டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதி அறிவிப்பு... எப்போனு தெரியுமா?

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மிட்-சைஸ் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதி அறிவிப்பு... எப்போனு தெரியுமா?

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் வெகு சமீபத்தில் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) காரை பொது பார்வைக்கு கொண்டு வந்தது. இது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாகும். இந்த சூழலில், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மிட்-சைஸ் எஸ்யூவி கார் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என்பது தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதி அறிவிப்பு... எப்போனு தெரியுமா?

இதன்படி டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மிட்-சைஸ் எஸ்யூவி கார் இந்திய சந்தையில் வரும் ஆகஸ்ட் 16ம் தேதி (August 16) முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மிட்-சைஸ் எஸ்யூவி காரின் உற்பத்தி பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்படவுள்ளன. கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் ஆலையில் இந்த கார் உற்பத்தி செய்யப்படவுள்ளது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதி அறிவிப்பு... எப்போனு தெரியுமா?

விரைவில் விற்பனைக்கு வரவுள்ள மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) மிட்-சைஸ் எஸ்யூவி காரும் இங்குதான் உற்பத்தி செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இதற்கிடையே வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைக்கப்படக்கூடிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் தற்போது இந்தியா முழுவதும் உள்ள டொயோட்டா ஷோரூம்களுக்கு வர தொடங்கியுள்ளன.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதி அறிவிப்பு... எப்போனு தெரியுமா?

அத்துடன் ஹைரைடர் மிட்-சைஸ் எஸ்யூவி கார்களுக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகளையும் டொயோட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. டொயோட்டா நிறுவனம் இந்த புதிய மிட்-சைஸ் எஸ்யூவி காருக்கு சவாலான விலை நிர்ணயத்தை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி இந்த காரின் ஆரம்ப விலை 9.50 லட்ச ரூபாயாக இருக்கலாம். அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 19 லட்ச ரூபாயாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதி அறிவிப்பு... எப்போனு தெரியுமா?

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மிட்-சைஸ் எஸ்யூவி காரில், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வசதிகளுடன் 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பெரிய எம்ஐடி உடன் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் பல்வேறு வசதிகள் வழங்கப்படவுள்ளன.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதி அறிவிப்பு... எப்போனு தெரியுமா?

E, S, G, மற்றும் V ஆகிய வேரியண்ட்களில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மிட்-சைஸ் எஸ்யூவி கார் கிடைக்கும். 7 சிங்கிள்-டோன் கலர் ஆப்ஷன்களும், 4 ட்யூயல்-டோன் கலர் ஆப்ஷன்களும் இந்த காரில் வழங்கப்படவுள்ளன. டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரில், 1.5 லிட்டர், K15C, ட்யூயல்-ஜெட், நான்கு-சிலிண்டர், மைல்டு-ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்படவுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 101 பிஹெச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்மில் 135 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதி அறிவிப்பு... எப்போனு தெரியுமா?

இதுதவிர 1.5 லிட்டர், டிஎன்ஜிஏ அட்கின்சன் சைக்கிள், ஸ்ட்ராங்-ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் தேர்வும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மிட்-சைஸ் எஸ்யூவி காரில் வழங்கப்படும். இந்த இன்ஜின் டிஹெச்எஸ் (THS - Toyota Hybrid System) தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதி அறிவிப்பு... எப்போனு தெரியுமா?

இதில், பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 91 பிஹெச்பி பவரையும், 122 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே நேரத்தில் எலெக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 79 பிஹெச்பி பவரையும், 141 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் திறன் வாய்ந்தது. இதன் ஒருங்கிணைந்த பவர் அவுட்புட் 114 பிஹெச்பி ஆகும். இதுபோன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் காரணமாகவே, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மிட்-சைஸ் எஸ்யூவி கார் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்துள்ளது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதி அறிவிப்பு... எப்போனு தெரியுமா?

இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கும் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) காருடன், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் போட்டியிடும். இதுதவிர கியா செல்டோஸ் (Kia Seltos), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun), எம்ஜி அஸ்டர் (MG Astor) மற்றும் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா காருக்கும் இது விற்பனையில் கடுமையான போட்டியை அளிக்கவுள்ளது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதி அறிவிப்பு... எப்போனு தெரியுமா?

இங்கே ஒரு விஷயத்தை குறிப்பிட்டாக வேண்டும். ஏற்கனவே விற்பனையில் உள்ள டொயோட்டா அர்பன் க்ரூஸர் மற்றும் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகிய 2 கார்களையும் ஒன்று என வாசகர்கள் குழப்பி கொள்ள கூடாது. இரண்டும் வெவ்வேறு கார்கள். டொயோட்டா அர்பன் க்ரூஸர் காரானது, சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. அதே நேரத்தில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 26, 2022, 16:22 [IST]
English summary
Toyota urban cruiser hyryder mid size suv official launch date
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+