இதுதான் டொயோட்டா நிறுவனத்தின் புதிய காரின் பெயரா! பேருக்காகவே காரை வாங்கலாம் போல இருக்கே!

டொயோட்டா நிறுவனத்தின் புதிய காரின் பெயர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இதுதான் டொயோட்டா நிறுவனத்தின் புதிய காரின் பெயரா! பேருக்காகவே காரை வாங்கலாம் போல இருக்கே!

அறிமுகமே தேவையில்லை எனும் அளவிற்கு உலகின் பல்வேறு நாடுகளிலும் டொயோட்டா கார்கள் மிகவும் பிரபலமாக இருக்கின்றன. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் ஃபார்ச்சூனர் மற்றும் இன்னோவா க்ரிஸ்ட்டா போன்ற பல்வேறு பிரபலமான கார்களை விற்பனை செய்து வருகிறது.

இதுதான் டொயோட்டா நிறுவனத்தின் புதிய காரின் பெயரா! பேருக்காகவே காரை வாங்கலாம் போல இருக்கே!

இந்த சூழலில், டைசூர் (Taisor) என்ற பெயரை டொயோட்டா நிறுவனம் தற்போது இந்தியாவில் பதிவு செய்து வைத்துள்ளது. டொயோட்டா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள மாருதி பலேனோ அடிப்படையிலான க்ராஸ்ஓவர் (Maruti Baleno Crossover) காருக்கு இந்த பெயர் பயன்படுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதான் டொயோட்டா நிறுவனத்தின் புதிய காரின் பெயரா! பேருக்காகவே காரை வாங்கலாம் போல இருக்கே!

மாருதி சுஸுகி நிறுவனம் ஒய்டிபி (YTB) என்ற குறியீட்டு பெயரில் தற்போது அழைக்கப்பட்டு வரும் பலேனோ க்ராஸ் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த காரின் டொயோட்டா வெர்ஷனுக்கு டைசூர் என்ற பெயர் சூட்டப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மாருதி காரின் டொயோட்டா வெர்ஷனா? என ஒரு சிலருக்கு இங்கே சந்தேகம் ஏற்படலாம்.

இதுதான் டொயோட்டா நிறுவனத்தின் புதிய காரின் பெயரா! பேருக்காகவே காரை வாங்கலாம் போல இருக்கே!

சுஸுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றன என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் ரெகுலர் வாசகர்களுக்கு நன்றாக தெரியும். இதன் அடிப்படையில் இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களை டொயோட்டா தனது நிறுவனத்தின் கீழ் பெயரை மாற்றி விற்பனை செய்து வருகிறது.

இதுதான் டொயோட்டா நிறுவனத்தின் புதிய காரின் பெயரா! பேருக்காகவே காரை வாங்கலாம் போல இருக்கே!

இந்த வரிசையில்தான் மாருதி பலேனோ க்ராஸ்ஓவர் காரின் டொயோட்டா வெர்ஷனுக்கு டைசூர் என்ற பெயர் வைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை இந்த காருக்கு டைசூர் என்ற பெயர் பயன்படுத்தப்படாவிட்டால், டொயோட்டா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள வேறு ஏதேனும் ஒரு காருக்கு இந்த பெயர் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இதுதான் டொயோட்டா நிறுவனத்தின் புதிய காரின் பெயரா! பேருக்காகவே காரை வாங்கலாம் போல இருக்கே!

அதாவது டொயோட்டா நிறுவனம் புதிய மிட்-சைஸ் எம்பிவி (Mid-size MPV) கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த காருக்கு டைசூர் என்ற பெயர் சூட்டப்பட்டாலும் சூட்டப்படலாம். இதற்கிடையே விற்பனைக்கு வரவுள்ள மாருதி பலேனோ க்ராஸ் காரின் டொயேட்டா வெர்ஷனில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் அல்லது 1.0 லிட்டர் பூஸ்டர்-ஜெட் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இதுதான் டொயோட்டா நிறுவனத்தின் புதிய காரின் பெயரா! பேருக்காகவே காரை வாங்கலாம் போல இருக்கே!

அதே நேரத்தில் இந்த காரில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய 2 வகையான கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படலாம். அத்துடன் இந்த புதிய காரில் ஏராளமான பாதுகாப்பு வசதிகளும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ஏர்பேக்குகள், இபிடி உடனான ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற வசதிகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

இதுதான் டொயோட்டா நிறுவனத்தின் புதிய காரின் பெயரா! பேருக்காகவே காரை வாங்கலாம் போல இருக்கே!

உட்புறத்தை பொறுத்தவரையில், பிரீமியம் அப்ஹோல்ஸ்ட்ரி, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகிய வசதிகள் வழங்கப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 18, 2022, 14:58 [IST]
English summary
Toyota taisor
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+