தனியாக சார்ஜ் செய்ய தேவையில்லை... சூப்பரான 7 அம்சங்களுடன் விற்பனைக்கு வருகிறது டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்

டொயோட்டா அர்பன் க்ரூஸர் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) காரில் இடம் பெற இருக்கும் முக்கிய அம்சங்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம்.

தனியாக சார்ஜ் செய்ய தேவையில்லை... சூப்பரான 7 அம்சங்களுடன் விற்பனைக்கு வருகிறது டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்!

டொயெட்டா மற்றும் மாருதி சுஸுகி இரு நிறுவனங்களும் இணைந்து இந்திய சந்தைக்கான புதுமுக வாகனத்தை உருவாக்கும் பணியில் களமிறங்கியிருக்கின்றன. டொயோட்டா நிறுவனம் இந்த கூட்டணியின் கீழ் உருவாக்கியிருக்கும் புதுமுக காரை அர்பன் க்ரூஸர் ஹைரைடர் என்ற பெயரில் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் சமீப காலமாக காரின் டீசர் படம் மற்றும வீடியோக்களை அது வெளியிட்ட வண்ணம் இருக்கின்றது.

தனியாக சார்ஜ் செய்ய தேவையில்லை... சூப்பரான 7 அம்சங்களுடன் விற்பனைக்கு வருகிறது டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்!

வரும் ஜூலை 1ம் தேதி இக்கார் வெளியீட்டைப் பெற இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே காரின் பக்கம் மக்களை ஈர்க்கும் விதமாக டீசர் படங்கள் மற்றும் வீடியோக்களை டொயோட்டா வெளியிட்ட வண்ணம் இருக்கின்றது. இந்த டீசர் படங்களின் வாயிலாக புதுமுக அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரில் என்ன மாதிரியான சிறப்பு வசதிகள் இடம் பெற இருக்கின்றன என்பது தெரிய வந்திருக்கின்றது.

தனியாக சார்ஜ் செய்ய தேவையில்லை... சூப்பரான 7 அம்சங்களுடன் விற்பனைக்கு வருகிறது டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்!

இதுவரை, 7 முக்கிய அம்சங்கள் இடம் பெற இருப்பதை டொயோட்டா நிறுவனம் டீசர் படங்கள் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது. அவை என்னென்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

தனியாக சார்ஜ் செய்ய தேவையில்லை... சூப்பரான 7 அம்சங்களுடன் விற்பனைக்கு வருகிறது டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்!

எல்இடி ஹெட்லைட்டுகள், டிஆர்எல்கள் மற்றும் டெயில்லைட்டுகள்:

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரை அலங்கரிக்கும் விதமாக கவர்ச்சிகரமான தோற்றத்தில் எல்இடி லைட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. டொயோட்டா இதுகுறித்த டீசர் படத்தையே முதன் முதலில் வெளியிட்டது. இந்த படத்தின் வாயிலாக ஸ்பிளிட் ரக ஹெட்லேம்ப் ஹைரைடரில் இடம் பெற இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதுதவிர, எல்இடி ரக டிஆர்எல், டெயில் லைட் உள்ளிட்டவையும் ஹைரைடரில் இடம் பெற இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சங்களே ஹைரைடரை மிகவும் கவர்ச்சியான ஓர் வாகனமாக காட்சியளிக்க செய்திருக்கின்றது.

தனியாக சார்ஜ் செய்ய தேவையில்லை... சூப்பரான 7 அம்சங்களுடன் விற்பனைக்கு வருகிறது டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்!

ஹைரிபிரிட் பவர்டிரெயின்:

டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரில் வழங்க இருக்கும் மிக முக்கியமான சிறப்பம்சமாக ஹைபிரிட் தொழில்நுட்பம் இருக்கின்றது. இந்த அம்சம் இடம் பெற இருப்பதையும் டொயோட்டா நிறுவனம் டீசர் வாயிலாக உறுதிப்படுத்தியிருக்கின்றது. இந்த ஹைபிரிட் அம்சத்தை நாம் தனியாக சார்ஜ் செய்ய வேண்டியதில்லை. அதுவே காரின் இயக்கத்தின் வாயிலாக சார்ஜ் செய்து கொள்ளும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இதன் வாயிலாக கிடைக்கும் ரேஞ்ஜ் விபரம் பற்றிய தகவலை அது தெரிவிக்கவில்லை.

தனியாக சார்ஜ் செய்ய தேவையில்லை... சூப்பரான 7 அம்சங்களுடன் விற்பனைக்கு வருகிறது டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்!

அதேநேரத்தில் இரு விதமான தேர்வுகளில் இக்காரில் ஹைபிரிட் தொழில்நுட்பத்தை டொயோட்டா நிறுவனம் வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்துடன் கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் மோட்டார் மற்றும் எலெக்ட்ரிக் ஹைபிரிட் சிஸ்டத்துடன் கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் ஆகிய தேர்வுகளிலேயே அது கிடைக்க இருக்கின்றது.

தனியாக சார்ஜ் செய்ய தேவையில்லை... சூப்பரான 7 அம்சங்களுடன் விற்பனைக்கு வருகிறது டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்!

பிரீமியம் ட்யூவல் டோன் அலாய் வீல்கள்:

காரை முற்றிலும் கவர்ச்சியான தயாரிப்பாக காட்டும் விதமாக டொயோட்டா நிறுவனம் புதிய அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரில் ட்யூவல் டோன் அலாய் வீல்களை வழங்கியிருக்கின்றது. டொயோட்டா ஹைரடர் அதிக பிரீமியம் வசதிகள் கொண்ட காராக இருப்பதற்கு சான்றாக இந்த ஸ்டைலிஷான வீல் உள்ளது. அதேநேரத்தில் காரின் டிசைனும் மிகவும் அட்டகாசமானதாக உள்ளது.

தனியாக சார்ஜ் செய்ய தேவையில்லை... சூப்பரான 7 அம்சங்களுடன் விற்பனைக்கு வருகிறது டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்!

9 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்:

டொயோட்டா நிறுழனம் புதிய அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரில் ஃப்ரீ ஸ்டாண்டிங் ரக 9 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை வழங்க இருக்கின்றது. கிளான்ஸா காரிலும் இதுமாதிரியான ஓர் அம்சமே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கருவி ஸ்மார்ட் ப்ளே-காஸ்ட் ப்ரோ (Smart Playcast Pro) சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய அம்சங்களைக் கொண்டது குறிப்பிடத்தகுந்தது.

தனியாக சார்ஜ் செய்ய தேவையில்லை... சூப்பரான 7 அம்சங்களுடன் விற்பனைக்கு வருகிறது டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்!

கார் இணைப்பு தொழில்நுட்பம்:

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஹைபிரிட் காரில் 'கார் இணைப்பு' தொழில்நுட்ப வசதியும் வழங்கப்பட இருக்கின்றது. டொயோட்டா ஐ-கன்னெக்ட் எனும் பெயரின்கீழ் இந்த அம்சம் வழங்கப்பட இருக்கின்றது. இந்த அம்சத்தையும் நம்மால் டொயோட்டா கிளான்ஸா காரில் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், கிளான்ஸாவில் இருப்பதைக் காட்டிலும் அதிக சிறப்பு வசதிகள் கொண்டதாக ஹைரைடரில் இது காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தனியாக சார்ஜ் செய்ய தேவையில்லை... சூப்பரான 7 அம்சங்களுடன் விற்பனைக்கு வருகிறது டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்!

ஆட்டோமேட்டிக் டெம்ப்ரேச்சரை ரிமோட் வாயிலாக கன்ட்ரோல் செய்யும் வசதி:

டொயோட்டா நிறுவனம் இரண்டாவதாக வெளியிட்ட டீசர் வீடியோ புதிய அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரில் தானியங்கி கன்ட்ரோல் சிஸ்டம் இடம் பெற இருப்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றது. இதே வசதியை கிளான்ஸா காரிலும் நம்மால் பார்க்க முடியும். இதனை கார் இணைப்பு வசதியின் வாயிலாக டொயோட்டா வழங்குகின்றது. இதன் மூலம் கார் உரிமையாளர்கள் ரிமோட் வாயிலாகவே க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டத்தை கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும்.

தனியாக சார்ஜ் செய்ய தேவையில்லை... சூப்பரான 7 அம்சங்களுடன் விற்பனைக்கு வருகிறது டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்!

லெதர் போர்த்தப்பட்ட டேஷ்போர்டு:

அர்பன் க்ரூஸர் ஹைரைடர் பிரீமியம் தர கார் என்பதை தொடர்ச்சியாக உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கின்றது, டொயோட்டா. நிறுவனம் அதன் டீசர் வீடியோ வாயிலாக உறுதிப்படுத்திய தகவல்களில் ஒன்றே காரின் டேஷ்போர்டு லெதர் போர்த்தியவாறு வரவிருப்பது உள்ளது. இந்த சி-செக்மெண்ட் எஸ்யூவி காரின உட்பகுதியில் இன்னும் பல சிறப்பம்சங்கள் இடம் பெற இருக்கின்றன. அந்தவகையில், ஹெக்ஸோகனல் ஏசி வெண்ட்ஸ், சில்வர் நிறத்திலான இன்செர்டுகள் உள்ளிட்டவையும் இடம் பெற இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 28, 2022, 16:16 [IST]
English summary
Toyota urban cruiser hyryder s top 7 features list
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+