சர்ப்ரைஸ்... டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் விற்பனைக்கு அறிமுகம்... மைலேஜை வாரி வழங்கும்!

டொயோட்டா நிறுவனம் தனது அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரை இன்று விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் விலை மற்றும் தொழிற்நுட்ப தகவல்கள் வேரியன்ட்கள் குறித்த விபரங்களைக் கீழே காணலாம் வாருங்கள்.

சர்ப்ரைஸ் . . . டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் விற்பனைக்கு அறிமுகம் . . . மைலேஜை வாரி வழங்கும் . . .

டொயோட்டா மற்றும் மாருதி சேர்ந்த தயாரித்த காரை டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸியர் ஹைரடர் என்ற பெயரில் வெளியிடுகிறது. இந்த காருக்கு மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்தக் காரை இந்நிறுவனம் கடந்த ஜூலை மாதம் பொதுப் பார்வைக்காக அறிமுகப்படுத்தியது.

சர்ப்ரைஸ் . . . டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் விற்பனைக்கு அறிமுகம் . . . மைலேஜை வாரி வழங்கும் . . .

இந்த காரை இன்று டொயோட்டா நிறுவனம் அதிகாரப்பூவமாக வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்த காருக்கான புக்கிங்கள் துவங்கப்பட்டு இந்த கார் விற்பனைக்காக ஷோரூம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பொதுப் பார்வைக்கு அறிமுகமாகி 2 மாதங்களுக்குப் பிறகு தற்போது இந்த கார் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

சர்ப்ரைஸ் . . . டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் விற்பனைக்கு அறிமுகம் . . . மைலேஜை வாரி வழங்கும் . . .

இந்த காரின் முகப்புப் பக்கத்தில் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஸ்லென்டர் டபுள் லேயர் டே டைம் ரன்னிங் லைட் கொடுக்கப்பட்டுள்ளது. இது அழகாக க்ரிஸ்டர் அக்ரலிக் க்ரில் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் பக்கவாட்டில் இந்த கார் ஹைபிரிட் கார் என்பதற்கான பேட்ஜ்கள் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் Cவடிவ டெயில் லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது எல்இடி லைட்டாக வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் 7 சிங்கிள் டோன் மற்றும் 4 டூயல் டோன் கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

சர்ப்ரைஸ் . . . டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் விற்பனைக்கு அறிமுகம் . . . மைலேஜை வாரி வழங்கும் . . .

இந்த காரின் உட்புறத்தைப் பொருத்தவரை மாருதி நிறுவனம் செய்த அதே டேஷ்போர்டு டிசைனை தான் டொயோட்டா நிறுவனம் தனது ஹைரைடர் காரிலும் செய்துள்ளது. இதே டிசைன் பலேனோ, கிளான்ஸா மற்றும் புதிய பிரெஸ்ஸா காரிலும் பொருத்தப்பட்டுள்ளது. டொயோடா உட்புறத்திற்குக் கருப்பு மற்றும் பிரெளன் நிற தீமில் இந்தக் காரை வடிவமைத்துள்ளது.

சர்ப்ரைஸ் . . . டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் விற்பனைக்கு அறிமுகம் . . . மைலேஜை வாரி வழங்கும் . . .

இந்த கருப்பு மற்றும் பிரென் நிறம் புதுமையாக மட்டுமல்லாமல் வழக்கமான பேட்ஜ் நிறத்திற்கு ஒரு மாற்றாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கருப்பு மற்றும் பிரென் நிற காம்பினேஷன் ஸ்டிராங்க் ஹைபிரிட் காரில் மட்டும் வருகிறது. மைல்டு ஹைபிரிட் கார்கள் கருப்பு நிற தீமில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சர்ப்ரைஸ் . . . டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் விற்பனைக்கு அறிமுகம் . . . மைலேஜை வாரி வழங்கும் . . .

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் தான் மிட் சைஸ் எஸ்யூவி கார்களில் ஸ்டிராங் ஹைபிரிட் தொழிற்நுட்பத்தை கொண்ட முதல் காராகும். இந்த காரில் 1.5 லிட்டர் TNGA அட்கின்சன் சைக்கிள் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 92 எச்பி மற்றும் 122 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் இசிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்ல இதில் ஹைபிரிட்டாக எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 79எச்பி பவரையும் 141 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது இரண்டும் சேர்ந்து 114எச்பி பவரை மொத்தமாக வெளிப்படுத்தும்

சர்ப்ரைஸ் . . . டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் விற்பனைக்கு அறிமுகம் . . . மைலேஜை வாரி வழங்கும் . . .

ஸ்டிராங்க் ஹைபிரிட் சிஸ்டத்தை பொருத்தவரை 177.6வோல்ட் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். ஸ்டிராங்க் ஹைபிரட் கார் மைலேஜாக 27.97 கி.மீ மைலேஜ் தரும்.

சர்ப்ரைஸ் . . . டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் விற்பனைக்கு அறிமுகம் . . . மைலேஜை வாரி வழங்கும் . . .

மைல்டு ஹைபிரிட்டை பொருத்தவரை மாருதி சுஸூகி நிறுவனத்தின் பவர் டெரைன் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 1.5 லிட்டர் K15C இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதே இன்ஜின் தான் பிரெஸ்ஸா, எக்ஸ்எல்6, எர்டிகா ஆகிய கார்களிலும் இருக்கிறது. இந்த இன்ஜினை டொயோட்டா நியோ டிரைவ் என கூறுகிறது. இது 103 எச்பி பவர் 137என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும், இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வர்டர் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

சர்ப்ரைஸ் . . . டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் விற்பனைக்கு அறிமுகம் . . . மைலேஜை வாரி வழங்கும் . . .

மைல்டு ஹைபிரிட்டில் 5 ஸ்பீடு மேனுவல் வெர்ஷன் ஆல்வீல் டிரைவ் ஆப்ஷன் உடன் விற்பனையாகிறது. தற்போது இந்த மிட் சைஸ் எஸ்யூவி கேட்டகிரியில் இந்த ஒரு காரில் தான் ஆல்வீல் டிரைவ் ஆப்ஷன் இருக்கிறது. ஆனால் இது முதல் கார் அல்ல ரெனால்ட் டஸ்டர் காரில் இது போல ஆப்ஷன் இருந்தது. ஆனால் அந்த கார் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது.

சர்ப்ரைஸ் . . . டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் விற்பனைக்கு அறிமுகம் . . . மைலேஜை வாரி வழங்கும் . . .

இந்த கார் மொத்தம் 4 விதமான வேரியன்ட்களில் வெளியிடப்படுகிறது. E,S,G மற்றும் V என இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் மைல்டு ஹைபிரிட் இன்ஜின் இதில் எல்லா வேரியன்ட்களிலும் இருக்கிறது. ஆனால் ஸ்டிராங்க் ஹைபிரிட் இன்ஜின் S,G மற்றும் V ஆகிய கார்களிலும், அதிலும் ஆல்வீல் டிரைவ் V வேரியன்டில் மட்டும் விற்பனைக்கு வருகிறது.

சர்ப்ரைஸ் . . . டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் விற்பனைக்கு அறிமுகம் . . . மைலேஜை வாரி வழங்கும் . . .

இந்த டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரில் முக்கிய அம்சங்களாக பானரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கிறது. இந்த காருக்கான புக்கிங் ஏற்கனவே துவங்கிவிட்டது. ரூ25,000 முன்பணத்தில் இந்த காரை முன்பதிவு செய்ய முடியும்.

சர்ப்ரைஸ் . . . டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் விற்பனைக்கு அறிமுகம் . . . மைலேஜை வாரி வழங்கும் . . .

இந்த காருக்கு டொயோட்டா நிறுவனம் 3 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கி.மீ வரை வாரண்டியை வழங்குகிறது இதை 5 ஆண்டுகள் அல்லது 2.20 லட்சம் கி.மீ வரை நீட்டித்துக்கொள்ள முடியும். ஸ்டிராங்க் ஹைபிரிட் காரை பொருத்தவரை 8 ஆண்டுகள் அல்லது 1.60 லட்சம் கி.மீ வரை வாரண்டியை வழங்குகிறது.

சர்ப்ரைஸ் . . . டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் விற்பனைக்கு அறிமுகம் . . . மைலேஜை வாரி வழங்கும் . . .

டொயோட்டா நிறுவனம் இந்த காருக்கான விலைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி ரூ15.11 லட்சம் முதல் ரூ18.99 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வருகிறது. தற்போது டொயோட்டா நிறுவனம் ஸ்டிராங்க் ஹைபிரிட் கார்களுக்கான விலையையும் மைல்டு ஹைபிட்டில் ஆல்வீல் டிரைவிற்கான காரின் விலைகளை மட்டும் அறிவித்துள்ளது. மைல்டு ஹைபிரிட் கார்களில் மற்ற வேரியன்களின் விலை வெளியாகவில்லை.

சர்ப்ரைஸ் . . . டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் விற்பனைக்கு அறிமுகம் . . . மைலேஜை வாரி வழங்கும் . . .
Grade Name Price
V eDrive 2WD HYBRID ₹18,99,000
G eDrive 2WD HYBRID ₹17,49,000
S eDrive 2WD HYBRID ₹15,11,000
V AT 2WD NEO DRIVE ₹17,09,000
சர்ப்ரைஸ் . . . டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் விற்பனைக்கு அறிமுகம் . . . மைலேஜை வாரி வழங்கும் . . .

இதில் ஸ்டிராங் ஹைபிரிட்டை பொருத்தவரை S வேரியன்ட் ரூ15.11 லட்சம் என்ற விலையிலும், G வேரியன்டை பொருத்தவரை ரூ17.49 லட்சம் என்ற விலையிலும், V வேரியன்ட் 18.99 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு வருகிறது. இதில் V வேரியன்ட் ஆல்வீல் டிரைவ் ஆப்ஷன் உடன் வருகிறது. மைல்டு ஹைபிரிட் காரில் ரூ17.09 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த கார் ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் காரணம் இன்றி அறிமுகம் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இன்று திடீரென முன்னறிவிப்பு இன்று அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, September 9, 2022, 14:13 [IST]
English summary
Toyota urban cruiser hyryder car launched price spec and variant details
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+