றும் தெளிவான தகவல்களைக் கீழே காணலாம்.

டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் கார்களை தயாரித்து விற்பனை செய்யும் முன்னோடி நிறுவனம். இந்நிறுவனத்தின் இன்னோவா க்ரைஸ்டா கார் மிகவும் பிரபலமான கார் இந்த கார்களை அதிகமாக இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. குறிப்பாக அரசியல்வாதிகள் அதிகம் இந்த கார்களை வாங்குகின்றனர். இந்த காரில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு வேரியன்ட்களும் இதுவரை விற்பனையாகி வருகின்றன.

இந்நிலையில் டொயோட்டா நிறுவனம் தனது ஷோரூம்களில் புதிய இன்னோவா க்ரைஸ்டா டீசல் காருக்கான புக்கிங்கை நிறுத்தியுள்ளது. இது பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது வெறும் ஷோரூம் புக்கிங் மட்டுமல்லாமல் ஆன்லைன் புக்கிங்கையும் அந்நிறுவனம் நிறுத்தியுள்ளது.

டொயோட்டா இன்னோவா க்ரைஸ்டா காரை பொருத்தவரை டீசல் வேரியன்டில் 2.4 லிட்டர் 4 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 148 பிஎச்பி பவரையும், 343 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும், இந்த இன்ஜின் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் புக்கிங்கை தான் டொயோட்டோ நிறுவனம் நிறுத்தியுள்ளது.

டொயோட்டா பெட்ரோல் காரை பொறுத்தவரை 2.7 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 164 பிஎச்பி பவரையும் 245 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் தற்போது விற்பனையில் இருக்கிறது. இந்த காரை இப்பொழுதும் புக் செய்து கொள்ளலாம். டீசல் காருக்கு மட்டுமே புக்கிங் நிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து டீலர்களிடம் விசாரித்த போது புதிய இன்னோவா க்ரைஸ்டாவின் வருகைக்காக இந்த புக்கிங் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். ஆனால் டொயோட்டா நிறுவனம் சார்பில் இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் புதிய இன்னோவா க்ரைஸ்டா கார் இந்தியாவில் டெஸ்டிங் செய்வது பதிவாகியுள்ளது.

தற்போது புதிதாக வெளியாகவுள்ள இன்னோவா க்ரைஸ்டா கார் ஹைபிரிட் ஆப்ஷன் உடன் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளது. அதாவது பெட்ரோல் இன்ஜின் உடன் சேர்ந்து எலெக்ட்ரிக்கல் இன்ஜினும் சேர்ந்து வருகிறது. ஆனால் மைல்டு ஹைபிரிட்டா, அல்லது ஸ்டிராங்க் ஹைபிரிட்டா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








